வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அருவருப்பை ஏற்படுத்திய மாவட்ட கேரம் போட்டி
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, October 07, 2018

அருவருப்பை ஏற்படுத்திய மாவட்ட கேரம் போட்டி


ராமநாதபுரம்:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நடத்தப்பட்ட கேரம் போட்டி மாணவர்கள் தங்கியிருக்கும் அரங்கில் மகா மட்டமாக நடத்தப்பட்டது.


இந்த போட்டியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்றனர். முதன்முறையாக ஆன்-லைனில் புகைப்படத்துடன் கையெழுத்திட்டு விண்ணப்பிக்க கூறியிருந்தது. நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்க 70 பேர் ஆன்-லைனில் பதிவு செய்தனர். இதில் 63 பேர் பங்கேற்றனர்.



மாணவர்கள் மழையை பொருட்படுத்தாமல் பங்கேற்றனர். ஆனால், போட்டி நடத்தப்பட்ட இடம் அருவருப்பை ஏற்படுத்தியது. மாணவியரும் பங்கேற்ற போட்டி நடந்த அரங்கில் விளையாட்டு விடுதி மாணவர்களின் உள்ளாடைகள் உள்ளிட்ட அனைத்து துணிகளும் தொங்கிக் கொண்டிருந்தன. அதன் கீழ்தான் போட்டி நடத்தப்பட்டது. இது மாணவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.



மாவட்ட விளையாட்டு அலுவலர் பிராங்க்பால் ஜெயசீலனிடம் கேட்டபோது, 'மாணவர் விடுதி பணி ஒருவாரத்தில் நிறைவடையும். அதன்பின் அனைவரும் அங்கு செல்வர். மழை நேரமாக இருந்ததால் வேறு வழியின்றி அங்கு போட்டி நடத்தும் நிலை ஏற்பட்டது, என்றார்.


Popular Posts

No comments:

Post a Comment