வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தமிழகத்தின் அனைத்து தபால் நிலையங்களில் விரைவில் வங்கி சேவை: நிர்மலா சீதாராமன்- Post office Bank and ATM news Tamil
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, September 02, 2018

தமிழகத்தின் அனைத்து தபால் நிலையங்களில் விரைவில் வங்கி சேவை: நிர்மலா சீதாராமன்- Post office Bank and ATM news Tamil



தமிழகத்தில் வரும் டிசம்பருக்குள் அனைத்து தபால் நிலையங்களிலும் வங்கி சேவை தொடங்கப்படும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.





நிதி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளிலும் விரைவாக செய்து முடிக்க அஞ்சல் துறை வங்கி சேவையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. சாதரண மக்களும் எளிதாக அணுகக்கூடிய வங்கியாக உருவாக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அஞ்சல் துறை வங்கி சேவையை, டெல்லியிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

டெல்லியை தொடர்ந்து சென்னையிலும் ‘அஞ்சல் துறை வங்கி சேவை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர் ஜெயக்குமார், திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன், தமிழக அஞ்சல் துறை முதன்மைச் செயலர் சம்பந்த் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அஞ்சல் துறை வங்கி சேவை ஏழை எளிய மக்களுக்கு சிறந்த பயனளிக்கும் என்று தெரிவித்தார். சுமார் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் அஞ்சல் அலுவகங்கள் நாடு முழுவதும் உள்ளன என்று தெரிவித்தார்.


மேலும், அஞ்சல் அதிகாரி மீது எப்போதுமே கிராமபுற மக்களுக்கு நம்பிக்கை அதிகம். பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகள் வந்த போதிலும், அஞ்சல் அலுவலகங்கள் சேவை இன்றும் இன்றியமைததாக உள்ளன. 


 

வீடு தேடி வரும் வங்கி சேவை, வரப்பிரசாதம் என்று தனது உரையின் போது நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அஞ்சல் துறை வங்கி சேவை மூலம், தபால் நிலைய கவுண்டர்கள், ஏடிஎம்கள், மொபைல் போன் பேங்கிங், ஆகியவற்றின் மூலம் இந்த சேவையை பயன்படுத்த வசதி உள்ளது. 

ஒரு லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட்டுகளை பேமெண்ட்ஸ் வங்கிகளில் செய்ய முடியும். மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏஜெண்டாகவும் இது செயல்படும். ஏற்கனவே உள்ள 17 கோடி தபால் சேமிப்பு வங்கி கணக்குகள், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைக்கப்படும். இதனால் வாடிக்கையாளர்களை சேர்க்கும் பணி மற்றும் செலவு குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment