Run World Media: குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: 04.10.2018 முதல் 28.10.2019 வரை - கடகம்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 3, 2018

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: 04.10.2018 முதல் 28.10.2019 வரை - கடகம்நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் நட்சத்திரம், சித்தி நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜுவனம் நிறைந்த சித்த யோகத்தில், செவ்வாய் ஓரை முடியும் தருணத்தில், ஏழாம் சாமத்தில், பஞ்சபட்சியில் ஆந்தை நடைபயிலும் நேரத்திலும், தட்சணாயனப் புண்யகால வர்ஷ ருதுவில், இரவு 10 மணிக்குச் சூரிய உதயம் 39.55 நாழிகைக்கு, ரிஷப லக்னத்திலும் நவாம்சத்தில் சிம்ம லக்னத்திலும் வேத உபநிஷதங்களுக்குரிய மெய்ஞ்ஞான கிரகமான பிரகஸ்பதி எனும் குருபகவான் சர வீடான துலாம் ராசியிலிருந்து ஸ்திர வீடான விருச்சிகம் ராசிக்குள் சென்று அமர்கிறார்.
13.03.2019 முதல் 09.04.2019 வரை அதிசாரமாகவும், 10.04.2019 முதல் 18.05.2019 வரை வக்ர கதியிலும் தன் சொந்த வீடான தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார்.


செவ்வாயின் வீடான விருச்சிக ராசியில் குரு வந்து அமர்வதால் ரசாயனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் பாதிப்படையும். ரசாயனத் தொழிற்சாலைகள் சீரமைக்கப்படும். உலகெங்கும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கும், மாசுக்கட்டுப்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படும். மருத்துவர்களுக்கு வருமானம் அதிகமாகும்.
சூறாவளிக் காற்றுடன் கனமழை பொழியும். புதிய புயல் சின்னங்கள் உருவாகும். புயலால், இடிகளால் பேரழிவு உண்டு.காலப்புருஷ ராசிக்கு 8-ம் ராசியில் குரு அமர்வதால் ரியல் எஸ்டேட் சுமாராக இருக்கும். மழை, வெள்ளத்தால் விளைநிலங்கள், பயிர்கள், அடித்துச் செல்லப்படும். நாட்டின் கடன் அதிகரிக்கும். தகவல் தொழில்நுட்பத் துறை நவீனமாகும். செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை குறையும். இனி, பனிரெண்டு ராசிக்காரர்களை என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.
கடகம்

கடமை உணர்வு கொண்ட நீங்கள் எல்லா வற்றையும் காதலிப்பவர்கள். பிறர் தன்னைக் குற்றம் குறை கூறிக் குதர்க்கமாகப் பேசினாலும் மனம் தளராதவர்களே!  இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நாலாவிதத்திலும் சின்னாபின்னமாக்கிய குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்களின் பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்வதால் இனி நல்லதே நடக்கும்.


கடந்த ஓராண்டு காலமாக மருத்துவர்களே உங்கள் விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் மயங்கினார்களே! மருந்து, மாத்திரையால் வயிறும் புண்ணானதே! உருக்குலைந்து போயிருக்கும் நீங்கள், இனி அழகு, ஆரோக்கியமடைவீர்கள். குழந்தை இல்லாமல் கோயில் குளமென்று சுற்றிக்கொண்டிருந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டில் தள்ளிப் போன சுபகாரியங்கள் கூடி வரும்.

குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்கள் ரசனை மாறும். சுண்டிப்போயிருந்த உங்கள் முகம் மலரும். சபையில் முதல் மரியாதை கிடைக்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். புது வீட்டில் குடிபுகுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.  9-ம் வீட்டைப் பார்ப்பதால் தந்தையுடனான மனத்தாங்கல் நீங்கும். இருவரும் மனம்விட்டுப் பேசுவீர்கள். தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வெளிநாடு சென்று வருவீர்கள். பதினோறாவது வீட்டைக் குரு பார்ப்பதால் மூத்த சகோதரர், சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். 04.10.2018 முதல் 20.10.2018 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்துக்குச் செல்வதால் பணப் புழக்கம் கணிசமாக உயரும்.


அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிர்ப்புகள் குறையும். திருமணம் கூடி வரும். குடும்பத்தில் சச்சரவு குறையும். வழக்கு சாதகமாகும். தந்தையார் ஆதரிப்பார். வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.
21.10.2018 முதல் 19.12.2018 வரை அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வேலைச் சுமையால் பதற்றம் அதிகரிக்கும். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். கடன் பிரச்சினையால் கவுரவத்துக்குப் பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சமும் வரும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.
20.12.2018 முதல் 12.03.2019 மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர்ப் பயணங்கள், வீண் செலவுகள், கனவுத் தொல்லை, சளித் தொந்தரவு, கழுத்து வலி, வாகனப் பழுது வந்து நீங்கும். இளைய சகோதரர்களால் சங்கடங்கள் வரும்.


தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 6-ம் வீட்டில் மூலம் நட்சத்திரத்துக்குச் செல்வதால் அக்காலகட்டத்தில் வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வீட்டிலும் கழிவு நீர் குழாய் அடைப்பு, குடி நீர் குழாய் அடைப்பு வந்து நீங்கும்.
விலையுயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் அவ்வப்போது பழுதாகும்.10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் வியாபாரத்தில் களையிழந்து போயிருந்த கடை இனி அதிக வாடிக்கையாளர்களின் வருகையால் களைகட்டும்.


தேங்கிக் கிடந்த சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள்.இந்த குரு மாற்றம் வாடிப் போயிருந்த உங்களை வளம் பெற வைப்பதுடன், மதிப்பு, மரியாதையையும், வசதி, வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்: விநாயகர் கோயிலுக்கு சங்கடஹர சதுர்த்தி திதி நாளில் சென்று வணங்குங்கள். பச்சரிசியைத் தானமாகக் கொடுங்கள்.


No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்