Run World Media: குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: 04.10.2018 முதல் 28.10.2019 வரை - கன்னி

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 3, 2018

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: 04.10.2018 முதல் 28.10.2019 வரை - கன்னிநிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் நட்சத்திரம், சித்தி நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜுவனம் நிறைந்த சித்த யோகத்தில், செவ்வாய் ஓரை முடியும் தருணத்தில், ஏழாம் சாமத்தில், பஞ்சபட்சியில் ஆந்தை நடைபயிலும் நேரத்திலும், தட்சணாயனப் புண்யகால வர்ஷ ருதுவில், இரவு 10 மணிக்குச் சூரிய உதயம் 39.55 நாழிகைக்கு, ரிஷப லக்னத்திலும் நவாம்சத்தில் சிம்ம லக்னத்திலும் வேத உபநிஷதங்களுக்குரிய மெய்ஞ்ஞான கிரகமான பிரகஸ்பதி எனும் குருபகவான் சர வீடான துலாம் ராசியிலிருந்து ஸ்திர வீடான விருச்சிகம் ராசிக்குள் சென்று அமர்கிறார்.
13.03.2019 முதல் 09.04.2019 வரை அதிசாரமாகவும், 10.04.2019 முதல் 18.05.2019 வரை வக்ர கதியிலும் தன் சொந்த வீடான தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார்.


செவ்வாயின் வீடான விருச்சிக ராசியில் குரு வந்து அமர்வதால் ரசாயனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் பாதிப்படையும். ரசாயனத் தொழிற்சாலைகள் சீரமைக்கப்படும். உலகெங்கும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கும், மாசுக்கட்டுப்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படும். மருத்துவர்களுக்கு வருமானம் அதிகமாகும்.
சூறாவளிக் காற்றுடன் கனமழை பொழியும். புதிய புயல் சின்னங்கள் உருவாகும். புயலால், இடிகளால் பேரழிவு உண்டு.காலப்புருஷ ராசிக்கு 8-ம் ராசியில் குரு அமர்வதால் ரியல் எஸ்டேட் சுமாராக இருக்கும். மழை, வெள்ளத்தால் விளைநிலங்கள், பயிர்கள், அடித்துச் செல்லப்படும். நாட்டின் கடன் அதிகரிக்கும். தகவல் தொழில்நுட்பத் துறை நவீனமாகும். செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை குறையும். இனி, பனிரெண்டு ராசிக்காரர்களை என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.

கன்னி

 
அந்தரத்தில் கோட்டை கட்டும் நீங்கள், வாழ்வின் பிற்பகுதியில் ஆள்பவர்களுக்கு நெருக்கமாவீர்கள்! குருபகவான் இதுவரை உங்களின் தன வீடான 2-ம் வீட்டில் அமர்ந்து செல்வாக்கையும், பணவரவையும் தந்தார். வெளிவட்டாரத்திலும் உங்கள் கை ஓங்கியிருந்தது. பலரும் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொண்டார்கள்.


ஆனால் 04.10.2018 முதல் 28.10.2019 வரை குருபகவான் மூன்றாம் வீட்டில் மறைவதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை இனி நம்ப வேண்டாம். பல வேலைகளை முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டி வரும். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.

உரிமையுடன் நெருங்கியவர்கள்  குறைகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். இளைய சகோதரர் வகையில் மனத்தாங்கல் வரும். திடீரென்று புதிதாக அறிமுகமாகும் நண்பர்களை வீட்டுக்குள் அழைத்து வர வேண்டாம். வசதி, செல்வாக்கைக் கண்டு மயங்கி தவறானவர்களுடன் செல்ல வேண்டாம். கணவன் மனைவிக்குள் அன்பும், அன்யோன்யமும் குறையாது. விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.


 குருபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். தந்தையாருடன் கருத்து மோதல்கள் குறையும். குருபகவான் 11-ம் வீட்டைப் பார்ப்பதால் கல்வியாளர்கள், அறிஞர்கள் நட்பால் தெளிவடைவீர்கள். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.
04.10.2018 முதல் 20.10.2018 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்துக்குச் செல்வதால் தாயாருக்கு நெஞ்செரிச்சல், முதுகுத் தண்டு வலி வந்துபோகும். அவருடன் வீண் விவாதங்களும் வரக்கூடும். வாகனத்தை எடுக்கும்முன் எரிபொருள், பிரேக்கெல்லாம் சரி பார்த்துச் செல்வது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும்.


21.10.2018 முதல் 19.12.2018 வரை அனுஷம் நட்சத்திரத்துக்கு குருபகவான் செல்வதால் புதிய சிந்தனைகள் மனத்தில் தோன்றும். பிள்ளைகளின் விருப்புவெறுப்புகளை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். பூர்விகச் சொத்தை சீர் செய்வீர்கள். சொந்தபந்தங்களின் சுப நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். பிற மொழி பேசுபவர்களால் பயனடைவீர்கள்.
20.12.2018 முதல் 12.03.2019 மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019  வரை கேட்டை நட்சத்திரத்துக்குச் செல்வதால் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். நிலுவைப் பணம் கைக்கு வரும். அழகும், அறிவும் கூடும். குடும்பத்திலும் சந்தோஷம் குடிகொள்ளும். புதிதாகச் சொத்து வாங்குவீர்கள். உடல் நலம் சீராகும். உத்தியோகத்தில் செல்வாக்கு உயரும். பெரிய பதவியில் இருக்கும் உங்களுடைய பழைய நண்பரால் ஆதாயமடைவீர்கள்.


13.3.2019 முதல் 18.5.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 4-ம் வீட்டில் மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் அவ்வப்போது ஒரு வெறுமையை உணருவீர்கள். படபடப்பு, ஹார்மோன் பிரச்சினை, ஈகோவால் கணவன் மனைவிக்குள் சச்சரவு வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள்.
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேற்றுமாநிலம், வெளிநாட்டில் வேலை அமையும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு வாங்குவீர்கள்.


வியாபாரத்தில் சந்தை நிலவரத்தைத் தெரிந்து செயல்படப் பாருங்கள். தள்ளுபடி, சலுகைகளை அறிவித்து பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களால் பிரச்சினைகள் வரும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். இந்த குரு மாற்றம் ஏமாற்றங்களையும், எதிலும் தாமதத்தையும் ஏற்படுத்தினாலும் விட்டுக்கொடுத்துப் போகும் குணத்தால் மகிழ்ச்சியைத் தரும்.

பரிகாரம்: சிவன் கோயிலில் இருக்கும் சரபேஸ்வரரை திங்கட்கிழமைகளில் சென்று வணங்குங்கள். உளுத்தம்பருப்பைத் தானமாகக் கொடுங்கள்.


No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்