Run World Media: இளைய தலைமுறையை வலுவாக்கும் ஊட்டச்சத்து - VItamins and Minarals for Youngstars Generation

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 5, 2018

இளைய தலைமுறையை வலுவாக்கும் ஊட்டச்சத்து - VItamins and Minarals for Youngstars Generation



நமது அன்றாட வாழ்க்கையில் நம் பார்வையில் படும் மாணவர்களில் பலரும் சரியான உடல் அமைப்புடன் இருப்பதில்லை. ஒரு பக்கம் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் அதிக எடையுடன் உடற்பருமனுடன் புத்தகப் பையை சுமந்து வருவதற்கே பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உடல் மெலிந்து பரிதாபமாகக் காட்சி தருகின்றனர். இந்த இரண்டு வகை மாணவர்களின் உடற் தோற்றமே, சரியான ஊட்டச்சத்து உணவை  அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை என்பதை எச்சரிக்கும் அபாய அறிவிப்புகளே.

நம்முடைய நாட்டின் மிகப் பெரிய பலம் மனித ஆற்றல். வளரும் தலைமுறை, சரிவிகித உணவு இன்றி ஊட்டச்சத்து குறைபாட்டுடன் வளரும்போது பலவீனம் மட்டுமே நாளை மிச்சமாக இருக்கும். தனி மனிதர்களுக்கும் சரி நாட்டின் வளர்ச்சிக்கும் இது அபாய எச்சரிக்கையே.
ஊட்டச்சத்து உணவின் முக்கியத்துவம் என்பது ஆரோக்கியத்தில், உடல் வளர்ச்சியில்  மட்டுமல்லாமல் நோயற்ற வாழ்க்கையிலும் இதன் பங்கு முக்கியமானது. உலகம் முழுவதும் வாழ்க்கை முறைக் கோளாறுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எல்லா வயதினரும் எளிதில் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.


நோயற்ற வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஊட்டச்சத்து
உலக மனிதர்கள் அத்தனை பேருக்கும் ஆரோக்கியமான ஊட்டச்சத்தைக் கொண்டு செல்வது முக்கியமானதாகும். உணவு முறையை மேம்படுத்துவது என்பது இன்றைய சூழலில் காலத்தின் கட்டாயம். ஊட்டச்சத்து என்ற பெயரில் அளவுக்கு மீறி அதனை உட்கொள்வதும் ஆபத்தானதே.
ஊட்டச்சத்து குறைபாடுகள் என்ன செய்யும்?
நமது வாழ்க்கையில் ஊட்டச்சத்து உயிரும் உடலும் சேர்ந்து இருப்பதைப் போல அடிப்படை முக்கியமானது. சரியான ஊட்டச்சத்து உணவுகள் இல்லாவிட்டால் வெறும் கூடு மாதிரி ஆகிவிடும் நமது உடல். உழைக்கவும், சரியாக சிந்திக்கவும் நல்வாழ்வு வாழ்ந்திடவும் ஊட்டச்சத்து மிக மிக முக்கியம். சரியான ஊட்டச் சத்துகள் எவை? ஊட்டச்சத்து குறைபாடு என்ன செய்யும்?

புரோட்டீன் என்கிற புரத ஆற்றல் ஊட்டச்சத்து குறைபாடு
புரத-ஆற்றல் ஊட்டச்சத்து இல்லாமல் போவது ஆறு மாதத்தில் இருந்து ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. இந்தக் குறைபாட்டினால் குழந்தையின் வளர்ச்சி குன்றுதல், தொற்று நோய்களால் எளிதில் பாதிக்கப்படுதல், உடல் இளைப்பு, இளம் வயதிலேயே மெலிந்த வயதான முகம்,  உடல் உறுப்புகளில் நீர் வீக்கம், விலா எலும்புகள் வெளித்தெரிதல் ஆகிய பாதிப்புகள் அதிகம்.
ஊட்டச்சத்து உணவில் மிக முக்கியமானது இரும்புச்சத்து
இந்த இரும்புச்சத்துக் குறைவே ரத்த சோகை எனப்படுகிறது. ரத்த சோகையை நம்முடைய ஆற்றலைக் குறைத்து விடுகிறது. எப்போதும் நம்மை பலவீனமாக உணரச் செய்கிறது. இரும்புச்சத்தைப் பெறுவதற்கு தாவர உணவுகளை விட இறைச்சியே அதிகம் உதவுகிறது. இறைச்சியில் ஈரலில் அதிக இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. கரும்பச்சைக் கீரைகள், பருப்பு வகைகள், கிழங்குகள் போன்றவற்றிலும் இரும்புச்சத்து அதிகம்.

ஊட்டச்சத்து உணவின் முக்கியத்துவம் என்பது ஆரோக்கியத்தில், உடல் வளர்ச்சியில்  மட்டுமல்லாமல் நோயற்ற வாழ்க்கையிலும் இதன் பங்கு முக்கியமானது. உலகம் முழுவதும் வாழ்க்கை முறைக் கோளாறுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எல்லா வயதினரும் எளிதில் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.
நோயற்ற வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஊட்டச்சத்து
உலக மனிதர்கள் அத்தனை பேருக்கும் ஆரோக்கியமான ஊட்டச்சத்தைக் கொண்டு செல்வது முக்கியமானதாகும். உணவு முறையை மேம்படுத்துவது என்பது இன்றைய சூழலில் காலத்தின் கட்டாயம். ஊட்டச்சத்து என்ற பெயரில் அளவுக்கு மீறி அதனை உட்கொள்வதும் ஆபத்தானதே.

ஊட்டச்சத்து குறைபாடுகள் என்ன செய்யும்?
நமது வாழ்க்கையில் ஊட்டச்சத்து உயிரும் உடலும் சேர்ந்து இருப்பதைப் போல அடிப்படை முக்கியமானது. சரியான ஊட்டச்சத்து உணவுகள் இல்லாவிட்டால் வெறும் கூடு மாதிரி ஆகிவிடும் நமது உடல். உழைக்கவும், சரியாக சிந்திக்கவும் நல்வாழ்வு வாழ்ந்திடவும் ஊட்டச்சத்து மிக மிக முக்கியம். சரியான ஊட்டச் சத்துகள் எவை? ஊட்டச்சத்து குறைபாடு என்ன செய்யும்?
புரோட்டீன் என்கிற புரத ஆற்றல் ஊட்டச்சத்து குறைபாடு
புரத-ஆற்றல் ஊட்டச்சத்து இல்லாமல் போவது ஆறு மாதத்தில் இருந்து ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. இந்தக் குறைபாட்டினால் குழந்தையின் வளர்ச்சி குன்றுதல், தொற்று நோய்களால் எளிதில் பாதிக்கப்படுதல், உடல் இளைப்பு, இளம் வயதிலேயே மெலிந்த வயதான முகம்,  உடல் உறுப்புகளில் நீர் வீக்கம், விலா எலும்புகள் வெளித்தெரிதல் ஆகிய பாதிப்புகள் அதிகம்.

அயோடின் குறைபாடு
அயோடின் சிறந்த  நுண்ணூட்டச்சத்து. நம்முடைய உணவில் அயோடின் குறைவாக இருந்தால் கர்ப்பம் கலைதல், குழந்தை இறந்து பிறத்தல், மூளைக்கோளாறுகள், காது கோளாறுகள், குழந்தைகளுக்கு ஆற்றல் குறைவு ஆகியவை ஏற்படுகிறது. அயோடின் குறைபாட்டுக் கோளாறுகளைத் தடுக்க அயோடின் சேர்த்த உப்பைப் பயன்படுத்துவதே எளிய வழி.
ரத்த சோகை நீக்கும் இரும்புச்சத்து
சரியான ஊட்டச்சத்து உணவுக் குறைவினால் நம்முடைய உடலுக்குப் போதுமான இரும்புச்சத்து கிடைப்பத்தில்லை. இதனால் ரத்த சோகை ஏற்படுகிறது. கீரை வகைகள், எளிதில் கிடைக்கும் பழங்களைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகையை எட்டவிடாமல் தள்ளிப் போக வைக்கலாம்.

உயிர்ச்சத்து ஏ குறைபாடு (வைட்டமின் ஏ)
உலக அளவில் இளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வையிழப்புக்கு முக்கியக் காரணமாக உள்ளது வைட்டமின் ஏ குறைபாடு. இந்த பார்வையிழப்பை வைட்டமின் ஏ ஊட்டச்சத்து இருந்திருந்தால் தவிர்த்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிறந்த குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளின் இறப்புக்கும் முக்கிய காரணமாக உயிர்ச்சத்து ஏ குறைபாடு விளங்குகிறது. வைட்டமின் ஏ குறைபாட்டை சிறுகீரை போன்ற பச்சைக் கீரைகள் மற்றும் கேரட், பூசணி, மாங்காய், பப்பாளி போன்ற காய்கறிகளிலும் பழங்களைச் சாப்பிடுவதின் மூலம் தவிர்க்க முடியும்.
உடல் பருமனுக்கு என்ன காரணம் ? எப்படி தவிர்க்க முடியும்?
மனிதர்களின் உடலுக்குத் தேவையான அளவுக்கு அதிகமாக உணவு சக்தியை உட்கொள்வதே உடல் அதிக எடைக்கும் பருமனுக்கும் முக்கியமான காரணமாக விளங்குகிறது. இதைத் தவிர நமது வாழ்க்கை முறை, மரபுவழிக் காரணங்களும் உடல் பருமனை ஏற்படுத்துகிறது.
ஆண்டுதோறும்  உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 26 லட்சம் மக்கள் உடல் பருமன் காரணமாக மரணம் அடைகின்றனர். உலகம் முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 2.2 கோடி பேர் உடல் பருமன் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் 10-ல் ஒரு குழந்தை அதிக எடையோடு இருக்கிறது என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
மரபியல், நரம்பு உட்சுரப்பியல், வளர்சிதை மாற்றம், உளவியல், சூழலியல் குழந்தைப் பருவ உடல்பருமனுக்குக் காரணமாகிறது. வளர்ந்த பின் ஏற்படும் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாதவிடாய்க் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள், மன அழுத்தம் ஆகியவையும் குழந்தைப் பருவ உடல் பருமனோடு தொடர்புடையவை.

உடல் பருமனை எப்படி தடுக்கலாம்?
முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொள்ளுதல், ஜங்க் ஃபுட் உணவுகளைத் தவிர்ப்பது, சமநிலை உணவு, பழங்களையும் காய்கறிகளையும் போதுமான அளவு உண்ணுதல், நார்ச்சத்துள்ள உணவு, அதிக கொழுப்புள்ள உணவைத் தவிர்த்தல், உடல் செயல்பாடுகளை அதிகரித்தல், தொடர் உடற்பயிற்சி போன்றவை மூலம் நிச்சயம் உடல் பருமனை நம்மால் தடுக்க முடியும்.
என்னதான் சாப்பிடலாம்? ஊட்டச்சத்து உணவுகள் எவை?









இந்தக் கேள்விக்கான பதில் அவ்வளவு எளிதல்ல. இருந்த போதிலும் வழிகாட்டும் விதமாக சில தகவல்கள்.
நொறுக்குத் தீனிகளை முற்றிலும் தவிர்ப்பது வாழ்நாள் முழுவதும் நமக்கு நன்மை பயக்கும். நொறுக்குத் தீனிகளுக்கு பதிலாக கடலை மிட்டாயை ருசிக்கலாம். கடலை மிட்டாயில் உள்ள நிலக்கடலை வெல்லத்தோடு சேர்ந்திருப்பதால் சுலபமாகச் செரிக்கிறது. இதில் உள்ள நல்ல மாவுச் சத்து, நல்ல புரதம் மற்றும் நல்ல கொழுப்புச் சத்து ஆகியவை அடங்கியுள்ளன. இது வளரும் தலைமுறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன.
சூரிய ஒளியில் உலர்த்தப்பட்ட திராட்சையில் நெருப்பு மற்றும் நீர்த் தன்மைகள் சமன்பட்ட நிலையில் இருக்கின்றன. இதனால், செரிமான சக்தியும், ரத்த அணுக்களின் விருத்தியும் அதிகமாகின்றன.


உலர் திராட்சையில் உள்ள தாவரச் சத்துகள் குழந்தையின் வயிற்றுப் புண்ணை ஆற்றுகிறது. அடுத்து முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டியது பேரீச்சைப் பழம். பேரீச்சை நம் மண்ணீரலுக்குச் சக்தியளித்து, நம் ரத்தத்தை வீரியப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகள் கூட இதில் உள்ள நல்ல சர்க்கரைக்காக கண்டிப்பாகச் சாப்பிடலாம். நல்ல சர்க்கரை தரமான இன்சுலினை சுரக்க வைக்கும். தினம் ஒரு பேரீச்சை சாப்பிட்டு வந்தால், எதிர்கால சர்க்கரை நோயாளியாக மாறாமல் தப்பிக்கலாம்.
ருசி தரும் நல்ல கொழுப்பும் தரும் நெய்
நெய்யில் உள்ள நல்ல கொழுப்பும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். நல்ல ஊட்டச் சத்து உணவுகள் வளரும் தலைமுறைக்கு பெரும் பலத்தைச் சேர்க்கும்.


Popular Posts

No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்