வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மாடல் அழகி கொலை செய்யப்பட்டு சூட்கேசில் அடைத்து ரோட்டோரம் வீச்சு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 16, 2018

மாடல் அழகி கொலை செய்யப்பட்டு சூட்கேசில் அடைத்து ரோட்டோரம் வீச்சு



மும்பை மாலத் சாலையில் பெரிய சூட்கேசுக்குள் அடைத்து வைக்கப்பட்ட  ஒரு மாடல் அழகியின்  உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
                                    
அவரது பெயர் மன்ஸி தீட்சித், ராஜஸ்தான் கோட்டாவை சேர்ந்தவர். இவர் மாடலிங் தொழில் செய்து வந்தார். சிறிய அளவில் வணிக தொழிலிலும் ஈடுபட்டிருந்தார். ஆந்தேரியில் உள்ள இன்ஃபினிட்டி மால் அருகில் அவரது அலுவலகம் அமைந்துள்ளது.(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இவரை யாரோ கொலை செய்து முழு உடலையும் பெரிய சூட்கேசுக்குள் அடைத்து ரோட்டில் வீசி இருந்தனர்.
இந்த சமபவம் தொடர்பாக போலீசார் ஐதராபாத்தை சேர்ந்த முஸம்மில் சையத் (வயது 19) என்பவரை கைது செய்து உள்ளனர். இவர் அந்தேரி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

முஸம்மில்லிற்கு மாடல் அழகி மான்ஸிக்கும் பழக்கம் இருந்து உள்ளது.  சம்பவத்தன்று  முஸம்மில் மான்சியை தனது பிளாட்டிற்கு அழைத்து உள்ளார். ஒரு கட்டத்தில் அங்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில்  முஸம்மில் மான்ஸியை தாக்கி கொலை செய்து உள்ளார். பின்னர் மான்சி உடலை ஒரு பெரிய சூட்கேசில் வைத்து அடைத்து, ஓலா டாக்சி ஒன்றை புக் செய்து விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும் என கூறி உள்ளார்.

பின்னர் மிட்வே, மலாத் வெஸ்ட் நகரில் உள்ள மைண்ட்ஸ்பேஸ் நகருக்கு செல்லும்படி  டிரைவரிடம் கூறி உள்ளார், இது ஒதுக்குபுறமான இடம் என்று கூறப்படுகிறது. அவர் மைண்ட்ஸ்பேஸ் அருகே இறங்கினார், பின்னர் மீதி தூரத்தை ரிக்‌ஷாவில் செல்வதாக கூறி டிரைவரை அனுப்பி விட்டார்.  பின்னர் ஒரு புதரில் சூட்கேசை வீசி விட்டு, வீட்டுக்கு  ரிக்ஷாவில் திரும்பி உள்ளார்.
அதே ரோட்டில் ஓலா டிரைவர் திரும்பி வரும்போது, ரோட்டோரம் புதரில் சூட்கேஸ் இருப்பதை பார்த்து போலீசிடம் தகவல் கொடுத்து உள்ளார். உடனடியாக சம்பவ இடம் வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து முஸம்மிலை கைது செய்து உள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment