வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: எழுத்தறிவு தேர்வில் 96 வயது பாட்டி சாதனை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 02, 2018

எழுத்தறிவு தேர்வில் 96 வயது பாட்டி சாதனை



திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில், முதியோருக்கான தேர்வில், 96 வயது பாட்டி, 98 சதவீத மதிப்பெண் பெற்று, சாதனை படைத்துள்ளார்.


கேரளாவில், எழுத, படிக்க தெரியாத முதியோருக்கு எழுத்தறிவு அளிப்பதற்காக, மாநில எழுத்தறிவு இயக்கத்தின், 'அக் ஷராலக் ஷம்' திட்டம் துவங்கப் பட்டது.இந்த திட்டப்படி, ஐந்து நிலைகளில் முதியோருக்கு கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!


இத்திட்டத்தில் சேரும் முதியோருக்கு, தாய்மொழியில் எழுத, படிக்கவும், அடிப்படை கணிதமும் கற்றுத் தரப்படுகின்றன.சமீபத்தில், மாநில அரசு நடத்திய தேர்வை, 43 ஆயிரம் பேர் எழுதினர். அவர்களில், 42 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.நான்காம் நிலை தேர்வில், கார்த்தியாயினியம்மா, 96, என்ற பாட்டி, 98 சதவீத மதிப்பெண் பெற்று, சாதனை படைத்தார்.


இன்று, முதல்வர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில், கார்த்தியாயினியம்மாவுக்கு, முதல்வர் பினராயி விஜயன், சான்றிதழ் வழங்கவுள்ளார். கோவில்களில் துப்புரவு பணி செய்து வரும் கார்த்தியாயினியம்மா, அடுத்ததாக, ஆங்கிலம் கற்க விரும்புவதாக கூறியுள்ளார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment