Run World Media: August 2018

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, August 31, 2018

பாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...! Snake business


பாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...!

ஆடு வளர்ப்பு,
கோழி வளர்ப்பு போல் பாம்பு வளர்ப்பும் ஒரு மிகப்பெரிய தொழிலாக தற்போது உருவெடுத்து வருகிறது.


குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் ஒரு தொழிலாகவும் கருநாக வளர்ப்பு வளர்ச்சியடைந்துவருகிறது.

‘ சிநேக் இந்தியா பார்ம் ’
என்ற பெயரில் தமிழகத்தில் கருநாக வளர்ப்பு தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த பாலா இதுபற்றி எழுதியுள்ள கட்டுரை:

நான் இந்த பாம்பு பண்ணையை 2009-ம் ஆண்டு 5 ஜோடி குட்டிகளுடன் தொடங்கினேன்.

ஆரம்பத்தில் நிறைய தடுமாற்றங்களை சந்தித்தேன்.

பிறகு இது தொடர்பாக நிறைய பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின் இதை எப்படி வெற்றிகரமாகச் செய்வது என்ற தெளிவைப் பெற்றேன்.

அதை பின்பற்றியதிலிருந்து மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருமானமாக பெற முடிகிறது.

இன்று தமிழகம் முழுவதிலும் பலர் இதுபற்றிய விவரங்களை பெற்று பாம்பு பண்ணை தொடங்க ஆலோசனை கேட்ட வண்ணம் உள்ளனர்.

பண்ணை வைக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு எனது பண்ணையிலிருந்தே குட்டிகளை தந்து உதவுகிறேன்.

இதற்கு ஆகும் செலவு

5 ஜோடி பாம்பு குட்டிகள் ரூ.10,000,

25 வெள்ளை எலிகள் (தீவனம்) ரூ.2,000,

கொட்டாய் செலவு ரூ.10,000,

பாம்பு முட்டையை பொரிக்க உதவும் இன்குபேட்டர் ரூ.60,000

ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் ஆறே மாதங்களில் 5 லட்ச ரூபாய்வரை வருமானம் பெற வாய்ப்பு உள்ளது.

குட்டிகளைத் தேர்வு செய்யும் முறை:

குட்டிகளுக்கு பார்வைத் திறனும், கேட்கும் திறனும் உள்ளதா, நல்ல கடிக்கும் திறன் உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.
3 மாதத்துக்கு மேல் உள்ள குட்டிகளை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம்.
ஏனென்றால் அப்போதுதான் அவை அதிகமாக இறக்காது.
குட்டிகளை வெயில் படாத இடமாக பார்த்து வளர்க்க வேண்டும்.
5 ஜோடி பாம்புகள் வளர்ந்த பின் ஒவ்வொரு ஜோடியில் இருந்தும் மாதத்துக்கு 200 மில்லி விஷம் கிடைக்கும்.


1 லிட்டர் பாம்பு விஷத்தின் இன்றைய சர்வதேச விலை ரூ.1 லட்சம்.

ஒவ்வொரு பாம்பும் தன் வாழ்நாளில் 20 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும்.
இந்த ஐந்து ஜோடி பாம்புகளே 200 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும்.
இதன் மூலம் 2 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

மேலும் ஒவ்வொரு ஜோடி பாம்பும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை 30 முட்டைகள் வரை இடும்.
அவற்றை இன்குபேட்டரில் வைத்து பராமரித்தால் வருடத்துக்கு 4 முறை என்று ஆண்டொன்றுக்கு 600 பாம்பு குட்டிகள் கிடைக்கும்.

அவற்றை விற்பனை செய்வதன் மூலம் ரூ.60 லட்சம் சம்பாதிக்கலாம்.

கேட்கவே தலை சுற்றுகிறதா?
இது தவிர பாம்பின் தோல், மாமிசம் ஆகியவற்றையும் நல்ல விலைக்கு விற்கலாம்.


ஆகவே குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபத்தை பெற எங்களை அணுகுங்கள்.
நிறைய பணத்தை அள்ளுங்கள்.

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

வண்டுமுருகன்

A12/219,விவேகானந்தர் தெரு,

துபாய் குருக்கு சந்து,

துபாய் மெயின்ரோடு,

துபாய்.

(ஸ்ஸப்ப்பாப்ப்ப்பபா... உங்களை நம்ப வைக்க எவ்வளவெல்லாம் எழுத வேண்டி இருக்கு

பின்குறிப்பு:

ஒட்டக முட்டையை பொரிப்பது பற்றி அடுத்த கட்டுரை வெளியாகும்.
அதையும் தெரிந்துகொண்டு லட்சக்கணக்கில் பணத்தை அள்ளுங்கள்.

அப்ரம்...நோ ...திட்டப்டாதுஉ..சிரிச்சுட்டு  போஸ்டை காப்பி ஷேர் ஏதோ ஒண்ணு பண்ணவேண்டியதுதான் ஓகேய்.

எனக்கு நிறைய ஜோலி இருக்கு.....
ஆன்  திஸ் டே அலப்பறைகள் 😜 😜 😜 😜 😜 😜

எதற்கெடுத்தாலும் வேலையை தள்ளிப்போடுபவரா நீங்கள்? - காரணம் இதுதான்


ஒரு வேலையை தள்ளிபோடுவதா அல்லது உடனடியாக செய்து முடிப்பதா என்பது உங்களது மூளை எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்து அமைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஒரு குறிப்பிட்ட வேலையை நாம் உடனடியாக செய்வதையும் அல்லது தொடர்ந்து பலமுறை வேண்டுமென்றே தள்ளிபோடுவதையும் நமது மூளையிலுள்ள இரண்டு பகுதிகள் தீர்மானிக்கின்றன என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

264 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பு மற்றும் மூளைகளின் ஸ்கேன்களை கொண்டு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு விடயத்தை உடனே முடிப்பதும், தள்ளிப்போடுவதும் ஒருவரது நேர மேலாண்மையைவிட உணர்ச்சியை கட்டுப்படுத்துவதை பொறுத்து அமைவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரிய துப்பு
ஒருவரது உணர்ச்சி மற்றும் ஊக்கத்தை கட்டுப்படுத்தும் வேலைகளை மேற்கொள்ளும் மூளையிலுள்ள அமிக்டாலா என்னும் பாதாம் கொட்டை வடிவிலான பகுதி பெரியதாக உள்ளவர்களே வேலையை தள்ளிப்போடுவது தெரியவந்துள்ளது.
இதுபோன்ற அமைப்பை பெற்றுள்ளவர்களின் அமிக்டாலாவுக்கும், மூளையின் மற்றொரு பகுதியான டொர்சல் அன்டெரியர் சிங்குலேட் கோர்டேஸுக்கும் (டிஏசிசி) இடையிலான பிணைப்பு சரியாக இருக்காததும் மற்றொரு காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அமிக்டாலா அளிக்கும் தகவல்களை பெறும் டிஏசிசிதான் உடல் எவ்விதமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. ஒருவரது உணர்ச்சி, கவனச்சிதறலை தடுப்பதன் மூலம் அந்த நபரை சரியான பாதையில் வைத்திருக்க இது உதவுகிறது.

"பெரிய அமிக்டாலாவைக் கொண்ட நபர்கள் ஒரு நடவடிக்கையின் எதிர்மறையான விளைவுகளைப் பற்றி அதிகம் ஆர்வமாக இருப்பதுடன், ஒரு விடயத்தை செய்வதற்கு தயங்குவதுடன், அதை கிடப்பில் போடுகிறார்கள்" என்று கூறுகிறார் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட குழுவில் இடம்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவரான ருஹ்ர் பல்கலைக்கழக பேராசிரியர் எர்ஹன் ஜின்க்.
ஒரு வேலையை திறனுடன் உடனடியாக செய்து முடிப்பவர்களை விட, அதை தள்ளிப்போடுபவர்களின் மூளையிலுள்ள அமிக்டாலா - டிஏசிசி இடையிலான பிணைப்பு மோசமாக உள்ளதே காரணமே என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மூளையை கட்டுப்படுத்துங்கள்
இதுகுறித்து கடந்த ஒரு தசாப்தகாலத்திற்கும் கனடாவின் ஒட்டாவாவிலுள்ள கார்லெட்டோன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் டிம் பிய்ச்சில், ஒரு விடயத்தை உடனே முடிப்பதும், தள்ளிப்போடுவதும் ஒருவரது நேர மேலாண்மையைவிட உணர்ச்சியை கட்டுப்படுத்துவதை பொறுத்து அமைவதாக நம்புகிறார்.

எதற்கெடுத்தாலும் வேலையை தள்ளிப்போடுபவரா நீங்கள்? - காரணம் இதுதான்படத்தின் காப்புரிமைISTOCK

"இந்த ஆராய்ச்சி மூளை உணர்ச்சி மையங்கள் ஒரு நபரின் சுய கட்டுப்பாட்டு திறனை எப்படி மூழ்கடிக்கிறது என்பதை காட்டுகிறது" என்று அவர் கூறுகிறார்.
முறையான தியானம் மற்றும் கட்டுப்பாடுகளின் மூலம் அமிக்டாலா அளவை குறைத்து, அமிக்டாலா - டிஏசிசி இடையிலான பிணைப்பை உறுதியாக்குவது சாத்தியமானது என்பதை இதற்கு முந்தைய ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளதாக அவர் மேலும் கூறுகிறார்.

வேலையை தள்ளிப்போடுபவர்களுக்கான குறிப்புகள்
நம்மை நாமே ஊக்கப்படுத்தும் வழிகளை பின்பற்றுவதன் மூலம் தினசரி வாழ்க்கையில் மாற்றத்தை காண முடியுமென்று கூறுகிறார்.
அவரது சில குறிப்புகள்:
உங்களுக்குள்ள வேலை ஒன்றிற்கு குறிப்பிட்ட காலக்கெடு இல்லையென்றால், அதை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள்.
நீங்கள் செய்யவேண்டிய விடயங்களை அப்படியே எழுதாமல், சிறுசிறு வேலைகளாக பிரித்து குறித்துக்கொள்ளுங்கள். இது வேலைகளை குழப்பமின்றி, எளிதாக மேற்கொள்வதற்கு உதவும்.


எதற்கெடுத்தாலும் வேலையை தள்ளிப்போடுபவரா நீங்கள்? - காரணம் இதுதான்படத்தின் காப்புரிமைISTOCK

உங்களது அலைபேசி/ கணினியில் வரும் அறிவிப்புகளை (நோட்டிபிகேஷன்) ரத்து செய்துவிடுவதன் மூலம் தேவையற்ற கவனச்சிதறல்களை தவிர்க்க முடியும்.
"பிஸியாக" இருப்பது நாம் செய்ய தவிர்க்கும் காரியத்தை செய்வதைவிட எளிமையானது. எதற்கெடுத்தாலும் உங்களுக்கு நேரமில்லை என்று கூறுவதை விடுத்து, உங்களுக்கு இருக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்துகிறீர்களா என்பது குறித்து சுய ஆய்வொன்றை மேற்கொள்ளுங்களேன்!


Thursday, August 30, 2018

இந்தியாவில் ஆபாசப் படத்துறையை அனுமதிக்க வேண்டுமா? - சன்னி லியோனி பேட்டி


சன்னி லியோனி பற்றிய இணையதள தொடரான 'கரஞ்சித் கௌரில்' வரும் ஒரு காட்சியில் பத்திரிகையாளர் ஒருவர், சன்னி லியோனிடம் "ஆபாசப்பட நடிகைக்கும், பாலியல் தொழிலாளிக்கும் என்ன வேறுபாடு?" என்று கேட்டார்.

"இரண்டுக்கும் தைரியம் என்ற ஒற்றுமை உள்ளது" என்று சன்னி லியோனி பதிலளித்திருந்தார்.
நான் சன்னி லியோனியை மும்பையிலுள்ள ஒரு ஓட்டலில் நேர்காணலுக்காக சந்தித்தபோது, அவரிடம் உள்ள அந்த 'தைரியத்தை' அவரது நடை, முகம், பதில்களின் மூலம் காண முடிந்தது.
அப்போது அந்த இணையதள தொடருக்கான நேர்க்காணலை படம்பிடிப்பது சவாலானதாக இருந்ததாக அவர் என்னிடம் கூறினார்.
"அந்த பத்திரிகையாளர் கேட்ட கேள்விகள் மிகவும் மோசமானதாக இருந்ததால், நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். ஆனால், இதை மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்து காத்திருந்ததால்தான் அந்த கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன்" என்று சன்னி லியோனி கூறினார்.


தொடர்ந்து ஐந்தாவது வருடமாக இந்தியாவில் இணையதளத்தில் மிகவும் தேடப்பட்ட நபராக சன்னி உள்ளார். பெரும்பாலான மக்கள் சன்னி லியோனியை பார்ப்பதற்கும், அவரை பற்றி தெரிந்துகொள்வதற்கும் விரும்பினாலும், அவரைப் பற்றிய தங்களது எண்ணத்தை மக்கள் ஏற்கனவே மனதில் வரைந்துவிட்டார்கள்.
மக்களிடையே இதுபோன்ற எண்ணம் உருவாவதற்கு தானே காரணம் என்று சன்னி நம்புகிறார்.

"என்னைப் பற்றியும், நான் என்ன நினைக்கிறேன் என்பது பற்றியும் நான் நேர்மையாக இருக்கிறேன். ஆனால், மக்கள் என்னுடைய கடந்த காலத்தை தொடர்புப்படுத்தி மட்டுமே என்னை பார்க்கிறார்கள். மக்களிடையே அது போன்ற எண்ணம் உருவாவதற்கு நான்தான் காரணம் என்று நம்புறேன். இருப்பினும் ஒவ்வொரு தனி நபரும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் பரிணமிக்கிறார்கள், அதை மக்கள் உணருவார்கள் என்று நம்புகிறேன்."
தொடக்கத்தில் பாலிவுட் திரைப்படங்களில் "குத்தாட்டப் பாடலில்" நடித்த சன்னி, தற்போது சில திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் தனது சொந்த வாசனை திரவிய தயாரிப்பான 'தி லஸ்ட்' ஐ (இச்சை என்று பொருள் தரும் சொல்) அவர் அறிமுகப்படுத்தினார்.


வாசனை திரவிய தயாரிப்புக்கு வைக்கப்பட்டுள்ள பெயர், அவரைப் பற்றிய கடந்தகால எண்ணத்தை மக்களிடையே மீண்டும் ஏற்படுத்துமா என்று அவரிடம் கேட்டேன்.
அதை மறுத்த சன்னி, தனது வயதில் வாசனை திரவியத் தயாரிப்பை அறிமுகப்படுத்துவது என்பது ஒவ்வொரு பெண்ணின் கனவு என்றும், தனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தபோது, இந்த பெயரையே தான் விருப்பியதாகவும் அவர் கூறினார்.
"செடுஷன் அல்லது ஃப்யர், ஐஸ் போன்ற பெயர்களைத்தான் மற்ற தயாரிப்பாளர்களும் பயன்படுத்துகின்றனர்" என்று அவர் கூறினார்.
சன்னி லியோனியின் இயற்பெயர் கரஞ்சித் கௌர் ஆகும்.
ஆபாசப்பட திரையில் பணியாற்றிய சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்று படத்தின் தலைப்பில் 'கௌர்' என்ற வார்த்தை இடம் பெறுவதற்கு தீவிர சீக்கிய மத அமைப்பான, ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி (SGPC), அது சீக்கிய மதத்தின் முக்கிய வார்த்தைக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறியதுடன், எதிர்ப்பும் தெரிவித்தது.
இது குறித்து சன்னியிடம் கேட்டதற்கு, அந்த பெயரை தனது பெற்றோர்கள் சூட்டியதாகவும், இதே பெயர்தான் தனது கடவுச்சீட்டில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

"எப்போதுமே என்னுடைய உண்மையான பெயர் கரஞ்சித் கௌர்தான். சன்னி என்ற பெயரை நான் செய்யும் தொழிலுக்காக மட்டும்தான் பயன்படுத்தினேன்" என்று மேலும் கூறினார்.
தான் ஆபாசப்படத் துறையில் பணியாற்றியதற்கு சன்னி லியோன் என்றுமே வெட்கப்பட்டதில்லை. மேலும், தானே விருப்பப்பட்டு அதை தேர்ந்தெடுத்ததாக அவர் பல முறை கூறியுள்ளார்.
தனிப்பட்ட முறையில் ஆபாசப்படங்களை பார்ப்பதற்கு இந்தியாவில் தடையேதும் இல்லை. ஆனால், ஆபாசமான உள்ளடக்கத்தை தயாரிப்பதற்கும்/ பகிர்வதற்கும் சட்டரீதியாக தடை உள்ளது.
உலகிலேயே ஆபாசப்படத்தை அதிகம் பார்ப்பவர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன், கனடாவுக்கு அடுத்து இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளதாக பிரபல ஆபாசப்பட இணையதளமான போர்ன்ஹப் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஏன் ஆபாசப்படத் துறை அனுமதிக்கப்பட வேண்டும்?
சற்றும் யோசிக்காத சன்னி, "இதில் நான் முடிவெடுப்பதற்கு ஒன்றுமில்லை. இந்திய அரசாங்கமும், அதன் மக்களும்தான் தங்களுக்கு எது வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்" என்று பதிலளித்தார்.
ஆபாசப்படத்துறை பாலியல் உறவு சார்ந்த உரையாடல்களை இயல்பாக்க உதவுகிறதா? அமெரிக்காவில் இதுகுறித்த உங்களது அனுபவம் என்ன?
தனது தேர்வு எவர் மீதும் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட கூடாது என்றும், சமூகத்தின் கருத்து குடும்பங்களாலும், ஒரு பெண்ணின் கருத்து அவரை அவர்களது பெற்றோர் வளர்க்கும் விதத்தை பொறுத்தும் அமைகிறது என்றும் அவர் கூறினார்.
ஆபாசப்படத்துறையில் இணையும் சன்னியின் முடிவுக்கு அவரது பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால், தனது பெற்றோர் தன்னை ஒரு சுதந்திரமான பெண்ணாக வளர்த்ததனால்தான் தன்னால் சுயமாக முடிவுகளை எடுக்கமுடிந்தது என்று நம்புவதாக சன்னி லியோன் கருதுகிறார்.

தற்போது சன்னிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்த சன்னி லியோன், இரண்டு ஆண் குழந்தைகளை வாடகைத்தாயின் மூலம் பெற்றெடுத்தார்.
உங்களது குழந்தைகள் அவர்களது வாழ்க்கையில் சுயமாக முடிவுகளை எடுப்பதற்கு சுதந்திரம் அளிப்பீர்களா?
"கண்டிப்பாக, அவர்கள் அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றும், செவ்வாய் கிரகத்துக்கு செல்லவேண்டுமென்றும் நான் விரும்புகிறேன். ஆனால், தங்களது வாழ்க்கையில் முடிவுகளையும், பயணத்தையும் அவர்களாகவே தேர்ந்தெடுக்க வேண்டும்" என்று அவர் பதிலளித்தார்.
எனது கடைசி கேள்வி கிட்டத்தட்ட மிகவும் சங்கடமானது. சன்னி லியோனை பற்றி கரஞ்சித் கௌர் பதில் அளிக்கும் வகையில் அந்த கேள்வி இருந்தது.

உங்களது கடந்தகால தொழிலை பற்றி உங்களது குழந்தைகளிடம் விளக்க முடியுமா?
சன்னி அந்த கேள்வியை விரும்பவில்லை. ஆனால், சிந்தனை அவரது மனதை கடந்துபோனது போல் இல்லை.
அவரது கடந்தகால வாழ்க்கை முடிவுகளின் வீழ்ச்சி மற்றும் அதன் காரணமாக மக்களின் மனதில் உருவான மனப்பான்மை, உருவம் ஆகியவற்றைக் கொண்டு அவர் வாழ்வது அவ்வளவு எளிதானது அல்ல.
ஆனால், தனது அதே தைரியத்துடன், 'என்னுடைய பொதுவான கவலைகளில் தற்போது அது இல்லை' என்று சன்னி லியோன் கூறினார். நீண்டகாலமாக தாயாவதன் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அவர், தற்போது அந்த அனுபவத்தின் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து வருகிறார்.
மேலும், சரியான நேரம் வரும்போது, தனது வாழ்க்கையை பற்றி குழந்தைகளிடம் நேர்மையாக இருப்பேன் என்றும் அவர் கூறினார்.

Wednesday, August 29, 2018

‘என்னை தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்’ - பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் கதறி அழுத பேராசிரியர் Nirmaladevi latest newsஅருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள உதவிப் பேராசிரியர் முருகன், சிறையில் அடைத்து வைத்து தற்கொலைக்குத் தூண்டி எனது வாழ்க்கையை முடிக்கப் பார்க்கிறார்கள் என நீதிமன்ற வளாகத்தில் கதறினார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி."அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாகப் பணிபுரிந்தவர் நிர்மலாதேவி. இவர் மொபைல் போனில் மாணவிகளிடம் பாலியல்ரீதியில் பேசியதாக ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார்.இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை காமராசர் பல்கலைக்கழக மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய முருகன், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த வழக்கு விசாரணை விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெறுகிறது.

நீதிமன்றக் காவல் நீட்டிப்புக்காக நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் விருதுநகர் 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேற்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களது காவலை செப்டம்பர் 11-ம் தேதி வரை நீட்டித்து நீதித்துறை நடுவர் திலகேஸ்வரி உத்தரவிட்டார். ஆனால், அன்றைய தினம் இமானுவேல் சேகரன் நினைவு தினம் என்பதால் போலீஸார் பாதுகாப்புப் பணிக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையை நீதித் துறை நடுவரிடம் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து செப்டம்பர் 10-ம் தேதி வரை 3 பேருக்கும் காவல் நீட்டிப்பு செய்து நீதித் துறை நடுவர் திலகேஸ்வரி உத்தரவிட்டார்.

பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த முருகனை அவரது தாய் சோலையம்மாள், சகோதரி ஆகியோர் சந்தித்து கதறி அழுதனர். அப்போது, தான் குற்றம் செய்யவில்லை. சாமியை வேண்டிக் கொள்ளுங்கள் என்றார். மேலும், "நான் 120 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். இது மனித உரிமை மீறல். நான் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க எனக்கு நீதிமன்றத்தில் வாதாட வாய்ப்பு வழங்க வேண்டும். சிறையில் என்னை அடைத்து வைத்து தற்கொலைக்குத் தூண்டி எனது வாழ்க்கையை முடிக்கப் பார்க்கிறார்கள்" என ஆவேசத்துடன் கூறினார். இதனால், விருதுநகர் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து மூவரும் மதுரைக்கு அழைத்துச் செல்லப் பட்டு மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.


Thursday, August 23, 2018

மாணவியை கர்ப்பிணியாக்கிய ஆசிரியர் நிர்வாண ஊர்வலம்ஆந்திராவில், 10ம் வகுப்பு மாணவியை, இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய ஆசிரியரை, உள்ளூர் மக்கள் அடித்து, உதைத்து, நிர்வாணமாக சாலையில், ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். 

ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில், எலுரு நகரை சேர்ந்தவர், ராம்பாபு, 38. இவர், அங்குள்ள பள்ளியில், ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை, ராம்பாபு, இரு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது. சமீபத்தில் அந்த மாணவி கர்ப்பம் ஆனார். இதையடுத்து, கர்ப்பத்தை கலைக்க, அந்த மாணவிக்கு, கருக்கலைப்பு மாத்திரைகளை ராம்பாபு கொடுத்துள்ளார். Car, watch, jewelry, dress, bike, health, loan, job

Wednesday, August 22, 2018

கம்யூ.,தலைவர் தா.பாண்டியன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - T.Pandiyan was admitted in Hospital

கம்யூ.,தலைவர் தா.பாண்டியன் உடல் நல குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கம்யூ தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன் கடந்தசில தினங்களுக்கு முன்னர் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 


அவரை முதல்வர் பழனிசாமி, தி.மு.க, செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். இந்நிலையில் தா.பாண்டியனுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகி்ச்சைக்காக மீண்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tuesday, August 21, 2018

கேரளாவை கலக்கும் தற்காலிக 'பவர் பேங்க்' - Kerala's special temporary emergency flood power bank


   இன்ஜினியரிங் மாணவர்கள் உருவாக்கிய, 'எமர்ஜென்சி பவர் பேங்க்' வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.


   கேரள மக்களுக்கு தற்போதைய உடனடி தேவையாக, தகவல் தொடர்பு வசதி தான். ஆனால், வெள்ளத்தால் சூழப்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்களின் மொபைல் போன்கள், 'சார்ஜ்' இல்லாமல் செயல் இழந்து விட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் கேரள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

   திருவனந்தபுரத்தில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள், 'இன்ஸ்பையர்' என்ற பெயரில் ஒரு குழுவை நடத்தி வருகின்றனர். இந்த குழுவினர் 20 சதவீத சார்ஜ் ஏற்றும் எமர்ஜென்சி பவர் பேங்க்குகளை உருவாக்கி உள்ளனர்.


   கடந்த சனிக்கிழமை, இந்த பவர் பேங்க்குகளை ஹெலிகாப்டர்களில் இருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள் வீசியுள்ளனர். அவற்றை மக்கள் பயன்படுத்த துவங்கி உள்ளனர். இக்கட்டான சூழ்நிலையில் இன்ஜி., மாணவர்கள் செய்த உதவியை கேரள மக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். முதல்கட்டமாக, 100 பவர் பேங்க்குகளை மாணவர்கள் தயாரித்தனர். மேலும், 200 பவர் பேங்க்குகளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Sunday, August 19, 2018

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை முழுவதும் படிக்க.


கனமழை : வால்பாறை தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு


நிவாரணப்பொருள் அனுப்ப ரயிலில் கட்டணம் இல்லைகேரளாவுக்கு ரயிலில் அனுப்பும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டணம் கிடையாது' என ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்துள்ளார்.ரயில்வே அமைச்சர் பியுஷ்கோயல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 'இந்தியா முழுவதும் இருந்து கேரளாவுக்கு ரயிலில் அனுப்பும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது' என கூறியுள்ளார். மேலும் கேரளாவில், எம்.எம்.எஸ்., மற்றும் இணைய வசதியை பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பி.எஸ்.என்.எல்., சார்பில் நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்களுக்கு இலவச 'வாய்ஸ் கால்' அனைத்து நெட்வொர்க்கிற்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு லாரி மணல் ரூ.35 ஆயிரம் வெள்ளத்தால் மேலும் உயரும்?ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மணல் தட்டுப்பாடு அதிகரித்து, ஒரு லாரி மணல், 35 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது. தொடர் வெள்ளத்தால், இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.கடந்த மாதம் வரை, திருச்சியில் மட்டுமே அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. அங்கிருந்து, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் முழுவதும் மணல் விற்பனை செய்யப்பட்டது. 


 

ஆன் - லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு, 40 நாட்களுக்கு பின், எஸ்.எம்.எஸ்., மூலம், லாரியுடன் வந்து மணலை பெற்றுச் செல்லுமாறு குறுந்தகவல் அனுப்பப்படும்.அந்த, எஸ்.எம்.எஸ்., தகவலை திருச்சி மணல் விற்பனை யார்டில் காண்பித்து, லாரிகளில் மணலை எடுத்து வர வேண்டும். தினமும், 150 - 200 லாரிகளுக்கு மட்டுமே மணல் கிடைக்கும். ஆனால், ஆன் - லைனில் தினமும், 10 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்து காத்திருப்பர். பதிவு செய்து குறைந்தபட்சம், 45 நாட்களுக்கு பிறகே கிடைக்கும். 2 யூனிட் அளவு கொண்ட ஒரு லாரி மணல், 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.இதனால், மணல் வியாபாரத்தை நம்பி இருந்த பலரும் ஏமாற்றமடைந்து, மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர்.
 

 மணல் தேவையை கருத்தில் கொண்டு, மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டை கிராமத்தில் அரசு மணல் குவாரிக்கு அனுமதிஅளிக்கப்பட்டது. இங்கிருந்து, சிவகங்கை அருகே உள்ள காயாங்குளம் கிராமத்திற்கு கொண்டு சென்று, அங்கிருந்து, ஆன் - லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
 

மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் மணல் லோடு கேட்டு, ஆன் - லைனில் முன்பதிவு செய்ய துவங்கினர்.ஆனால், கிராம மக்கள் எதிர்ப்பு காரணமாக குவாரி திறக்கப்படவில்லை. தற்போது வைகை தவிர மற்ற அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரியில் செயல்பட்டு வந்த, மணல் குவாரியும் மூடப்பட்டுவிட்டது.வைகை அணையின் நீர்மட்டம், 65 அடியை கடந்து விட்டதால், இன்று முதல் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தெ.புதுக்கோட்டை குவாரியும் செயல்பட வாய்ப்பில்லை. ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருந்த மணல் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என்பதால் மணல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.சிவகங்கை மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர், செந்தில் கூறியதாவது:இதுவரை ஒரு லாரி மணல்,25 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. ஆவணி பிறந்து கட்டடப்பணிகள் துவங்கும் நிலையில் அரசு குவாரிகளில் மணல் இல்லை. இருக்கும் மணல் லோடு, 35 ஆயிரத்திற்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க.,வுடன் கூட்டணி: விரும்புது பா.ஜ.க., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்


 

வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற, பா.ஜ., மேலிடம் விருப்பம் தெரிவித்துள்ளது. தி.மு.க., தரப்பில், இன்னும், 'கிரீன் சிக்னல்' தரப்படவில்லை.  
இதனால், 'மாஜி' மத்திய அமைச்சர் அழகிரியை, பகடைக்காயாக பயன்படுத்தி, தி.மு.க.,விற்கு நெருக்கடி கொடுக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தி.மு.க., தலைவர் கருணாநிதி, உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதும், 'அவருக்கு வேண்டிய உதவிகள் செய்ய தயாராக உள்ளோம்' என, பிரதமர் மோடி அறிவித்தார்.

நாளைய மின் தடை - 20.08.2018 - Tomorrow Power Shutdown

காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரைஅரியலுார் துணை மின் நிலையம்: அரியலுார், அத்தியூர், தொழுவந்தாங்கல், கடுவனுார், பெரியக்கொள்ளியூர், வடமாமாந்துார், ஈருடையாம்பட்டு, சின்னக்கொள்ளியூர், அருளம்பாடி
 சுத்தமலை, ஓடியந்தல், வாணாபுரம், சீர்ப்பனந்தல், இளையனார்குப்பம், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, பகண்டைகூட்ரோடு, மரூர், கடம்பூர், மையனுார், ஏந்தல், பெரியபகண்டை ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது

Saturday, August 18, 2018

Biodata of Nethaji Subhas Chandra Bose - History of Nethaji Subhas Chandra Bose - Basic Details of Nethaji Subhas Chandra Bose - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்கை குறிப்பு

Biodata of Nethaji Subhas Chandra Bose - History of Nethaji Subhas Chandra Bose - Basic Details of Nethaji Subhas Chandra Bose -  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்கை குறிப்பு

பெயர்
:
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
இயற்பெயர்
:
சுபாஷ் சந்திரபோஸ்
பிறந்த தேதி
:
23-01-1897
பிறந்த இடம்
:
கட்டாக், ஒரிசா மாநிலம்
தாயார் பெயர்
:
பிரபாவதிதேவி
தந்தை பெயர்
:
கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி
மனைவி / கணவர் பெயர்
:
எமிலி
உடன் பிறந்தவர்கள்
:
8 ஆண், 6 பெண்
பிள்ளைகள்
:
அனிதா போஸ்
இறந்த தேதி
:
18-08-1945 (இறந்ததாக கருதப்படும் நாள்)

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்