வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தீபாவளிக்கு வீட்டை சுத்தம் பண்றத நினைச்சாலே தலை சுத்துதா? ஒரு ஈஸியான வழி சொல்லட்டுமா?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 05, 2018

தீபாவளிக்கு வீட்டை சுத்தம் பண்றத நினைச்சாலே தலை சுத்துதா? ஒரு ஈஸியான வழி சொல்லட்டுமா?


தீபாவளி வந்து விட்டது. இன்னும் ஒரு வாரத்தில் தீபாவளி. ஆண்டுதோறும் கொண்டாடும் பண்டிகைகளில் சிறுவர் முதல் பெரியவர் வரை எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு பண்டிகை தீபாவளி. தீபாவளியைத் தொடர்ந்து விருந்தினர் வருகை, விருந்து என்று வீடே களை கட்டும்.
 
 ஆனால் அதற்கு முன்பு ஒரு பெரிய வேலை உள்ளது. அது வீட்டை சுத்தம் செய்வது. பண்டிகை காலத்திற்கு முன் வீட்டை சுத்தம் செய்வது நமது பழக்க வழக்கத்தில் ஒரு முக்கிய விஷயமாகும். விழாக்காலங்களில் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம் செல்வம் மற்றும் வளம் நம் வீடு தேடி வரும் என்பது நமது நம்பிக்கை. ஆகவே வீட்டை எளிய முறையில் சுத்தம் செய்வது எப்படி என்பதை நாம் இந்த பதிவில் காணலாம். (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
வீடு சுத்தம் செய்தல் 
அதன் முதல் படி, ஒரு நேரத்தில் ஒரு அறையை மட்டுமே சுத்தம் செய்வது. அந்த அறையில் உள்ள பொருட்கள் மற்றும் அறைகலன்களை எடுத்து அடுத்த அறையில் வைத்து விட்டு அந்த அறை முழுவதும் சுத்தம் செய்யலாம். பிறகு அந்த அறையை சுத்தம் செய்து முடித்தவுடன் அடுத்த அறையில் கை வைக்கலாம். ஒரு அறையில் உங்கள் கை வண்ணத்தால் பளிச்சென்று சுத்தம் செய்தவுடன் உங்கள் மீது உங்களுக்கே ஒரு தனி நம்பிக்கை தோன்றும். இதன்மூலம் வீடு முழுவதையும் எளிதில் சுத்தம் செய்து முடித்து விடலாம். இப்போது சில எளிய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முயற்சித்து உங்கள் வீட்டை அழகுடன் பராமரிக்கலாம்.


துணி வைக்கும் அலமாரி 
ஒரு வருடத்திற்கு மேல் பயன்படுத்தாத பொருட்களை அப்புறப்படுத்தி விடுங்கள்- இது உலகம் முழுவதும் உள்ள எல்லா மக்களுக்கும் பொருந்தும். உங்கள் துணி அலமாரியில் நீங்கள் பயன்படுத்தாத ஆடைகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். உங்களால் தற்போது அணிய முடியாத ப்ளவுஸ், உங்கள் கணவனின் பழைய டி ஷர்ட் என்று எதுவாக இருந்தாலும் அவற்றை அப்புறப்படுத்திவிட்டு, அலமாரியில் உள்ள தூசியை அகற்றி சுத்தம் செய்யுங்கள். அலமாரியை சுத்தம் செய்யும்போது மூன்று விஷயத்தை கவனத்தில் கொள்ளவும். அந்த ஆடைகள் அல்லது பொருட்களில் உங்களுக்கு தேவையானது , தூக்கி எறியவேண்டியது, ஆல்டர் அல்லது ரிப்பேர் செய்து வைத்துக் கொள்ள வேண்டியது. அலமாரியை மூன்றாகக் பிரித்துக் கொண்டு அந்தந்த இடத்தில் இந்த மூன்று பிரிவுகளில் உங்கள் பொருட்களை அடுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.


பொம்மைகள் 
அழகாக இருக்கும் சில பொம்மைகள் அல்லது ஆடைகள் உங்கள் குழந்தைக்கு தற்போது பயனுள்ளதாக இல்லாததாக இருந்தால் அவற்றை வேறு யாருக்காவது தானமாக கொடுத்து விடுங்கள். தீபாவளி நாட்களில் மற்றவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் பலன் உங்களுக்கு கிடைக்கும்.


சமையலறை சுத்தம்
 இது தீபாவளிக்கு பிறகு செய்ய வேண்டியது. தீபாவளி பண்டிகைக்காக பல சுவையான பலகாரங்கள் செய்து உங்கள் சமையலறை அசுத்தமாக காணப்படலாம். அதனை சுத்தமாக துடைத்து அழகாக பராமரிப்பதன் அவசியம் இருக்கிறது.


இடத்தை ஒதுக்குங்கள்
 சமயலறையில் தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்துங்கள். நீங்கள் பயன்படுத்தாத பொருட்களை எடுத்து விடுங்கள். சமையலறை ஷெல்ப் மற்றும் அலமாரியை சுத்தம் செய்வதற்கு வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு வெள்ளை வினிகர் சேர்த்து அந்த நீரில் ஒரு துணியை நனைத்து பிழிந்து துடைக்கலாம். எண்ணெய் பிசுக்குகள் வெளியேறியவுடன் மறுபடி சாதாரண நீரால் அந்த இடத்தை துடைத்து விடலாம். பிறகு ஈரமில்லாத துணியால் துடைப்பதால் உங்கள் சமையலறை ஷெல்ப் மற்றும் அலமாரிகள் பளிச்சென்று இருக்கும்.


இடத்தை அழகாக ஆக்கிரமியுங்கள்
 படைப்பாற்றலோடு சிந்தியுங்கள். அலமாரிக்கு கீழே ஆணி அடித்து அதில் மக் மற்றும் கப் போன்றவற்றை மாட்டி வைக்கலாம். கண்ணாடி பொருட்கள் மற்றும் சாமான்களை வைத்துக் கொள்ள அடுக்குகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். அரிதாக பயன்படுத்தும் பொருட்களை அலமாரியின் மேல் அடுக்கில் அல்லதுஅலமாரியின் பின்பக்கத்தில் வைத்துக் கொள்ளலாம்.


லேபில் பயன்படுத்துங்கள் 
 நீங்கள் பயன்படுத்தும் பொருட்களில் லேபில் ஒட்டிக் கொள்வதால் எளிதில் அவற்றை யாராலும் அடையாளம் காண முடியும். மேலும் ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு நிற லேபிளை தேர்வு செய்யலாம். உதாரணத்திற்கு இந்திய மசாலாப் பொருட்களுக்கு சிவப்பு நிற லேபில், இத்தாலிய வகைக்கு நீல நிற லேபில் என்று வகை படுத்திக் கொள்ளலாம். இதனால் அவசரத்திலும் எளிதாக அவற்றைக் கண்டு பிடிக்க முடியும்.


பிரிட்ஜை சுத்தம் செய்வது 
 உங்கள் பிரிட்ஜை சுத்தமாக்க, வினிகரில் அரை எலுமிச்சை பழச் சாறை கலந்து கொண்டு சுத்தம் செய்யலாம். அதேபோல பிரிட்ஜில் எந்தெந்த பொருள்களை எங்கெங்கு வைக்க வேண்டும் என்ற வரைமுறையின் படி அடுக்கி வையுங்கள்.


படுக்கையறை 
 படுக்கை அறையில் உள்ள எல்லாப் பொருட்களையும் நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்யலாம் அல்லது வெயில் காய வைக்கலாம். நிறைய பூச்சிகளின் இடமாக விளங்கும் படுக்கை அறையை முடிந்த அளவுக்கு முழுவதும் எல்லா மூலைகளையும் கூட சுத்தம் செய்யுங்கள். பிறகு ஹிட் போன்ற கிருமி நாசினியை பயன்படுத்தி அறையை சுத்தம் செய்யலாம். மேட்ரஸ் என்னும் அடி மெத்தையில் மூட்டை பூச்சிகள் மற்றும் அழுக்குகள் படிந்திருக்கும் அதனால் அதனை வெளியில் எடுத்து சுத்தம் செய்யுங்கள். கதவு மற்றும் ஜன்னல் போன்றவற்றையும் முழுவதும் துடைத்து சுத்தம் செய்ய மறக்க வேண்டாம். ஜன்னல் கண்ணாடிகள், கண்ணாடி மேற்பரப்புகளை சுத்தம் செய்யும்போது மென்மையான மைக்ரோ பைபர் துணி அல்லது செய்தி தாள்கள் மூலம் சுத்தம் செய்யலாம்.

குளியலறை
 குளியலறைக்கு சுத்தம் செய்ய உள்ளே சென்றவுடன், அதன் கதவில் ஒரு பெரிய பையை மாட்டிக் கொள்ளுங்கள். அதில் காலி பாட்டில், ஷாம்பூ கவர், மற்றும் பாட்டில், உடைந்த மக் போன்றவற்றை போட்டு நிரப்பிக் கொள்ளுங்கள். கழிப்பறையில் டாய்லெட் கிளீனர் ஊற்றி முதலில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். குளியலறை பொருட்களான சோப், ஷாம்பூ, பக்கெட், மக் என்று எல்லாவற்றையும் வெளியில் வைத்து விட்டு, எல்லா அடுக்குகளையும் கிளீனர் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிரஷ் அல்லது ஸ்காட்ச் ப்ரைட் பயன்படுத்தி நன்றாக தேய்த்து கழுவிக் கொள்ளுங்கள். பிறகு டெட்டால் கொண்டு மறுமுறை சுத்தம் செய்து கொள்ளுங்கள். வெள்ளை வினிகர் மற்றும் தண்ணீர் சம அளவு சேர்த்த திரிவம் பயன்படுத்தி டூத் பிரஷ் ஸ்டான்ட், கண்ணாடி, சோப் டப்பா, வாஷ் பேசின் போன்றவற்றை சுத்தம் செய்யலாம். ஷவர் ஹெட் மற்றும் குழாய்களையும் சுத்தம் செய்ய மறக்க வேண்டாம். அறையின் அலமாரிகளை சுத்தம் செய்த பின்பு தரையை கழுவத் தொடங்குங்கள்.


கழிப்பறை
 கழிப்பறை கம்மொடை பிரஷ் கொண்டு தேய்த்து பின்பு ப்ளஷ் செய்யுங்கள். தரையில் உள்ள அதிகப்படி நீரை உறிஞ்ச வைப்பரை பயன்படுத்துங்கள். பிறகு குளியலறை முற்றிலும் காய்ந்தவுடன் வெளியில் எடுத்து வைத்த பொருட்களை மறுபடி அடுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.


மற்ற முக்கிய இடங்கள்
 பேன் மற்றும் கிரில் பேனில் அழுக்கு இல்லாமல் இருக்கும் போது காற்று அதிகமாகவும் சில்லென்றும் வரும். இது உண்மை , முயற்சித்து பாருங்கள். ஒரு சிறிய ஏணி அல்லது ஸ்டூலில் ஏறி, பேனில் உள்ள விசிறிகளை ஒரு துணியால் துடைத்து அழுக்கை நீக்கி விடுங்கள். பிறகு ஈர துணியால் மறுபடி துடைத்து விடுங்கள். பிறகு பாருங்கள், முன்பைக் காட்டிலும் அதி வேக மற்றும் குளிர்ந்த காற்று உங்களுக்குக் கிடைக்கும்.


பெட் பாக்ஸ் 
 இதனை பலரும் அரிதாக பயன்படுத்துவோம். எப்போதாவது இதனைத் திறந்து போர்வை அல்லது வேறு பருவ மாற்ற ஆடைகளை எடுக்க மட்டுமே இதனைத் திறப்போம். ஆகவே இந்த நேரத்தில் இந்த பாக்ஸை முற்றிலும் சுத்தம் செய்யலாம். அதில் உள்ள எல்லாப் பொருட்களையும் வெளியில் எடுத்து விட்டு அதனை சுத்தம் செய்யலாம்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



No comments:

Post a Comment