வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தனுஷின் ‘வடசென்னை’ படத்துக்குக் கிடைத்த பெருமை - Vada Chennai Tamil Movie - Relese Date
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 04, 2018

தனுஷின் ‘வடசென்னை’ படத்துக்குக் கிடைத்த பெருமை - Vada Chennai Tamil Movie - Relese Date






தனுஷ் நடித்துள்ள ‘வடசென்னை’ படத்துக்கு, வேறெந்த தமிழ்ப் படத்துக்கும் கிடைக்காத பெருமை கிடைத்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வடசென்னை’. ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், ராதாரவி, சீனு மோகன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வடசென்னையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ஹீரோவின் 30 வருட வாழ்க்கை சொல்லப்படுகிறது.
வருகிற 17-ம் தேதி உலகம் முழுவதும் ‘வடசென்னை’ ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், சீனாவின் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிட இந்தப் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிங்யாவோ சர்வதேசத் திரைப்பட விழா, நவம்பர் 11-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்த விழாவில், 3-ம் நாளன்று ‘வடசென்னை’ படம் திரையிடப்பட இருக்கிறது. இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Popular Posts

No comments:

Post a Comment