வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இந்தியாவில் பறக்கும் டாக்ஸி சேவை.. உபர் அதிரடி..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 12, 2018

இந்தியாவில் பறக்கும் டாக்ஸி சேவை.. உபர் அதிரடி..!



இந்தியாவின் முன்னணி டாக்ஸி சேவை நிறுவனமான உபர் விரைவில் பறக்கும் டாக்ஸியை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தச் சேவையின் மூலம் 200-300 கிலோ மீட்டாரைக் கூட வெறும் ஒருமணி நேரத்தில் கடந்த செல்லமுடியும் என உபர் தரப்பில் கூறப்படுகிறது.
 உபர் முதலில் தனது பறக்கும் டாக்ஸி சேவையை எங்கு எல்லாம் விரைவில் துவக்க முடியும் என்று ஆராயிந்து வருகிறது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாடாகப் பறக்கும் டாக்ஸ்சி சேவை அளிப்போம் என்று உபர் ஏவியேஷன் பிரிவு தலைவர் எரிக் அலிசன்ல் தெரிவித்துள்ளார்.

நாடுகள் 
 உபர் பறக்கும் டாக்ஸி சேவை நடைமுறைக்கு வருவதற்கு 5 வருடங்கள் ஆகுமாம். தற்போது உள்ளது போலவே மொபைல் செயலி மூலமே பிலைட்டை புக் செய்து பயணம் செய்யலாம். இது முதல் கட்டமாக இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியாவில் துவங்கவுள்ளது.


உணவு டெலிவரி 
ஏர் டாக்ஸி சேவை மட்டும் அல்லாமல் இந்தியாவில் ட்ரான் மூலம் உபர் ஈட்ஸஸில் மெட்ரோ நகரங்களில் உணவும் டெலிவரி செய்யவும் உபர் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.

ஏர் டாக்ஸி
இந்தச் சேவை பயன்படுத்த நீங்கள் உயரமான கட்டிடத்திற்குத் தான் செல்ல வேண்டும் ஏனென்றால் இந்த டாக்ஸி சேவையை நினைத்த இடத்திற்கெல்லாம் ஆளிக்க முடியாது. இதனால் தான் இந்தச் சேவை வெறும் மெட்ரோ நகரங்களில் மட்டும் தொடங்கப்படுகிறது. உபர் நிறுவனம் இந்தச் சேவையை நடைமுறை படுத்த விமான உற்பத்தி நிறுவனங்களான பெல், போயிங் மற்றும் எம்பரர் உடன் இணைந்துள்ளது.


வேகம் 
 இந்த வகை உபர் டாக்ஸி மணிக்கு 150-200 மைல் தூரம் செல்லும். தரையில் இருந்து 1000-2000 அடி உயரத்தில் பறக்கும்.

இந்திய நகரங்கள்
இந்தியாவில் மும்பை,டெல்லி மற்றும் பெங்களூரு நகரங்களில் இந்தச் சேவை தொடங்கப்படவுள்ளது. மேலும் உபர் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி கூறுகையில் இந்த நகரங்களில் ஒரு சில கிலோ மீட்டர் செல்ல பல மணி நேரம் ஆகிறது, அதனால் இந்தச் சேவை இங்குத் தான் முக்கியத் தேவை. அதுபோக முடிந்த அளவிற்குக் குறைந்த விலையில் பயணம் செய்ய உபர் வழிவகுத்து வருகிறது என அவர் தெரிவித்தார்.(தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!
இந்தச் சேவையை விரைவில் இந்தியாவில் துவங்க எந்தெந்த துறையின் ஒப்புதல் வேண்டுமோ அவர்களுடன் உபர் தொடர்பில் தான் உள்ளது என அவர் விவரித்தார்.


இந்திய அரசு மேலும் அவர் இந்திய அரசிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், அரசு தரப்பிலும் இதற்கு நல்ல வரவேற்பு கொடுத்தார்கள் எனச் சொன்னார். இந்திய அரசும் போக்குவரத்தில் புதிய பரிணாமத்தை எதிர்பார்த்துள்ளதாம்.

முதல் கட்டம்
 முதல் கட்டமாக உபர் கடந்த வருடம் அமெரிக்காவின் டல்லாஸ் போர்ட் மற்றும் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தில் இந்த ஏர் டாக்ஸி திட்டத்தை அறிவித்தது. இது 2020-ல் துவங்கப்பட்டு 2023-ல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என உபர் கூறியுள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment