வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தற்கொலை செய்து கொள்கிறோம்... அக்கம்பக்கத்தினரே எங்களை மன்னித்து விடுங்கள்.. சென்னையில் பரபரப்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 05, 2018

தற்கொலை செய்து கொள்கிறோம்... அக்கம்பக்கத்தினரே எங்களை மன்னித்து விடுங்கள்.. சென்னையில் பரபரப்பு


தீபாவளி சீட்டை திருப்பி தராததால் தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரட்டூரைச் சேர்ந்தவர் அமலா ஜான் (60). இவரது மகன் ஜோஷ்வா (29). அமலாவின் கணவர் எழும்பூரில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
  இந்நிலையில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அமலா தனது மகனுடன் வசித்து வந்தார். தீபாவளி பண்டிகையையொட்டி அமலா அவர் பகுதியில் வசிக்கும் நபர்களிடம் பணம் பெற்று சீட்டுக் கம்பெனி நடத்தியுள்ளார். இவர்களிடம் 275 பேர் சீட்டு பணம் கட்டியுள்ளனர். பணத்தை வசூலிப்பது கணக்கு பார்ப்பது ஆகியவற்றில் தாய்க்கு உதவியாக ஜோஷ்வா இருந்துள்ளார். (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
மொத்த பணமும்
 இந்நிலையில் சீட்டு சேர்த்ததன் மூலம் வாங்கிய பணத்தை ஜோஷ்வா பங்குச் சந்தையில் முதலீடு செய்தார். இந்நிலையில் பங்குச் சந்தையில் போட்ட மொத்த பணமும் நஷ்டம் ஏற்பட்டது. சீட்டு பணம் கட்டியவர்கள் பணத்தை திருப்பி கேட்கத் தொடங்கினர். இதனால் அச்சமடைந்த அமலாவும் ஜோஷ்வாவும் தற்கொலை செய்ய முடிவு செய்துவிட்டனர்.


நாய்க்கு விஷம்
 இதையடுத்து அவர்கள் ஆசையாய் வளர்த்த நாய்க்கு சாப்பாட்டில் விஷம் கொடுத்துள்ளனர். பின்னர் இருவரும் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் பொதுவாக அமலா காலையில் எழுந்து நாய்க்கு சாப்பாடு கொடுத்துவிட்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் பேசிச் செல்வார்.



ஜன்னல்
ஆனால் 2 நாட்களாக வீட்டை விட்டு அமலா வெளியே வரவில்லை. ஜோஷ்வாவும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அமலாவின் வீட்டு ஜன்னல் வழியாக பார்த்தனர்.


கைப்பற்றினர் 
 அப்போது இருவரும் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் அமலா எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.

தற்கொலை கடிதம் 
அதில் சீட்டுக் கம்பெனியில் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என்பதால் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களிடம் பணம் கட்டியவர்கள் மன்னித்து விடுங்கள். எங்களது நாயை கவனிக்க யாரும் இல்லை என்பதால் விஷம் கொடுத்துவிட்டோம் என்று தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment