வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நீங்கள் அறிந்திராத முந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, October 07, 2018

நீங்கள் அறிந்திராத முந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்



இந்தியாவில் இனிப்புகளில் மட்டுமே சேர்க்கப்படும் ஒரு ஆரோக்கியமான பொருள் என்றால் அது முந்திரிதான். முந்திரி பிடிக்காது என்று கூறுபவர்கள் மிக மிக சொற்பமே. இனிப்புகளில் முந்திரியை தேடி தேடி சாப்பிடுபவர்களே இங்கு அதிகம். இதற்கு குழதைகளை பெரியவர்கள் என்ற விதிவிலக்கல்ல. இதற்கு காரணம் அதன் சுவைதான்.

முந்திரி பருப்பு சுவையான உணவாக மட்டும் இல்லாமல் ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது. பொதுவாக நிலவும் ஒரு கருத்து முந்திரி சாப்பிடுவது பல பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் இது முழுவதும் உண்மையல்ல. அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது மட்டுமே இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பிட்ட அளவில் சாப்பிடும்போது இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.

இதய ஆரோக்கியம்
இதய ஆரோக்கியம்
மற்ற பருப்புகளுடன் ஒப்பிடும்போது முந்திரி பருப்பில் குறைந்தளவு கொழுப்பே உள்ளது குறிப்பாக இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒலிசிக் அமிலம் உள்ளது. இதில் உள்ள கொழுப்பு மற்றும் ஆன்டிஆக்சிடன்ட் பண்புகள் உங்களை மாரடைப்பிலிருந்து பாதுகாக்கும்.


இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தம் 
 இரத்த அழுத்தம் இரத்த அழுத்தத்தை குறைக்க தேவையான முக்கியமான பொருள் மக்னீசியம். இது முந்திரியில் அதிகம் உள்ளது. தொடர்ந்து முந்திரியை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது உங்கள் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும். முடி ஆரோக்கியம். 
முடி ஆரோக்கியம்
முடி ஆரோக்கியம் 
உங்கள் முடியின் நிறத்திற்கு காப்பர் மிகவும் அவசியமான ஒன்று. காப்பர் அதிகளவு உள்ள முந்திரியை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது அது நீங்கள் விரும்பும் அடர்த்தியான கருப்பு நிற முடியை வழங்கும்.

எலும்புகளின் ஆரோக்கியம் 
எலும்புகளின் ஆரோக்கியம் முந்திரியில் மக்னீசியம் உள்ளது. கால்சியம் போலவே மக்னீசியமும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது என்று அனைவரும் அறிவோம். நமது எலும்புகளில் நிறைய மக்னீசியம் உள்ளது. இதில் உள்ள எலாஸ்டின் எலும்புகளின் அமைப்பிற்கும், வலிமைக்கும் உதவி புரிகிறது.
எலும்புகளின் ஆரோக்கியம்
ஆரோக்கிய நரம்புகள் 
ஆரோக்கிய நரம்புகள் மக்னீசியம் எலும்புகளின் மேற்புறத்தில் சேமிக்கப்படுகிறது. இது மற்ற நச்சுக்களை உடலுக்குள் நுழைவதை தடுத்து இரத்த நாளங்கள் மற்றும் தசைகளை தளர்வடைய செய்கிறது. உடலில் மக்னீசியம் குறையும்போது நச்சுக்கள் இரத்த நாளங்களில் நுழைந்து விடும். இதனால் தலைவலி மற்றும் சில ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம். 


எடை இழப்பு 
 முந்திரி பொதுவாக கொழுப்பு நிறைந்த உணவாக கருதப்படுகிறது, ஆனால் அதில் நிறைய நல்ல கொழுப்புகள் உள்ளது. எனவே உங்களின் நம்பிக்கை உண்மையல்ல. வாரம் இருமுறை முந்திரி பருப்பு சாப்பிடுபவர்களின் உடல் எடை சீராக இருப்பதோடு குறையவும் உதவிசெய்கிறது.
 

Popular Posts


No comments:

Post a Comment