வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அளவை மிஞ்சிய தூக்கமும் கெடுதல்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 24, 2018

அளவை மிஞ்சிய தூக்கமும் கெடுதல்



துாக்கத்தைப் பற்றி நடத்தப்பட்ட உலகின் மிகப் பெரிய ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன.

 இந்த ஆய்வில் தெரிய வந்துள்ள ஆச்சரியமான தகவல், அதிக நேரம் தூங்குபவர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதுதான்.
சராசரியாக ஒருவர் இரவில், 7 முதல் 8 மணி நேரம் துாங்குவது ஆரோக்கியமானது. இதற்கு குறைவான நேரம் துாங்குவதால் உடல் மற்றும் மனநலக் குறைபாடுகள் ஏற்படுவதை உலகெங்கும் பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. (தொடர்ச்சி கீழே...) 

இதையும் படிக்கலாமே !!!

எட்டு மணி நேரத்திற்கும் அதிகமாக துாங்குவது என்ன கெடுதலை விளைவித்துவிட முடியும்? அதிக துாக்கத்தால் மூளையில் ஏற்படும் மாற்றங்கள், ஒருவரது முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை பாதிப்பதாக மருத்துவர்கள் கருதுகின்றனர். 'ஸ்லீப்' என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், உலகெங்கும் உள்ள 10,000 பேருக்கும் மேற்பட்டவர்கள், இணையத்தின் மூலம் பங்கேற்றனர்.


குறைவாகத் துாங்குபவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும், அதிக நேரம் தூங்குபவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் ஒத்திருப்பதையும், இந்த ஆய்வு மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment