வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டுக்களை கொண்டு தங்கம் வாங்கிய ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 25, 2018

குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டுக்களை கொண்டு தங்கம் வாங்கிய ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு!



பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தங்க கடைக்கு சென்ற ஜோடி ஒன்று போலியான ரூபாய் நோடுக்களை கொண்டு ரூ. 2 லட்சத்திற்கு தங்கம் வாங்கி ஏமாற்றியுள்ளது. “ எண்டர்டைன்மெண்ட் பாங்க் ஆப் இந்தியா” என்று அச்சிடப்பட்ட சிறார்கள் விளையாடும் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து தங்கம் வாங்கியுள்ளது. 
 
 இதுதொடார்பாக தங்க கடைகாரர் வர்மா பேசுகையில் “கடைக்கு வந்த ஜோடி தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். அவர்கள் 59 கிராம் தங்கம் வாங்கினார்கள். அவசர அவசரமாக பணத்தை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள். (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!


 பணத்தை நான் சோதனை செய்த போது ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா என அச்சிடப்படும் இடத்தில், “ எண்டர்டைன்மெண்ட் பாங்க் ஆப் இந்தியா” என அச்சிடப்பட்டு இருந்தது. இதனையடுத்து பின்னால் சென்றேன், காரில் வந்தவர்கள் விரைந்து சென்றுவிட்டார்கள், என கூறியுள்ளார். 

 
 இதுதொடர்பாக போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சோதனையை மேற்கொண்டனர். அப்போது அதில் மோசடி செய்த ஜோடி சென்ற காரில் பதிவு எண் இல்லை என்பது தெரியவந்தது. போலீஸ் குற்றவாளிகளை வலை வீசி தேடிவருகிறது. இதுபோன்று பிற கொள்ளை சம்பவங்களில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரித்து வருகிறது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment