Run World Media: குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: 04.10.2018 முதல் 28.10.2019 வரை - விருச்சிகம்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 3, 2018

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: 04.10.2018 முதல் 28.10.2019 வரை - விருச்சிகம்நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் நட்சத்திரம், சித்தி நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜுவனம் நிறைந்த சித்த யோகத்தில், செவ்வாய் ஓரை முடியும் தருணத்தில், ஏழாம் சாமத்தில், பஞ்சபட்சியில் ஆந்தை நடைபயிலும் நேரத்திலும், தட்சணாயனப் புண்யகால வர்ஷ ருதுவில், இரவு 10 மணிக்குச் சூரிய உதயம் 39.55 நாழிகைக்கு, ரிஷப லக்னத்திலும் நவாம்சத்தில் சிம்ம லக்னத்திலும் வேத உபநிஷதங்களுக்குரிய மெய்ஞ்ஞான கிரகமான பிரகஸ்பதி எனும் குருபகவான் சர வீடான துலாம் ராசியிலிருந்து ஸ்திர வீடான விருச்சிகம் ராசிக்குள் சென்று அமர்கிறார்.
13.03.2019 முதல் 09.04.2019 வரை அதிசாரமாகவும், 10.04.2019 முதல் 18.05.2019 வரை வக்ர கதியிலும் தன் சொந்த வீடான தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார்.


செவ்வாயின் வீடான விருச்சிக ராசியில் குரு வந்து அமர்வதால் ரசாயனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் பாதிப்படையும். ரசாயனத் தொழிற்சாலைகள் சீரமைக்கப்படும். உலகெங்கும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கும், மாசுக்கட்டுப்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படும். மருத்துவர்களுக்கு வருமானம் அதிகமாகும்.

சூறாவளிக் காற்றுடன் கனமழை பொழியும். புதிய புயல் சின்னங்கள் உருவாகும். புயலால், இடிகளால் பேரழிவு உண்டு.காலப்புருஷ ராசிக்கு 8-ம் ராசியில் குரு அமர்வதால் ரியல் எஸ்டேட் சுமாராக இருக்கும். மழை, வெள்ளத்தால் விளைநிலங்கள், பயிர்கள், அடித்துச் செல்லப்படும். நாட்டின் கடன் அதிகரிக்கும். தகவல் தொழில்நுட்பத் துறை நவீனமாகும். செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை குறையும். இனி, பனிரெண்டு ராசிக்காரர்களை என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.
விருச்சிகம்

 பணத்துக்கும் பகட்டான வாழ்க்கைக்கும் மயங்காத உங்களை, பகடைக் காயாக உருட்டினாலும் கொண்ட கொள்கையிலிருந்து மாறமாட்டீர்கள்! இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து வீண் அலைக்கழிப்பையும் செலவுகளையும் தூக்கமின்மையையும் தந்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்மகுருவாகத் தொடர இருப்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள்.


தலைச் சுற்றல், காய்ச்சல், சிறுநீரகத் தொற்று, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல் வரக்கூடும். குரு பகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் புத்திர பாக்கியம் உண்டு. பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக அமையும். மகள் உங்களைப் புரிந்துகொள்வாள்.
மகனின் அலட்சியப் போக்கு மாறும். குரு பகவான் 7-ம் வீட்டையும் பார்ப்பதால் கணவன் மனைவிக்குள் அன்பு குறையாது. திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் அதிகரிக்கும். குரு உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்ப தால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். 04.10.2018 முதல் 20.10.2018 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்துக்குச் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
வி.ஐ.பி.களின் தொடர்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வேலைக்கு விண்ணப் பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும்.
21.10.2018 முதல் 19.12.2018 வரை அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வேலைச்சுமை யால் பதற்றப்படுவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் முடியாமல் போனாலும் எதிர்பாராத காரியங்கள் முடிவடையும். தாயாருக்கு மூட்டு வலி, எலும்பு தேய்மானம் வரக்கூடும்.
20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை கேட்டை நட்சத்திரத்துக்குச் செல்வதால் மற்றவர்களுக்காக உத்திரவாதக் கையெழுத்திட வேண்டாம். உறவினர், நண்பர்களால் அன்புத்தொல்லை கள் அதிகரிக்கும்.


13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் மூலம் நட்சத்திரத்தில் அதிசார வக்ரத்தில் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. அரசால் ஆதாயமடைவீர்கள். சிலருக்கு வீடு, மனை அமையும். திருமண முயற்சிகள் பலிதமாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உங்களை விட வயதில் இளையவர்களால் ஆதாயமடை வீர்கள்.
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். வி.ஐ.பி. ஒருவரின் அறிமுகம் திருப்புமுனையை உண்டாக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள்.
விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.
 

போட்டிகளைச் சமாளிக்க கடுமையாக உழைக்க வேண்டி வரும். வேலையாட்களால் விரயம் ஏற்படும். பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். புதிதாக வரும் விளம்பரங்களைப் பார்த்து அறிமுகமில்லாத தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். இந்தக் குருப்பெயர்ச்சி எதிர்காலம் பற்றிய ஒரு பயத்தையும் கேள்விக்குறியையும் தந்தாலும் அவ்வப்போது அனுசரித்துப் போவதால் ஓரளவு சாதிக்க வைக்கும்.

பரிகாரம்: துர்க்கை அம்மன் கோயிலுக்கு ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமையன்று சென்று வணங்குங்கள். கொண்டைக்கடலையைத் தானமாகக் கொடுங்கள்.


No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்