Run World Media: யார் இவர்? நிர்வாண போஸ்.. முத்தப் போராட்டம்.. புலியாட்டம்.. யார் இந்த ரெஹனா பாத்திமா?

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 20, 2018

யார் இவர்? நிர்வாண போஸ்.. முத்தப் போராட்டம்.. புலியாட்டம்.. யார் இந்த ரெஹனா பாத்திமா?முஸ்லீம் பெண் ரெஹனா பாத்திமா எப்படி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல முடியும் என்ற போர்க்குரல்களை காண முடிகிறது. ஆனால் முஸ்லீம் பெண் என்பதையும் தாண்டி ரெஹனாவின் பின்புலத்தைப் பார்த்தால் அவர் ஒரு பெண் போராளியாகவே வலம் வருவதை உணர முடிகிறது. 
 அவர் பெயரில் மதம் இருந்தாலும், மதத்தைத் தாண்டிய செயல்பாடுகளிலேயே அவர் அதிகம் ஈடுபட்டு வருகிறார். இவர் இந்துவாக மாறி விட்டதாக சொல்கிறார்கள். இந்து மதத் தலைவர்கள் குறிப்பாக ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ரெஹனா பாத்திமாவின் செயல்பாடுகளைப் பார்த்தால் அவர் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக போராடியுள்ளார் என்று தெரிய வருகிறது. அதில் முக்கியமானது கல்லூரி்ப் பேராசிரியருக்கு எதிரான போராட்டம் .(தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!


கொச்சைப் பேச்சுக்கு பதிலடி கோழிக்கோட்டில் உள்ள பரூக் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் கடந்த மார்ச் மாதம் மாணவிகளும், பெண்களும் தங்களது மார்புகளை முழுமையாக மறைக்கும்படி டிரஸ் அணிவதில்லை. ஏதோ பழக் கடையில் தர்பூசணிகளை பார்வைக்கு வைப்பது போல வெளிக்காட்டியபடி வருகிறார்கள் என்று ஆபாசமாக பேசியிருந்தார். இதற்கு ரெஹனாவும் அவரது தோழிகளும் கொடுத்த பதிலடியால் பரபரப்பு ஏற்பட்டது.


தர்பூசணியால் மார்புகளை மறைத்து போராட்டம் ரெஹனாவும் அவரது தோழிகள் தியா சேனா, ஆர்த்தி ஆகியோர் தர்பூசணிகளை வெட்டி அதை தங்களது நிர்வாண மார்புகளுக்கு முன்பு வைத்து மறைத்தபடி போஸ் கொடுத்து போட்டோ எடுத்து அதை பேஸ்புக்கில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த நூதனப் போராட்டம் கேரளாவில் பெரும் பரபரப்பையும், புயலையும் கிளப்பியது.


ஏன் எங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு இதுகுறித்து ரெஹனா கூறுகையில், ஆண்களுக்கு இந்த சமுதாயத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை, எந்த அடக்குமுறையும் இல்லை. ஆனால் பெண்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடுகள். உடல் ரீதியாக ஏன் பெண்களை கட்டுப்படுத்துகிறீர்கள், பாகுபடுத்துகிறீர்கள், கொச்சைப்படுத்துகிறீர்கள். அதை தட்டிக் கேட்கவே இந்த போராட்டம் என்று விளக்கினார்.முத்தப் போராட்டத்தில் ரெஹனா அதேபோல கேரளாவில் நடைபெற்ற முத்தப் போராட்டத்திலும் கலந்து கொண்டு மிரள வைத்தவர் ரெஹனா. அது மட்டுமல்லாமல் ஏகப்பட்ட போராட்டங்களில், குறிப்பாக பெண்களுக்கு ஆதரவான, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவான பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார் ரெஹனா. 31 வயதான ரெஹனா இரு குழந்தைகளுக்குத் தாய். அரசுப் பணியில் இருக்கிறார்.


புலியாட்டத்தில் பங்கேற்ற புரட்சியாளர் ஓணம் பண்டிகையின்போது கேரளாவில் புலி நடன விழா நடைபெறும். திருச்சூரில் நடைபெறும் புலிகளி (அதாவது புலி ஆட்டம்) வெகு பிரபலமானது. இதில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். ஆனால் ரெஹனாவும் அதில் கலந்து கொண்டு அதிரடி காட்டினார். கேரளாவில் புலி ஆட்டம் ஆடிய முதல் பெண்ணும் இவர்தான். சும்மா சொல்லக் கூடாது. ஆண் புலியாட்டக்காரர்களுக்கு கடுமையான டப் கொடுத்தது ரெஹனாவின் ஆட்டம்.பக்தர் வேடத்தில் போஸ் சமீபத்தில் அரை குறை உடையுடன் ஐயப்ப பக்தர் போல போஸ் கொடுத்து, தத்துவம் என்று தலைப்பிட்டு அவர் பேஸ்புக்கில் வெளியிட்ட படம் பெரும் சலசலப்பையும், பரபரப்பையும், கடும் கண்டனங்களையும் ஈர்த்தது என்பது நினைவிருக்கலாம். இப்படி சர்ச்சைகளின் நாயகியாக வலம் வரும் ரெஹனாதான் நேற்று சபரிமலைக்கு இருமுடி கட்டி வந்து பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி விட்டார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsNo comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்