Run World Media: பாத்ரூம் போனேனா.. குழந்தை பொறந்திருச்சு.. சிசுவை வாளியில் போட்ட கொடுமைக்கார பெண்!

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, November 3, 2018

பாத்ரூம் போனேனா.. குழந்தை பொறந்திருச்சு.. சிசுவை வாளியில் போட்ட கொடுமைக்கார பெண்!"பிரசவ வலி வந்தது.. ஆஸ்பத்திரி பாத்ரூம் போனேன்.. என் வாயில துணியை அடைச்சி வச்சிக்கிட்டு, குழந்தையை பெற்றெடுத்தேன்... அங்க இருந்த ஒரு வாளியில் அந்த சிசுவை போட்டு மூடிவிட்டு வந்துட்டேன்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார் கல்யாணம் ஆகாத இளம்பெண் ஒருவர். சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு நேற்றிரவு 12 மணிக்கு நிறைமாத கர்ப்பிணி இளம்பெண் வந்தார். 
அவருடன் 4 ஆண் நண்பர்கள் கூட வந்திருந்தார்கள். இளம் பெண்ணை செக்-அப் செய்த டாக்டர்கள் இன்னைக்கு, இல்லைன்னா நாளைக்கு குழந்தை பிறந்திடும், அதனால உடனே அட்மிட் ஆயிடுங்க என்று சொன்னார்கள். அந்த நேரம் பார்த்து இளம்பெண்ணுக்கு வயிறு வலிக்க ஆரம்பித்தது. அதனால் பாத்ரூம் போகிறேன் என்று சொல்லிவிட்டு போனார். (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
குழந்தை அழுதது
 அதனால்கூட வந்த ஆண் நண்பர்கள் வெளியில் காத்திருக்க இளம்பெண் மட்டும் பாத்ரூமுக்குள் போனார். போனவர் வெளியே வரவே இல்லை. அரை மணி நேரம் கழித்து வெளியே வந்த அந்த பெண் காத்து கொண்டிருந்த ஆண் நண்பர்களிடம், வாங்க வீட்டுக்கு போகலாம் என்று சொல்லி வேகவேகமாக ஆஸ்பத்திரியை விட்டு போய்விட்டார். விடிகாலை கொஞ்ச நேரம் கழித்து பாத்ரூமில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்கவும் எல்லோரும் ஓடிச் சென்று பார்த்தார்கள். 


சிசிடிவி கேமரா 
அப்போது தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை இருந்தை ஒரு வாளிக்குள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். இதையடுத்து அந்த குழந்தை மீட்கப்பட்டு முதலுதவி தரப்பட்டது. பின்னர் அந்த குழந்தை யாருடையது என விசாரணை நடத்தினார்கள். ஆஸ்பத்திரியில் அன்றைய தினம் யாருக்குமே குழந்தை பிறக்கவில்லை என தெரியவந்தது. எனவே உடனடியாக சூளைமேடு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து தங்கள் விசாரணையை துவக்கியபோதுதான் இளம்பெண் சிக்கினார்.


கல்யாணமே ஆகலை
 இதையடுத்து ஆஸ்பத்திரியில் அந்த பெண் தந்த முகவரியை பெற்றுகொண்ட போலீசார் இறுதியில் இளம்பெண்ணை கண்டுபிடித்தனர். அப்போது குழந்தையை பற்றி விசாரித்தபோது, அப்படி ஒரு குழந்தை தனக்கு பிறக்கவே இல்லை என்றும் தனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை என்று பெண் சாதித்து பேசினார். ஆனால் போலீசார் அந்த பெண்ணை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து கொண்டு மருத்துவமனை சிசிடிவி காமிராக்களில் பதிந்த காட்சிகளை போட்டு காட்டினர்.


மயங்கி விழுந்துட்டேன்
 பிறகு அந்த பெண் கதறி கதறி அழ ஆரம்பித்துவிட்டார். "என் பெயர் நித்யா. நான் ஒரு வக்கீல். காரைக்குடியில் என் ஃப்ரண்டு கல்யாணத்துக்கு போனேன். அப்போ எனக்கு ஜூஸ் கொடுத்தாங்க. அதை குடிச்சிட்டு மயங்கி விழுந்துட்டேன். அதுக்கு அப்பறம் என்ன நடந்ததுன்னே தெரியல. நான் கர்ப்பமாக இருக்கிற விஷயம்கூட எனக்கு உடனே தெரியாது. மெதுவாகத்தான் தெரிஞ்சது.


கலைக்க முடியல
 டாக்டர் கிட்ட கலைக்க ஓடினேன். கருவை கலைக்க எவ்வளவோ பாடுபட்டேன். கலைக்கவே முடியல. அதனாலதான் நேத்து ஆஸ்பத்திரி போனேன். பிரசவ வலி வந்துடுச்சு. அதனால பாத்ரூம் போய் என் வாயில துணியை அடைச்சி வச்சிக்கிட்டு, குழந்தையை பெற்றேன். பெற்ற குழந்தையை அங்க இருந்த ஒரு வாளியில் வைத்து மூடிவிட்டு வந்துட்டேன். என் அம்மா, அப்பா ஊரில் இருக்கிறார்கள், அவங்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா அவ்வளவுதான்" என்றார்.


நானே வளர்க்கிறேன் 
 இவ்வளவும் சொல்லி முடித்தபின், நித்யா பெற்ற குழந்தையை தானே வளர்ப்பதாக என்று சொல்லி குழந்தையை வாங்கி சென்றிருக்கிறார். என்றாலும் இந்த சம்பவம் குறித்து நித்யாவிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsNo comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்