வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மு.க.ஸ்டாலினோ, டி.டி.வி. தினகரனோ என்னை இயக்கவில்லை : ஸ்டாலின் சந்திப்புக்கு பின் கருணாஸ் பேட்டி
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 12, 2018

மு.க.ஸ்டாலினோ, டி.டி.வி. தினகரனோ என்னை இயக்கவில்லை : ஸ்டாலின் சந்திப்புக்கு பின் கருணாஸ் பேட்டி



இன்று காலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை கருணாஸ் எம்.எல்.ஏ சந்தித்தார். பின்னர் மு.க,ஸ்டாலினோ , டி.டி.வி. தினகரனோ என்னை இயக்கவில்லை என கூறினார். 


முக்குலத்தோர் புலிப்படை தலைவரான கருணாஸ் எம்.எல்.ஏ. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், அ.தி.மு.க. அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

இந்த நிலையில் கடந்த வாரம் அவரை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். கோர்ட்டில் ஜாமீன் பெற்று கருணாஸ் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரை வேறொரு வழக்கில் கைது செய்வதற்காக நெல்லை போலீசார் சென்னைக்கு வந்து முகாமிட்டு அவரது வீடு தேடி சென்றனர். ஆனால் இதை முன்கூட்டியே அறிந்த கருணாஸ் உடல்நலக் குறைவு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்து விட்டார். இதனால் அவரை போலீசார் கைது செய்யாமல் திரும்பி விட்டனர்.

CC
கருணாசை தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்து பேசி வந்தனர்.தற்போது உடல் நலம் சரியாகிவிட்டதால் ஆஸ்பத்திரியில் இருந்து கருணாஸ் ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீட்டுக்கு வந்து விட்டார். இன்று காலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கோபாலபுரம் வீட்டுக்கு சென்று கருணாஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சுமார் 20 நிமிட நேரம் மு.க.ஸ்டாலினுடன் அவர் பேசிக் கொண்டிருந்தார்.


பின்னர் வெளியே வந்த கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த அரசு என்னை கைது செய்தது பழிவாங்கும் நடவடிக்கை என்று மக்கள் கூறுகின்றனர். என்னை மு.க.ஸ்டாலினோ, டி.டி.வி. தினகரனோ இயக்கவில்லை. எனது மனதில் பட்ட கருத்துக்களை நான் கூறிவந்தேன். இதற்காக என்னை பல்வேறு வழக்குகளில் கைது செய்ய போலீசார் முயன்றனர். சட்டசபை சபாநாயகர் எந்த பக்கமும் சாயாமல் தராசு முள் போன்று இருக்க வேண்டும். ஆனால் அவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதால்தான் அவர் மீது விமர்சனம் எழுகிறது. என் மீது நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு நான் தவறு செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment