Run World Media: செவ்வாய்க்கிழமை ராத்திரி கெஸ்ட் ஹவுஸில் மீட் பண்ணலாம்.. ஆசை ஆசையாய் போய் பார்த்தால்!

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 26, 2018

செவ்வாய்க்கிழமை ராத்திரி கெஸ்ட் ஹவுஸில் மீட் பண்ணலாம்.. ஆசை ஆசையாய் போய் பார்த்தால்!பெண் பார்க்க தனியாக சென்றவரின் கதி என்ன ஆனது தெரியுமா ?
 சென்னை: கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணி, அதற்காக வரன் பேசப்பட்ட ஒரு பெண்ணை நேரில் பார்க்கலாம்னு ஆசை ஆசையா ஓடிசென்ற இளைஞர் ஆடிப்போய் நின்ற அதிர்ச்சி சம்பவம் இது! சென்னை எம்எம்டிஏ காலனி திருக்குறளார் தெருவை சேர்ந்தவர் சேர்ந்தவர் காளிசரண். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வீட்டில் நீண்ட காலமாகவே திருமணம் செய்ய அவரிடம் வற்புறுத்தி கொண்டே இருந்தனர். தட்டிக் கழித்துகொண்டே சென்ற காளிசரண், கடைசியாக 2 வருடத்திற்கு முன்புதான் கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டார்.

பெண்ணிடம் அழைப்பு
 ஆனால் 2 வருடமாகவே பெண் ஏதும் அமையவில்லை. இதற்காக மேட்ரிமோனியல் அமைப்புகளிடம் எல்லாம் அணுகி தனக்கேற்ற பெண் வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இதுபோல திருமண வரன் பார்க்கும் அமைப்புகளிடம் ஆன்லைன் மூலம் பதிவு செய்து வைத்திருந்தார். அதில் ஒரு அமைப்பின் மூலம் ஒரு பெண் காளிசரணுக்கு போன் செய்தார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

மீட் பண்ணலாமா?
 "என் பெயர் பிரியா ஐயர், பெங்களூரில் வேலை பார்க்கிறேன், உங்களை பற்றிய தகவல்களை ஆன்லைனில் பார்த்து விட்டோம். உங்களை நேரில் பார்க்க வேண்டுமே... ஒருமுறை நாம் பார்த்துவிட்டால் கல்யாணம் பேசி முடிக்க வேண்டியதுதான்" என்றார். இதற்கு காளிசரணும், "எப்போது, எங்கே பார்க்கலாம் என்று நீங்களே சொல்லுங்கள்" என்றார். பிரியா ஐயர், "செவ்வாய்கிழமை ராத்திரி சங்கம் தியேட்டரில் மீட் பண்ணலாம்" என்றார்.சங்கம் வேண்டாம் 
 ஆனால் காளிசரணுக்கு திரும்பவும் போன் செய்த பிரியா ஐயர், சங்கம் தியேட்டரில் வேண்டாம், வடபழனி மாலில் பாக்கலாம்" என்றார். திரும்பவும் போன் செய்து, "வடபழனி வேண்டாம்... பொன்னம்மாள் தெருவில் ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு... அங்க வந்திடுங்க" என்றார். இப்படி மாற்றி மாற்றி இடத்தை சொன்னாலும், 2 வருடமாக பெண் கிடைக்காமல் இப்போதுதான் ஒரு பெண் கிடைத்துள்ளதால், சொன்ன இடத்துக்கெல்லாம் காளி சரண் 'வருகிறேன்' என்றே சொன்னார்.


கெஸ்ட் ஹவுஸ் 
அதன்படி கடைசியாக அந்த பெண் சொன்ன இடத்துக்கு காளிசரண் போனார். கல்யாணம் செய்து கொள்ள போகும் பெண் எப்படி இருப்பார், எப்படி பழகுவார் என்ற எண்ணங்களுடனே காளிசரண் சென்றார். அப்போது பிரியா ஐயர், கெஸ்ட் ஹவுஸ் வாசலில் நின்றிருந்தார். தன்னை ஊர், பெயருடன் அறிமுகப்படுத்தி கொண்டார். பிறகு, "மாடியில் என் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள், வாங்க போகலாம்" என்று காளிசரணை கூட்டிக் கொண்டு ரூமுக்கு சென்றார். அங்கே 3 ஆண்களும் இருந்தனர்.போட்டோ எடுத்தனர்
 பெண்ணின் சொந்தக்காரர்கள் ஆயிற்றே என்று புன்னகையுடன் சென்றார். ஒரு வார்த்தைகூட காளிசரண் பேச ஆரம்பிக்கவில்லை, அதற்குள் வந்த 3 பேரும் கத்தியை எடுத்து கொண்டு காளிசரணை மிரட்டினர். செயின், மோதிரம், எல்லாத்தையும் கழட்டு என்று மிரட்டி வாங்கியதுடன், செல்போனை மற்றும் ஏடிஎம் கார்டினை பிடுங்கி கொண்டனர். பிறகு ஏடிஎம் பின்கோடு என்ன என்று கேட்டு அதையும் வாங்கி கொண்டனர். கடைசியாக காளிசரணை தனியாக நிற்க வைத்து போட்டோ எடுத்தனர். ஒருவேளை தங்களை பற்றி வெளியே போய் சொன்னால் இந்த போட்டோவை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று மிரட்டினர்.


4 பேர் அடையாளங்கள்
 ஆனாலும் இப்படி ஒரு பெண்ணை நம்பி ஏமாந்து எல்லாத்தையும் இழந்து விட்டோமே என்பதை காளிசரணால் ஏற்றுக் கொள்ளவே இல்லை. நேராக வடபழனி போலீஸ் ஸ்டேஷன் சென்று புகாரையும் கொடுத்து, வந்திருந்த 4 பேர் பற்றின அடையாளங்களையும் சொன்னார். இதுகுறித்து போலீசார் சம்பந்தப்பட்ட கெஸ்ட் அவுஸ் சென்று அங்கு விசாரணை நடத்தி வருவதுடன், அந்த தெருவில் உள்ள சிசிடிவி காமிரா காட்சிகளை கொண்டும் ஆய்வு செய்து வருகிறார்கள்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்