வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உனக்கு எப்படிடா அந்த பொண்ணு செட் ஆச்சுன்னு வாயப் பொளந்தவான் தான் அதிகம்...
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 13, 2018

உனக்கு எப்படிடா அந்த பொண்ணு செட் ஆச்சுன்னு வாயப் பொளந்தவான் தான் அதிகம்...



நான் ஒரு சிங்கிள் சைல்ட். ஊருக்குள்ள எலி, வீட்டுக்குள்ள புலின்னு ஒரு பழமொழி சொல்லுவாங்களே அப்படியான ஒருத்தன் தான் நான். நான் ரொம்ப கோபக்காரன், திமிரா நடந்துக்குவேன், தேவை இல்லாம சண்டை போடுவேன், விட்டா யாரையாச்சும் அடிச்சிட்டு, வம்பிழுத்துட்டு வந்திடுவேன்னு என் அம்மா நெனச்சுட்டு இருக்காங்க. என் அம்மா மட்டும் தான் என்ன புலின்னு நெனச்சுட்டு இருக்காங்க. ஆனா, ரியல் லைப்ல நான் ஒரு எலி. ஸ்கூல், காலேஜ், ஆபீஸ்னு எல்லா இடத்துலயும் நான் ஒரு மீம் டெம்ப்ளேட் மாதிரியும், போகோ சேனல் மாதிரி தான் இருந்திருக்கேன், இருக்கேன்.


எனக்கும் கோபம் வரும்...
 என்ன கேலி, கிண்டல் பண்றவங்கள எல்லாம் திருப்பி கேலி பண்ணனும், திட்டனும்னு தோணும். ஆனால், நான் என்ன கேலி பண்ண ட்ரை பண்ணாலும், அதையே வெச்சி என்ன திருப்பி ட்ரால் பண்ணுவாங்க. இதனாலேயே முக்கால்வாசி சமயம் என்ன யாராச்சும் ட்ரால் பண்ணா, நானும் சேர்ந்து சிரிச்சுட்டு, முடிஞ்ச வரைக்கும் டாப்பிக்க மாத்திட்டு போயிடுவேன்.
(தொடர்ச்சிகீழே...)
இதையும் படிக்கலாமே !!!
அது ஏன்னு தெரியல... 
நிறைய கேலிக்கு ஆளாரவங்களுக்கு எல்லாம் காதலோ, இல்ல அவங்கள ஒரு அழகான பொண்ணு லுக்கு விடவோ கூடாதா என்ன? ஏன் எங்களுக்கு எல்லாம் மனசு இருக்காதா? அதுல காதல் வராதா?


என் பேரு... 
 எனக்கு அப்பா, அம்மா வெச்ச பேரு ஒன்னு தான். ஆனா, இந்த ஊரு வெச்ச பேரு நிறையா இருக்கு. ஆரம்பத்துல கொஞ்சம் குண்டா இருந்தேன். அதுக்கும் சில பேரு வெச்சு கலாச்சாங்க. பின்ன உடம்ப குறைச்சேன்.. அதுக்கும் கலாய்ச்சாங்க. ஒவ்வொருத்தன் என்ன கலாய்ச்சு டைம் பாஸ் பண்ணனும்னு வேண்டி, அப்பப்போ நிறையா பேரு வைப்பாங்க.


மீம்ஸ்!
 நீங்க நினைக்கலாம்.. ஊருக்குள்ள மலர்ந்தே தீரும் கட்சிய சேர்ந்தவங்கள தான் நிறையா மீம் போட்டு கலாய்க்கிறாங்கன்னு. அப்படி எல்லாம் இல்ல. என்ன மாதிரி ஒவ்வொரு ஃபிரெண்ட்ஸ் க்ரூப்லயும் ஒருத்தன் இருப்பான். நேரம் போகாட்டி, இல்ல அவன் ஏதாச்சும் தெரியாம பண்ணிட்டாலும்... வெச்சு செய்வாங்க. அப்ப மட்டும் எப்படி அவனுகளுக்கு கிரியேட்டிவிட்டி வந்து கொட்டுதுன்னு தெரியல.


காதல்!?
 எனக்கு ரொம்ப நாளா இருக்க சந்தேகம் இதுதான். நிறையா படங்களையும் இத பார்த்துட்டேன். காமெடி ஹீரோஸ்க்கு ஜோடியா மொக்கையா, லோக்கலா, கேரக்டர் இல்லாத மாதிரி ஏதாவது ஒரு பொண்ண தான் ஜோடியா போடுவாங்க. ஐ மீன், நான் என்ன சொல்ல வரேன்னா.. அப்படியான ஒரு கதாப்பாத்திரங்கள் காதலிக்கிற மாதிரி தான் காமிக்கிறாங்க. அது ஏன்?


ஒரு பொண்ணு..
 இதனாலேயே ரியல் லைப்லயும் எங்கள மாதிரியான பசங்கள ஒரு அழகான பொண்ணு, இல்ல கிளாஸ்ல ஃபர்ஸ்ட் மார்க் எடுக்குற பொண்ணு பார்த்தாலோ, பேசி, பிடிச்ச மாதிரி நடந்துக்கிட்டா... இவனுக்கு எல்லாம் எப்படி டா அந்த பொண்ணு மடங்குச்சு... ஒருவேள... அவ.......ன்னு அந்த பொண்ணையும் கேரக்டர் இல்லாத பொண்ணு மாதிரி ஏதாவது பேச ஆரம்பிச்சிடுவாங்க. நான் ஒன்னு தெரியாம கேட்கிறேன்.... உங்களுக்கு இருக்க அதே தான எனக்கும் இருக்கும். இல்ல எங்களுக்கு எல்லாம் அது இல்லன்னு நெனச்சு பேசிட்டு இருக்கீங்களா. நான் மனச சொன்னேன்.


அடிக்கணும் திட்டனும்!
 சில சமயம் அடிக்கனும், திட்டனும்னு நிறையா கோபப்பட்டு, ஆத்திரப்பட்டிருக்கேன். ஆனா, சரி! என்ன இருந்தாலும் ஃபிரெண்ட்ஸ் தானே சும்மா டைம் பாஸ்க்கு தான பேசுறாங்கன்னு விட்டுடுவோம். ஆனா, சில சமயத்துல அவனுங்க நம்மள ஃபிரெண்டாவே மதிக்கல, நம்மள டைம் பாஸ்க்கு தான் வெச்சிருக்காங்கன்னு தோணும் போது மனசுக்குள்ள எரிமலையே வெடிக்கும்.


ஃபிரெண்ட்ஸ்!
 அதுக்குன்னு நல்ல ஃபிரெண்ட்ஸ் இல்லன்னு சொல்லல. ஆனா, எங்கள வலுவா காயப்படுத்துற நபர்கள் அதிகமா இருக்காங்க. அதுல சில சமயம் உண்மையான ஃபிரெண்ட்ஸ்ம் இருக்காங்கன்ன்னு நினைக்கும் போதுதான்., மனசு இன்னும் அதிகமா வலிக்கும்.


ஒருவேளை... 
 ஒருவேளை சிங்கிள் சைல்டா இருக்குறனால தான் நான் இப்படி இருக்கேனோ... கூட பிறந்தவங்க யாராவது இருந்திருந்தா... சில பழக்க வழக்கங்கள் என்கிட்டே சகஜமா இருந்திருக்குமோன்னு நினைச்சிருக்கேன். ஸ்கூல் படிக்கும் போது அம்மா, அப்பாக்கிட்ட ஏன் தம்பி பாப்பா பெத்துக்கலனு கூட கேட்டிருக்கேன்


குழந்தைத்தனமா..
நானே, ரொம்ப வருஷம் கழிச்சு தவமிருந்த பெத்த குழந்தையாம். இதுவே எனக்கு ஒரு கட்டத்துக்கு மேல தான் தெரிஞ்சது. அதனால தான் அம்மா, அப்பா நான் என்ன கோபப்பட்டாலும் பொறுத்துட்டு இருந்திருக்காங்க. அவங்க அளவுக்கு மீறி என்மேல வெச்ச பாசம். என்ன ரொம்ப குழந்தைத்தனமாவே வளர வெச்சிடுச்சு. நான் ஃபிரெண்ட்ஸ் கூட விளையாண்டத விட, பொம்மைங்களோட விளையாடுனது தான் அதிகம்.


வெளியூர்! 
 காலேஜ் படிச்சு முடிச்ச பின்ன, வெளியூர்ல வேலைக்கு கிளம்பினேன். வேலை எல்லாம் ஈஸியா கிடைச்சிடுச்சு. இந்த ஊர்ல, இந்த இடத்துல எனக்கு தெரிஞ்சவன் யாருமில்ல... கொஞ்சம் கெத்தா நடந்துக்குவோம், யாரும் நம்மள கேலி, கிண்டல் பண்ணிடக் கூடாதுன்னு நிறையா பிளான் பண்ணேன்.


பாடி சோடா!
 ஆனா, என்னடா என் பின்னாடியே ஃபாலோ பண்றீங்களான்னு சொல்ற மாதிரி, மண்டை மேல இருக்க கொண்டைய மறந்திடுவேன். நான் வெகுளித்தனமா பேசுறது, குழந்தைத்தனமா ரியாக்ட் பண்றதுன்னு சில விஷயங்கள் என்ன அவங்க காமெடி பீஸா உபயோகப்படுத்திக்க நானே எடுத்துக்கொடுத்த மாதிரி ஆயிடும்.
ஸ்க்ரிப்ட்! 
 எங்க ஆபீஸ்ல ஒரு பொண்ணும் என்ன மதிக்காது. அந்த அளவுக்கு என் இமேஜ் டேமேஜ் ஆகிக்கிடக்குது. புதுசா ஜாயின் பண்ண பொண்ணுங்க கூட லஞ்ச் எல்லாம் போயிருக்கேன். எங்க என் கேங்ல யாருக்காவது தெரிஞ்சா கலாய்ச்சு தள்ளுவாங்கன்னு சொல்லாம போயிடுவேன். ஆனா, என் தலைவிதின்னு அவனுங்களும் அதே ஹோட்டல்ல வந்து உட்கார்ந்துட்டு இருப்பானுங்க. இதெல்லாம் என்ன படைச்சவன் எழுதுன ஸ்க்ரிப்ட்டா இல்ல, அதுவே இயல்பா நடக்குதான்னு பல தடவ நான் யோசிச்சது உண்டு.


எண்டு கார்டு!
 எல்லாத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி இருக்குல... க்ளைமேக்ஸ் இல்லாத ஓபனிங் சீன் எதுவுமே கிடையாது. ஷெட்டர துறந்தா, மூடி தானே ஆகணும். அந்த மாதிரி ஒரு அல்ட்ரா டக்கர் சீன் என் வாழ்க்கையில நடந்துச்சு. அதுக்கு முழுக்க, முழுக்க என் அம்மா தான் காரணம். ஏன்னா, அவங்க தான் அந்த பொண்ண பார்த்தாங்க. ஸ்கூல், காலேஜ், ஆபீஸ்னு ஒரு இடத்துல கூட, ஒரு சுமாரான பொண்ணு கூட டீ குடிக்க கூட என்ன நிம்மதியா விட்டது இல்ல என்னோட சோ கால்டு ஃபிரெண்ட்ஸ் டூ க்ளோஸ் ஃபிரெண்ட்ஸ்.


ஆண்டவன் கட்டளை!
 அந்த ஆண்டவன் நல்லவங்கள நிறையா சோதிப்பான் ஆனா, கைவிட மாட்டான்னு சூப்பர்ஸ்டார் சொன்ன மாதிரி. என்ன தான் என் வாழ்க்கை முழுக்க ஒரு கேர்ள் ஃபிரெண்ட் கூட இல்லாம அலையவிட்டாலும். கல்யாணம் பண்ணிக்க ஒரு அழகான, குணமான பொண்ண ஸ்க்ரிப்ட்ல ஒரு ட்விஸ்ட் க்ளைமேக்ஸ் மாதிரி எழுதி வெச்சிருந்தான். இது தான்டா நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுன்னு போட்டோவ காமிச்சா.. வாழ்த்துக்கள் சொன்னவங்கள விட, அவனுகளுக்குள்ளயே இவனுக்கு எப்படிடா இப்படி ஒரு பொண்ணு செட் ஆச்சுன்னு வாயப் பொளந்தவனுங்க தான் அதிகம். எனக்கு இப்ப இருக்க ஒரே ஒரு பயம் என்னனா.. இவனுங்க எங்க கல்யாண மேடையில வெச்சு கலாய்ச்சுடுவாங்களோங்கிறது தான்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment