வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: குழந்தைகளே நீண்ட நேரம் செல்போனில் விளையாடுகிறீர்களா?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 05, 2018

குழந்தைகளே நீண்ட நேரம் செல்போனில் விளையாடுகிறீர்களா?



குழந்தைகளே நீங்கள் செல்போனில் விளையாடுவதை சந்தோஷமாக நினைக்கிறீர்கள், ஆனால் அதன் மூலமாக உங்களுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 
குட்டீஸ், உங்களுக்கு மிக மிகப் பிடித்த விளையாட்டுப் பொருள் என்றால், அது அம்மாவின் செல்போன்தானே. உங்களைப்போலவே உங்கள் தோழிகளும், நண்பர்களும் அம்மாவின் போன்களில் விளையாடுவதாக பெற்றோர்கள் வருத்தத்துடன் கூறுகிறார்கள். நீங்கள் செல்போனில் விளையாடுவதை சந்தோஷமாக நினைக்கிறீர்கள், ஆனால் அதன் மூலமாக உங்களுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் என்று தெரியுமா? (தொடர்ச்சி கீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!

செல்போனில் விளையாடும் நீங்கள் ஓடி விளையாட மறந்து வருகிறீர்கள். அதன் மூலம் கிடைக்கும் பயனையும் இழந்து வருகிறீர்கள். கிரிக்கெட், செஸ், கேரம், கால்பந்து, பேட்மிட்டன் போன்ற இன்னும் பல பாரம்பரிய விளையாட்டுகள் ஆரோக்கியம் தரக்கூடியவை. ஆனால் இந்த விளையாட்டுகளை செல்போன், கணினியில் விளையாடுவதால் எந்த பயனும் இல்லை. புதையல் எடுத்தல், ஷூட்டிங், குக்கிங், டெம்பிள்ரன், ரேஸ் என செல்போனில் நீங்கள் விளையாடும் அத்தனை விளையாட்டுகளும் சுவாரஸ்யமானவைதான். அவை உங்கள் மூளை வளர்ச்சியைத் தூண்டும் வேகத்தைப்போலவே மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வேகமும் அதிகமாக இருக்கிறது.



“குழந்தைகளின் மூளை வளர்ச்சி, முதல் மூன்று வயது வரை வேகமாக இருக்கும் இருக்கும்.. அப்போது மூளையைத் தூண்டிவிடும் விளையாட்டுகளை விளையாடும் போது குழந்தைகளின் கற்பனைத்திறன், கூர்ந்து கவனிக்கும் திறன் மேம்பட்டுப் படைப்பாளியாக மாறுவார்கள். ஆனால், டிவி, கணினி, செல்போன் போன்ற சாதனங்கள், குழந்தைகளை முடக்கினால் ஒரு ரோபோ போல உருவாகி எதிர்காலத்தில் யாரிடம் எப்படி பேசவேண்டும், பழக வேண்டும் எனத் தெரியாமல் தவறான முடிவு எடுப்பவர்களாக மாறும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்” என்று நிபுணர்கள் வருத்தத்துடன் கூறுகிறார்கள்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



No comments:

Post a Comment