வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: எதிர்த்து பேச முடியாத "புருஷன்".. கோபக்கார "மனைவி".. ஒரு பரிதாப கொலை!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 24, 2018

எதிர்த்து பேச முடியாத "புருஷன்".. கோபக்கார "மனைவி".. ஒரு பரிதாப கொலை!



இது ஒரு புருஷன் பொண்டாட்டி கதை.. ஆனால் இவர்கள் மனிதர்கள் அல்ல, சிங்கங்கள். புருஷன், பொண்டாட்டி சண்டைக்கு சிங்கங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? அமெரிக்காவில் ஒரு உயிரியல் பூங்கா இருக்கிறது. இங்கு ஒரு சிங்க ஜோடி இருந்தது. 8 வருஷமாக இந்த ஜோடி இந்த பூங்காவில்தான் இருக்கிறது. ஆண் சிங்கம் பெயர் நியாக், வயது 10. பெண் சிங்கம் பெயர் ஜூரி, வயது 12. இந்த ஜோடிக்கு 3 குட்டிகள் உள்ளன.

பேமஸ் ஜோடி 
 இந்த பூங்காவிலேயே இந்த சிங்க ஜோடிதான் ரொம்ப ஃபேமஸ். ஆனாலும் சில மாதங்களாகவே இதுங்களுக்குள் சண்டை இருந்து வந்தது. எதற்காக சண்டை என்று யாருக்கும் தெரியாது. எவ்வளவு சண்டை போட்டுக்கிட்டாலும் ரெண்டுமே ஒரே கூண்டில்தான் இருக்கும். ஆனால் எப்ப பார்த்தாலும் புர்... புர்... என்று மோதியபடி இருக்குமாம்.   (தொடர்ச்சி கீழே...)  

இதையும் படிக்கலாமே !!!

இறுக்கி பிடித்தது 
 அதேபோலதான், சம்பவத்தன்றும் கூண்டுக்குள்ளிருந்து சத்தம் கேட்டது. ஆனால் இந்த கர்ஜனை சத்தம் கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது. இதனை கேட்ட அங்கிருந்த ஊழியர் ஒருவர் ஓடிச் சென்று பார்த்தார். அப்போது பெண் சிங்கம், ஆண் சிங்கத்தின் கழுத்தை இறுக்கிப் பிடித்திருந்தது. இரு சிங்கங்களையும் பிரித்து விட பல முயற்சிகள் நடந்தது.



அமைதி சிங்கம்
 ஆனால் பெண் சிங்கம் ஆண் சிங்கத்தை விடவே இல்லை. கெட்டியாக கழுத்தை பிடித்து கொண்டது. இதில் ஆண் சிங்கம் நியாக்கிற்கு மூச்சு திணறி விட்டது. கடைசியில் ஜூரியிடம் தப்ப முடியாமல் நியாக் இறந்தே விட்டது. பொதுவாக காட்டில் ஆண் சிங்கம்தான் டாமினேட் பண்ணும். பெண் சிங்கங்கள் பெரும்பாலும் அமைதியாகவே இருக்குமாம். ஆனால் இங்கு தலைகீழாக போய் விட்டது.


பரிதாபத்தில் பூங்கா
 இதுபற்றி பூங்கா ஊழியர்கள் கூறும்போது, நியாக் ரொம்ப நல்ல டைப் என்கிறார்கள். அற்புதமான சிங்கமாம். எவ்வளவோ தடுத்தும் எங்களால் நியாக்கை காப்பாற்ற முடியாமல், இப்படி இழந்துவிட்டு நிற்கிறோம். இதனால் இந்த பூங்காவே சோகத்தில் உள்ளது என்கிறார்கள்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment