வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா ?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 19, 2018

கல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா ?



மாணவர்கள் கல்லூரி முடித்த கையோடு வேலைக்கு விண்ணப்பிக்கின்றனர். ஆனால், பட்டச் சான்றுடன், ஏதேனும் வேலைக்கான அனுபவத்தை பெற்றிருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே தற்போது நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கின்றன.

கல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா ? 
இந்நிலையில், மாணவர்கள் பட்டப்படிப்பு படிக்கும் போதே வேலைக்கான அனுபவத்தைப் பெற அதிஷ்டவசமாக நிறைய வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்புகளைப் எளிதில் பெற சில ஆலோசனைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (தொடர்ச்சி கீழே...)  


இதையும் படிக்கலாமே !!!

பேராசிரியர்கள் உதவி: 
 தொழில்முறை அனுபவங்களைப் பெறுவதற்கான கூடுதல் தொடர்புகளை கண்டறிய உங்கள் பேராசிரியர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகளைப் பயன்படுத்தவும். பேராசிரியர்களுக்கு, இன்டென்ஷிப், கேம்பஸ் தேர்வு தொடர்பாக வெளியில் உள்ள பல நிறுவனங்களின் தொடர்புகள் இருக்கும் என்பதால் உங்களுக்கு உதவி செய்வார்கள்.



சேவைப் பிரிவு அலுவலக தொடர்பு:
 நீங்கள் படிக்கும் கல்லூரியிலோ, பல்கலைக்கழகத்திலோ வேலை வாய்ப்புக்கான சேவைப் பிரிவு அலுவலகம் இருக்கும். அங்குள்ள ஆலோசனை அலுவலருடன் தொடர்பு வைத்துக் கொண்டு, அனுபவம் பெறுவதற்கான செயல் திட்டங்களை வகுக்கலாம். இந்த அலுவலகம் மாணவர்களுக்கு இன்டென்ஷிப் (internship) வழங்கும் பணிகளை மேற்கொள்வதால், இவர்களிடமே கூட பகுதி நேர அனுபவங்களைப் பெறலாம். மேலும் இவர்களுக்கு வேலைக்கான கேம்பஸ் தேர்வு நடத்தும் பல நிறுவங்களின் அலுவகத் தொடர்புகள் (Net work ) இருக்கும் என்பதால் இவர்களின் தொடர்பு உங்களுக்கு கண்டிப்பாக பயனளிக்கும்.


நட்பு வழி தொடர்புகள்: 
உங்களிடம் தொடர்பிலிருக்கும் நண்பர்களின் தொடர்புகளிலிருந்து, நீங்கள் பலரை அறியலாம். அவர்களை நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்வதன் மூலம், உங்கள் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு உங்கள் வெற்றிக்கு அவர்கள் உதவலாம்.



இன்டென்ஷிப் பலன்கள்:
 ஒன்றுக்கும் மேற்பட்ட இன்டென்ஷிப்பில் நீங்கள் பங்கேற்பது நல்லது. ஒவ்வொரு மாணவரும் ஒன்றுக்கு மேற்பட்ட இன்டென்ஷிப் வாய்ப்புகளை எப்படியாவது பெற்றுவிட விரும்புகின்றனர். ஏனெனில் இன்டென்ஷிப் மூலம் உங்களுக்கு வேலை வாய்ப்புக்கான முன் அனுபவம் மட்டும் கிடைப்பதில்லை. அடுத்து நாம் எந்தப் பாதையில் காலடி எடுத்து வைத்து வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பதற்கான தகவல்களையும் வழங்குகிறது. மேலும் இன்டென்ஷிப் மூலம் உங்களுக்கு புதிய தொடர்புகள் கிடைப்பதால் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டும் வெற்றி அடையலாம்.


கல்வியுடன் வேலை: 
 படிக்கும் போதே ஏதேனும் ஒரு பகுதி நேர வேலை பார்ப்பது நல்லது. பல கல்லூரிகளில் பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்கள் ஏதேனும் ஒரு வேலை பார்த்துக் கொண்டே கல்வி செலவுகளுக்காக படிக்கின்றனர். நீங்கள் எந்த வேலை பார்க்கிறீர்கள் என்பது முக்கியம் அல்ல. ஆனால் படிப்பு முடித்து வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, உங்கள் அனுபவத்தை குறிப்பிடும் படியாக இருப்பது முக்கியம். சில புத்திசாலி மாணவர்கள் தகுதியான வேலையைப் பெறுவதுடன் மற்ற மாணவர்களுக்கும் வழி காட்டவும் செய்கின்றனர்.

வளாக வேலை வாய்ப்புகள்:
 வளாக நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று வேலை வாய்ப்புகளைப் பெறுங்கள். சில மாணவர்கள் படித்துக்கொண்டே வேலை பெறும் வாய்ப்பை பெற முடியாவிட்டாலும், வளாகத்திற்குள் நடைபெறும் வேலைவாய்ப்புக்கான தேர்வுகளை விட்டுவிடக் கூடாது. கல்லூரித் துறைகளில் பகுதி நேர பணியாளர்களாக மாணவர்களை பயன்படுத்திக்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது. அனுவம் மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும்.


பகுதி நேர வேலைகளை பெறுதல்:
 சிறந்த வேலை அனுபவங்களைப் பெற வெளியில் கிடைக்கும் பகுதி நேர வேலைகளைப் பெறலாம். நிறைய மாணவர்கள் ஹோட்டல் வேலைகள், விருந்து மண்டபங்களில் உணவு பரிமாறும் பணிகளைக்கூட செய்கிறார்கள். இது போன்ற வாய்ப்புகளைக் கூட நீங்கள் விட்டுவிடக் கூடாது. உதாரணமாக ஒரு சட்டக்கல்லூரி மாணவர் சட்டம் படித்துக் கொண்டே அருகிலுள்ள ஒரு சட்ட ஆலோசனை மையத்தில் வரவேற்பாளராகவும் பணியாற்றினார். இதன் மூலம் கிடைத்த தொடர்புகளைக் கொண்டு பின்னாளில் ஒரு நல்ல சட்ட ஆலோசகராக அவர் திகழ முடிந்தது.



கோடை காலத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்:
 மாணவர்கள் கோடைகால விடுமுறையைப் பயன்படுத்தி வெளியில் சென்று, நல்ல வேலை அனுபவங்களைப் பெற இது ஒரு வாய்ப்பாகும். உதாரணமாக சுற்றுலா இடங்களில் உள்ள உணவகங்கள், பொழுது போக்கு பூங்காக்களில் பணியாற்றலாம். வேலை வாய்ப்பு முகாம்களில் பணியாற்றலாம். இந்த அனுபவங்கள் வேலை வேலைவாய்ப்புக்காக விண்ணப்பிக்கும்போது நல்ல பலன்களைத் தரும்.


சமூக சேவைப் பணி: 
 நீங்கள் பண வசதி உடையவராக இருந்தால், கல்லூரியில் படித்துக் கொண்டே தொண்டு நிறுவனப் பணிகளில் இணைந்து பகுதி நேர சமுதாயப்பணிகளை செய்யலாம். இது உங்களுக்கு எதிர்கால பலன்களைத் தரும். இதன் மூலம் கிடைக்கும் தொடர்புகள் உங்கள் எதிர்காலத்தை பிரகாசிக்க செய்யலாம். இது குறித்து அறிய உங்கள் கல்லூரி அல்லது பல்கலைகழகத்திலுள்ள சேவைப்பிரிவு அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். அவர்கள் உங்களுக்கு உள்ளூர் சேவை நிறுவனங்களின் பட்டியலைத் தருவார்கள்.



மாணவர் அமைப்புகளில் இணையுங்கள்:
 ஒவ்வொரு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் பல்வேறு மாணவர் அமைப்புகள் மற்றும் கழகங்கள் உள்ளன. துறை வாரியாக உள்ள இந்த அமைப்புகளில் உங்கள் ஆர்வத்துக்கேற்ப ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்புகளில் இணையுங்கள். அதில் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்று அனுபவங்களை பெறலாம். இதன் மூலம் உங்களுக்கு இருக்கும் திறமைகள், தலைமைப்பண்பு, நிர்வாகத்திறன் குறித்து உங்களுக்கு நீங்களே சுயமதிப்பீடு செய்து கொள்ளலாம்.

சொந்தமாக தொழில் தொடங்குங்கள்:
 நாடு முழுவதும் உள்ள அரசு வளாக விற்பனை மையங்களில் பெரும்பாலும் மாணவர்களே சொந்த தொழில் செய்கின்றனர். அழைப்பிதழ்களை வடிவமைத்து, அச்சிட்டு விற்பனை செய்வதிலிருந்து உணவு தயாரிப்பு மற்றும் விநியோகப்பணி செய்வதிலும் ஈடுபடுகிறார்கள். இது போன்ற சொந்த தொழில் செய்வதன் மூலம் நிறைய ஐடியாக்கள் கிடைக்கின்றன. சிறந்த தொழிலதிபர் ஆகவும் வாய்ப்பு கிடைக்கிறது.


தன்னார்வலர் பணி:
 பணவசதி இருக்கும் நிலையில் தன்னார்வலர் பணிகளை மேற் கொள்ளலாம். பல நிறுவனங்களுக்கு தன்னார்வ பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். இப்பணியின் மூலம் நல்ல தொழில் அனுபவமும், பல தொடர்புகளும் கிடைப்பதால் பிற்காலத்தில் வேலை பெறுவதற்கோ அல்லது சொந்த தொழில் மேற்கொள்ளவோ, தொழிலை விரிவாக்கம் செய்வதற்கோ பயன்படும்.


தற்காலிக வேலைவாய்ப்பு நிறுவனங்கள்:
 வர்த்தக தொடர்பு பணிகளில் உங்களுக்கு போதுமான அனுபவங்கள் இல்லையெனில், தனியார் வேலைவாய்ப்பு ஏஜென்சிகளை அணுகி நிர்வாகம் தொடர்பான தற்காலிக வேலைகளை பெற்று அதன் மூலம் பல தொடர்புகளைப் பெறலாம். இது நீங்கள் விரும்பும் நிலையை அடைய பல தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.



வகுப்பறை திட்ட அறிக்கைகள்:
 மாணவர்கள் பாடத் திட்ட அடிப்படையில், ஒரு மாதிரிக்காக தொழில் திட்ட அறிக்கைகளை (projects) தயார் செய்கிறார்கள். இதற்காக பல தொழிலகங்களுக்கு சென்று, உழைத்து அதிக பக்கங்களில் அறிக்கை தயார் செய்தாலும் இது எந்த நிறுவனத்துக்கும் பயன்படுவதில்லை. ஆனால் ஒரு நிறுவனத்துக்கு பயன்படும் வகையில் முழுமையான திட்ட அறிக்கை தயார் செய்தால் வேலை வாய்ப்பு பெறுவதில் கூடுதல் வாய்ப்புகள் ஏற்படும்.


தனி வலைப் பதிவு:
 உங்களுக்கு என தனி எழுத்துக்கலை மற்றும் பிறரை ஈர்க்கும் கலை உணர்வு இருந்தால் இணைய தளத்தில் தனி வலைப்பதிவு ஏற்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் அதிக பேரின் கவனத்தை ஈர்க்கலாம். இது உங்கள் நுண்ணறிவு மற்றும் நிபுணதுவத்தை வெளிப்படுத்துவதால் நீங்கள் விரும்பும் வேலை பெற்று, வாழ்க்கையை பிரகாசமாக்கிக் கொள்ளலாம்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment