வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பழங்குடியின பெண்ணாக மாறும் நிக்கி கல்ராணி
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 15, 2018

பழங்குடியின பெண்ணாக மாறும் நிக்கி கல்ராணி



கவர்ச்சி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துவந்த நிக்கி கல்ராணி, தற்போது முதல் முறையாக பழங்குடியின பெண்ணாக நடிக்க இருக்கிறார்.


‘1983’ எனும் மலையாள படம் மூலமாக சினிமாவிற்குள் நுழைந்த நிக்கி கல்ராணிக்கு அந்தப் படமே நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. அந்தப் படத்திற்காக பல விருதுகளையும் அவர் பெற்றார். பின்னர் கன்னடம், மலையாளம் என வலம்வந்த அவர், டார்லிங் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் வரிசையாக தமிழ்ப் படங்களில் நடித்து வரும் அவருக்கு தற்போது சார்லி சாப்ளின் 2, கீ என சில படங்கள் கைவசம் உள்ளன. 
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இந்நிலையில் மீண்டும் மலையாள சினிமா பக்கம் திரும்பியுள்ளார் நிக்கி. இதிகாஷா 2 என்னும் படத்தில் அவர் தற்போது நடிக்கஉள்ளார். பினு எஸ் இதை இயக்க உள்ளார். கவர்ச்சி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துவந்த நிக்கி கல்ராணி, இதில் பழங்குடியின பெண்ணாக நடிக்க இருப்பதால் நடிப்பு ரீதியாக அவருக்கு இது ஒரு சவால் மிக்க படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் இந்திரஜித் கதாநாயகனாக நடிக்கிறார். இந்திரஜித்தின் மனைவிக்கும் நிக்கிக்கும் இடையே ஏற்கெனவே நட்பு இருந்தாலும், இந்திரஜித்தும் நிக்கியும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 25-ம் தேதி கொச்சியில் தொடங்குகிறது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment