வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தினம் ஒரு நாலடியார் அர்த்தத்துடன் - Daily one Naaladiyar with meaning - 31 - 26/10/2018
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 26, 2018

தினம் ஒரு நாலடியார் அர்த்தத்துடன் - Daily one Naaladiyar with meaning - 31 - 26/10/2018

தினம் ஒரு நாலடியார்



பாடல் - 31.

அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத்
தவத்தால் தவஞ்செய்யா தார்
.

அர்த்தம் :



(அதற்கும் முன் பிறப்பில் தவம் செய்யாத காரணத்தால்) முற்பிறப்பில் தவம் செய்யாதவர், 'இவ்வீட்டில் உள்ளவர்களே சிறப்புடன் வாழ்பவராவர்! என்று கருதி உயர்ந்தோங்கி நிற்கும் ஒரு வீட்டை அண்ணாந்து நோக்கி, உள்ளே போக முடியாதவராகி, தலை வாயிலைப் பிடித்துக்கொண்டு மிக வருந்தியிருப்பர். (முற்பிறப்பில் தவம் செய்யாதவர் என்றதனால், அதற்கு முன் பிறப்பிலும் அவர் தவம் செய்யாதவர் என்பது கருத்து. 'தவமும் தவமுடையார்க்கு ஆகும்' என்பது திருக்குறள்.)

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment