வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உ.பி.,யில் ரயில் தடம் புரண்டு விபத்து
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 11, 2018

உ.பி.,யில் ரயில் தடம் புரண்டு விபத்து



உத்தர பிரதேசத்தில், எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில், ஏழு பேர் இறந்தனர்; 35க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்

.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மேற்கு வங்க மாநிலம், மால்டாவிலிருந்து, டில்லிக்கு, நியூ பராக்கா எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று காலை வந்து கொண்டிருந்தது.
 

உ.பி., மாநிலம், ரேபரேலி மாவட்டம், ஹர்சந்த்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்த போது, ரயிலின் இன்ஜின் மற்றும் ஒன்பது பெட்டிகள் தடம் புரண்டன.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இதனால், ரயிலுக்குள் ஆழ்ந்த துாக்கத்தில் இருந்த பயணியர் அதிர்ச்சியடைந்தனர்.இந்த விபத்தில், ஏழு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும், ௩௫ பேர் காயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து, அந்த வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பராக்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த பயணியர், பஸ்கள் மூலம் லக்னோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
 

ரயில் விபத்தில், ஏழு பேர் இறந்ததற்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.''விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா, ௫ லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா, ௧ லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும்,'' என, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். உ.பி., மாநில அரசும் இழப்பீடு அறிவித்துள்ளது.இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த, வடக்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு கமிஷனருக்கு, ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

 

No comments:

Post a Comment