வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இதயம் வேகமா துடிக்கும்போது ஒரு செகண்ட் எகிறி குதிச்சிருக்கா உங்களுக்கு? அது ஏன் தெரியுமா?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 13, 2018

இதயம் வேகமா துடிக்கும்போது ஒரு செகண்ட் எகிறி குதிச்சிருக்கா உங்களுக்கு? அது ஏன் தெரியுமா?



நம்முடைய இதயம் இயல்பாகத் துடித்துக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று, சில விநாடிக்ள எகிறி குதிப்பது போல் இருக்கும். பின் சிறிது வேகமாகத் துடித்து, பின் மீண்டும் இயல்பு நிலைக்கு மாறும். அப்படி திடீரென இதயம் எகிறிக் குதித்துத் துடிக்க என்ன காரணம், அது ஏதாவது ஒரு பிரச்சினைக்கான அறிகுறியா? அதற்கு தீர்வு தான் என்பது பற்றி விரிவாக்க காண்போம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இதயத் துடிப்பு
 திடீரென்று இதயம் எகிறிக் குதிக்கும்போது, அந்த சில விநாடிகள் நமக்குப் பதட்டமும் ஒருவித பயமும் உண்டாகும். நம்மால் எதுவும் யோசிக்க முடியாமல் நிலைகுழைந்து போய்விடுவோம். அப்படி வருகிறபொழுது, நாம் எல்லோருமே அதிகமாக கவலைப்படுவதுண்டு. நமக்கு ஏதோ பெரிய இதயப் பிரச்சினை இருக்கிறது என்றும் மாரடைப்பு வந்துவிடும் என்று கவலைப்படுவோம். இந்த கவலை உண்மைதானா? அப்படி இதயம் குதிக்கும்போது என்ன ஆகும் என்று இங்கு பார்ப்போம். எப்போதாவது ஏற்பட்டால் அதற்கு சில காரணங்கள் உண்டு. ஆனால் அடிக்கடி இந்த பிரச்சினை உண்டானது என்றால், உடனே தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

(தொடர்ச்சிகீழே...)
இதையும் படிக்கலாமே !!!
வேகமாக துடித்தல்
 இதயம் எகிறிக் குதிக்கிறது என்று யாராவது நம்மிடம் சொன்னால், நமக்கு சிரிப்பு வரும். எனக்கும் சில சமயம் அப்படி இருக்கும் என்று சொல்வதோடு சரி. ஆனால் நீங்கள் ஒன்றை கவனித்தீர்களா என்று தெரியவில்லை. சில சமயம் நம்முடைய இதயம் அதி வேகத்தில் துடித்துக் கொண்டிருக்கும். அப்படி துடிக்கும்போது நம்முடைய மார்புப் பகுதியும் நெஞ்சுப்பகுதி முழுக்க துடிப்பது போல் தோன்றும். ஆனுால் நன்றாக கவனித்தால் புரியும். அந்த சமயத்தில் கழுத்துப்பகுதி அல்லது தொண்டைப் பகுதியிலும் அந்த அதிர்வை உங்களால் உணர முடியும்.


அறிகுறிகள் 
 இப்படி இதயம் எகிறிக் குதித்து துடிப்பதற்கு முன் மூச்சு விட சிரமப்படுதல், வேகமாக மூச்சு விடுதல், குறைந்த அளவு மூச்சு விடுதல், அதிகப்படியான தும்மல், மூச்சுவிட சிரமப்படுதல், கழுத்து எழும்பில் லேசான வலி ஆகிய அறிகுறிகள் உண்டாவதை உங்களால் உணர முடியும்


காரணங்கள் அதிக மன அழுத்தம் 
இதயத் துடிப்பு சீராக இல்லாமல் இருத்தல், வேகமாகத் துடிப்பது, இதயம் எகிறிக் குதிப்பது போல் இருப்பது ஆகியவை உண்டாக மிக முக்கியக் காரணமாக இருப்பதுவே இந்த அதிகப்படியான மன அழுத்தம் தான். எப்போது நீங்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகிறீர்களோ அப்போது உங்களுடைய உடல் அட்ரீனல் என்னும் ஹார்மோனைச் சுரக்கிறது. அப்படி சுரக்கும் ஹார்மோனால் ரத்த அழுத்தம் அதிகமாகி, இதயமும் அதிவேகமாகத் துடிக்க ஆரம்பித்துவிடும். எப்போதாவது மன அழுத்தம் ஏற்பட்டு, ஹார்மோன் சுரப்பு அதிகரித்தால் இதயத் துடிப்பு வேகமாக இருப்பதை உங்களால் உணர முடியும். மன அழுத்தம் உங்களுடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டால், இயல்பாகவே உங்களுடைய இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்து விடும்


தேவையில்லாத உடற்பயிற்சி
 உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது என்பது உண்மை தான். ஆனால் சில பேரைப் பார்த்திருப்போம். உடம்புக்கு நல்லது என்று சொல்லிக் கொண்டு, ஜிம்முக்கு போய் அதிகமாக உடற்பயிற்சி செய்வது, எப்போதும் உடற்பயிற்சி, உடற்பயிற்சி என்று திரிவார்கள். அதுவும் பேராபத்து தான். எந்த விஷயத்துக்கான உடற்பயிற்சி செய்கிறோம் என்று தெரிந்து கொண்டு, செய்ய வேண்டும். அதற்காக உடற்பயிற்சியை சட்டென்று நிறுத்திவிட்டாலும் அட்ரீனல் சுரப்பு அதிகரித்து, இதயத் துடிப்பின் வேகமும் அதிகரிக்கத் தொடங்கிவிடும். இப்படி இருந்தால், 911 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும்.


அதிக காபி 
 எதுவுமே அளவோடு சாப்பிடுவது நல்லது தானே. பொதுவாக நாம் சோர்ந்து இருக்கும்பொழுது தான் காபி குடிப்போம். ஏனென்றால், சோர்வாக இருக்கும்போது, காபி குடித்தால், கொஞ்சம் சுறுசுறுப்பாகும். அந்த சுறுசுறுப்பு என்பதே இதயத் துடிப்பை வேகப்படுத்துவது தான். ஆமாங்க. அதனால் அளவோடு காபி குடிப்பது நல்லது. மிக அதிகமாக காபி குடிக்கும் போது, இதயத் துடிப்பும் வேகமாகத் துடிக்க ஆரம்பித்து விடும்.


மது அருந்துதல்
 உங்களுடைய உடல் உறுப்புகளுக்கு மிகப்பெரிய எதிரியே மது தான். குறிப்பாக இதயத்துக்கு. விஸ்கி, ஓட்கா போன்ற ஸ்ட்ராங்கான ஆல்கஹால் இருந்தும்போது, உங்களுடைய இதயத் துடிப்பு தன்னிலை மறந்து தாறுமாறாகத் துடிக்க ஆரம்பித்துவிடும். அதேபோல் தான் சிலர் ஆல்கஹாலுக்கு மிக்சிங்காக எனர்ஜி டிரிங் கலப்பார்கள். இது மிக மிக பேராபத்தை ஏற்படுத்தும்.


ஹார்மோன் மாற்றங்கள்
 நம்முடைய உடலில் உண்டாகின்ற சில ஹார்மோன் மாற்றங்களாலும் கூட, இதயத் துடிப்பு வேகமாகும். அதுபோன்ற சமயங்களில் இதயம் துடித்துக் கொண்டிருக்கும் சில சமயம் எகிறிக் குதிப்பது போல் தோன்றும். இது பெண்களுக்கு மாதவிடாய் காலங்கள், கர்ப்ப காலம் மற்றும் மெனோபஸ் காலங்களில் இந்த ஹர்மோன் மாற்றங்கள் ஏற்படும். அவை தான் அவர்களுக்கு பதட்டுத்துக்குரிய காலகட்டமாக இருக்கும். ஆண்களும் இதுபோன்ற ஹார்மோன் மாற்றங்களால் இதயத் துடிபக்பு அதிகரித்தாலும் அவ்வப்போது உங்களுடைய ரத்த அழுத்த அளவை பரிசோதிப்பது நல்லது.


மருந்துகளும் துணை மருந்துகளும்
 இதயத் துடிப்பு திடீரென அதிகரிப்பது, எகிறிக் குதிப்பது போன்றவை தொடர்ந்து கொண்டே இருப்பதால், உடனடியாக மருத்துவரைச் சந்தித்து தக்க மருந்துகள் எடுத்துக் கொள்வதும் இதய பாதிப்புகளைத் தவிர்க்கும் சில ஊட்டச்சத்துக்கள் கொண்ட சப்ளிமெண்ட் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது. இதில் மூலிகை மருந்துகளும் வீட்டு வைத்திய முறைகளும், உணவு வழியான சப்ளிமெண்ட்டுகளும் சிறந்த தீர்வாக அமையும். பக்க விளைவுகளும் இல்லாதது.


மினரல்கள் பற்றாக்குறை
 இதயம் துடித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென எகிறிக் குதிப்பது உங்களுடைய உடல் உறுப்புகளுக்குப் போதிய அளவிலான மினரல்க்ள கிடைக்கப் பெறாததன் அறிகுறி தான் என்பதை முதலில் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். குறப்பாக, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி ஆகிய ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறையாலும் இந்த இதயத் துடிப்பு அதிகரிப்பது உண்டாகிறது. அதனால் இதற்கான சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொள்வது மிக நல்லது


தைராய்டு
 தொடர்ந்து அடிக்கடி இந்த இதயத்துடிப்பு அதிகரிப்பது மற்றும் எகிறிக் குதிப்பது ஏற்பட்டுக் கொண்டே இருந்தால், அதற்கு இன்னொரு முக்கிய காரணமாக தைராய்டு பிரச்சினை இருக்கும். உடல் அதிகமாக சோர்வடைவது, இரவு நேரங்களில் அதிகமாக வியர்ப்பது, ஆகியவை ஏற்படும். அதோடு ஹைப்போ தைராய்டு பிரச்சினை இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை அதிகமாகவே இருக்கும்.


என்ன தீர்வு? 
காபி குடிக்கும் அளவினை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டே வாருங்கள். எந்த விஷயத்தையும் மனதின் உள்ளுக்குள் எடுத்துக் கொண்டு, அதிலும் குறிப்பாக, எதிர்மறை விஷயங்களை மனதுக்குள் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படி அதிகமாக தண்ணீர் குடிப்பதால், நரம்பு மண்டலமும் தசைகளும் சீராக இயங்கும். ரத்த ஓட்டமும் சீரடையும். புகைப்பிடித்தல் பழக்கத்தை முதலில் நிறுத்த வேண்டும். புகைப்பிடிப்பது நுரையீரல் மட்டுமல்ல, இதய ஆரோக்கியத்துக்கும் அதிக அளவிலான கெடுதலைத் தரும்.


சரியான உணவு
 சிலர் காலை உணவை தவிர்ப்பது, மதிய உணவை தவிர்த்தால் சிக்கல் வராது, இரவு சாப்பிடாமல் தூங்கினால் எடை குறையும் நிறைய தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. மூன்று நேரமும் கட்டாயம் சாப்பிட வேண்டும். ஆனால் சரிவிகித ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சரியான அளவில் எடுத்துக் கொள்வது நல்லது.


சிகிச்சை
 மேற்கண்ட விஷயங்களை முறையாகக் கடைபிடித்தாலே இதயத் துடிப்பு உங்களுக்கு மிக சீராக இருக்கும். அதையும் தாண்டி, உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று தகுந்த சிகிச்சை மேற்கொள்வது நல்லது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment