வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஓடும் பஸ்சில் ஒரு டெலிவரி.. ரபீனாவுக்கு ஆண் குழந்தை.. தாயும் சேயும் நலம்..
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 19, 2018

ஓடும் பஸ்சில் ஒரு டெலிவரி.. ரபீனாவுக்கு ஆண் குழந்தை.. தாயும் சேயும் நலம்..



பஸ் நடுரோட்டில் போய்க் கொண்டிருந்தபோதே அந்த பெண்ணுக்கு டெலிவரி ஆகிவிட்டது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆலமியான். இவரது மனைவி ரபீனா. தங்கள் மாநிலத்தில் வேலை எதுவும் கிடைக்காமல் பிழைப்பு தேடி இங்கே வந்தார்கள். பழனி அருகே ஒரு உள்ள கோழிப்பண்ணையில் ரெண்டு பேரும் வேலை செய்து வந்தார்கள்.

 இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இப்போது ரபீனா 3-வது நிறைமாத கர்ப்பம். இந்நிலையில், ஆலமியான், ரபீனாவையும் 2 குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு, 
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
உறவினர் ஒருவரை பார்த்துவிட்டு பழனிக்கு பஸ்ஸில் ஏறினார். நிறைமாத ரபீனாவை ரொம்ப ஜாக்கிரதையாகத்தான் பஸ்சில் ஏற்றினார்.



பிரசவ வலி 
பஸ் தாராபுரம் அருகே குள்ளாய்பாளையம் பக்கம் போய் கொண்டிருந்தது. அப்போது ரபீனாவுக்கு திடீரென பிரசவ வலி வந்துவிட்டது. அதனால் வலி தாங்க முடியாமல் ரபீனா கத்தினார். இதை பார்த்து மற்ற பயணிகளும் ஷாக் ஆனார்கள். நடுவழியில் என்ன செய்வதென்றும் யாருக்குமே தெரியவில்லை.

பெண்கள் உதவி 
ஒரு சில பெண்கள் மட்டும் ரபீனாவுக்கு உதவ வந்தார்கள். மேலும் டிரைவரிடம் சென்று வண்டியை ஓரங்கட்ட சொன்னார்கள். அது அது புறநகர் பகுதி வேறு. பக்கத்தில் கடைகள், வீடுகள், ஆஸ்பத்திரி என எதுவுமே கிடையாது. அதனால் டிரைவரும் பஸ்ஸை ஒரு ஓரமாக நிறுத்தினார்.


திக் திக் நிமிடங்கள் 
உடனே பஸ்சில் இருந்த பயணிகள் எல்லோரும் கீழே இறங்கிவிட்டார்கள். உதவிக்கு வந்த பெண்கள் மட்டும் பஸ்சுக்குளேயே இருந்து ரபீனாவிற்கு உதவினார்கள். கீழே நின்றிருந்த டிரைவர், கண்டக்டர், ஆலமியான் உள்ளிட்ட எல்லா பயணிகளுக்கும் திக் திக் என்றே இருந்தது.

ஆண் குழந்தை 
கொஞ்ச நேரத்தில் குழந்தை சத்தம் கேட்டுவிட்ட பிறகுதான் எல்லோருக்கும் நிம்மதியும் சிரிப்பும் வந்தது. ரபீனாவுக்கு சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. இப்போது பிறந்திருப்பது ஆண் குழந்தை. அதன் பின்னர் எல்லோரும் பஸ்சுக்குள் ஏறி குழந்தையை பார்த்தனர்.


சிகிச்சை டிரைவரும் 
இப்போது வண்டியை தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஓட்டினார். அங்கு ரபீனாவை பத்திரமாக இறக்கிவிட்டு விட்டு அனைவரும் பஸ்சில் திரும்பி சென்றார்கள். பிறகு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரபீனாவிற்கும், குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தாயும் - சேயும் நலம் 
ஓடுகிற பஸ்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்துவிட்டது என்ற செய்தி அந்த பகுதியில் பரவிவிடவும், எல்லோரும் குழந்தையை பார்க்க ஆஸ்பத்திரிக்கு வர ஆரம்பித்துவிட்டனர். இப்போது தாயும் - சேயும் சவுக்கியமாக இருக்கிறார்கள்!

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment