வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: குழந்தை ஆபாச படம் வைத்திருந்தால் 5 ஆண்டு சிறை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, November 25, 2018

குழந்தை ஆபாச படம் வைத்திருந்தால் 5 ஆண்டு சிறை



குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் படம்-, வீடியோ வைத்திருந்தால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில் சட்ட திருத்தத்தை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


நாட்டில், குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படங்களை, வணிக ரீதியாக சேமிப்பதும், வினியோகிப்பதும் மிகப்பெரிய குற்றம்.இந்த விவகாரத்தில், பிரதமர் அலுவலகம் மிகவும் கவலை அடைந்துள்ளது. இதை ஒழித்துக் கட்ட, கடும் நடவடிக்கைகளை எடுப்பது குறித்து, பிரதமர் அலுவலகம் ஆலோசித்து வருகிறது.  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!


இந்நிலையில், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் வீடியோவை வைத்திருக்கும் அல்லது சேமித்து வைக்கும் நபர்களுக்கு, 'போக்சோ' சட்டத்தின் கீழ், ஐந்து ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கக் கூடிய வகையில், சட்ட திருத்தம் மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மேலும், இந்த விவகாரத்தில் கைது செய்யப்படும் நபர்களுக்கு, ஜாமின் வழங்கப்பட மாட்டாது. இரண்டாவது முறை இதே குற்றத்தை செய்தால், சம்பந்தப்பட்ட நபருக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.சமூக வலைதளமான, 'வாட்ஸ் ஆப்'பில், குழந்தைகள் ஆபாச படங்கள், வீடியோக்கள் வைத்திருந்தால், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.


திருத்தம் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்த மசோதா, மத்திய சட்ட அமைச்சகம், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் ஆகியவற்றின் ஒப்பதலுக்காக காத்திருக்கிறது.'இது குறித்து, அடுத்த வாரத்தில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்' என, தகவல்கள் தெரிவிக்கின்றன.




அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

 

No comments:

Post a Comment