வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அஜித்துடன் அடுத்த படமா? அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்த எச்.வினோத்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 15, 2018

அஜித்துடன் அடுத்த படமா? அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்த எச்.வினோத்



அஜித்தின் அடுத்த படத்தை எச்.வினோத் இயக்கவிருப்பதாக முன்னதாக தகவல் தெரிவித்திருந்த நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வினோத் கேட்டுக் கொண்டுள்ளார்.


சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட வெற்றிப் படங்களை படங்களை இயக்கியவர்
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
எச்.வினோத். இவர் அடுத்ததாக அஜித்தின் தல 59 படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

வினோத் இயக்கும் படம் இந்திப் படத்தின் ரீமேக் என்றும், புதிய கதை என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில், இன்னமும் படக்குழு அதனை உறுதிப்படுத்தவில்லை. 

இந்த நிலையில், எச்.வினோத் பெயரில் உள்ள ஒரு ட்விட்டர் கணக்கில் இருந்து தல 59 படம் ரீமேக் இல்லை என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்கும் விதமாக எச்.வினோத் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் எனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும். மற்றபடி என் பெயர் மூலம் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். மேலும், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த சமூக வலைதளங்களிலும் எனக்கு கணக்கு இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment