Run World Media: கணவருக்கு விஷம்.. கள்ளக்காதலன் மீது பாசம்..

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 7, 2018

கணவருக்கு விஷம்.. கள்ளக்காதலன் மீது பாசம்.."அழகர்சாமியை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.. அதனாலதான் இப்படி செஞ்சிட்டேன்" என்று போலீசில் தெரிவித்துள்ளார் இளம்பெண்! தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் தம்பதி ஈஸ்வரன் - கலைமணி. கல்யாணம் ஆகி 3 வருஷமாச்சு. ஒன்றரை வயசில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. 

 
கலைமணிக்கு 19 வயதாகிறது. ஈஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்திருக்கிறது. இதனால் இருவருக்குள்ளும் நிறைய முறை சண்டை வந்திருக்கிறது. போன மாதம் 8-ம் தேதி ஈஸ்வரன் திடீரென இறந்துவிட்டார். இதனை அறிந்த ஈஸ்வரன் பெற்றோர் மிகுந்த அதிர்ச்சி அடைந்து பிள்ளையை பறிகொடுத்த வேதனையில் கதறி அழுதார்கள்.  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

குழந்தை ஒப்படைப்பு  
ஆனால் அவர்களுக்கு மேல் அழுதார் கலைமணி. "இப்படி குடிச்சி குடிச்சியே என்னையும், பிள்ளையும் தனியா விட்டுட்டு போய்ட்டாரே" என்று கூப்பாடு போட்டார். கலைமணி சொந்தக்காரர்கள் எல்லாரிடமும் சென்று இதையே சொல்லி சொல்லி அழுதார். பிறகு திடீரென ஒருநாள், தன் குழந்தையை எடுத்து கொண்டு போய் மாமனாரிடம் ஒப்படைத்தார். அதோடு வீட்டில் இருந்த 10 ஆயிரம் ரூபாய், 3 சவரன் நகை எல்லாத்தையும் எடுத்துகொண்டு வெளியே சென்றுவிட்டார்.


அழகர்சாமி 
குழந்தையை ஏன் ஒப்படைத்தார், நகை, பணத்தை எங்கே கொண்டு போனார் என அப்போது மாமனாருக்கு புரியவில்லை. அதோடு மருமகளும் மாயமாகி விட்டார். இதனால் மாமனாருக்கு சந்தேகம் வலுத்து கொண்டே இருந்தது. பிறகு ஒருநாள் அழகர்சாமி என்ற இளைஞருடன் கலைமணி ஜாலியாக ஊர் சுற்றி கொண்டிருப்பதை நேரடியாக பார்த்துவிட்டார். ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த மாமனார், நேராக ராயப்பன்பட்டி போலீசுக்கு போய் விட்டார்.

உடலில் விஷம்  
இப்படி ஜாலியாக மருமகள் ஊர் சுற்றி வருவதால், தன் மகனின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதனால் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கா வேண்டும் என்றும் சொன்னார். இதையடுத்து தாசில்தார் முன்னிலையில் ஈஸ்வரன் உடல் தோண்டப்பட்டது. பிரேத பரிசோதனையும் நடத்தப்பட்டது. உடலில் விஷம் கலந்திருப்பதாக மருத்துவ அறிக்கை வந்தது. இதையடுத்து கலைமணியிடம் விசாரணையை ஆரம்பிக்கும்போதே எல்லா உண்மையையும் பயத்தில் கொட்டி விட்டார்.


ரொம்ப பிடிக்கும் 
"எனக்கு அழகர்சாமியை ரொம்ப பிடிச்சு போச்சு. அதனால் ரெண்டு பேருக்கும் கள்ள உறவு இருந்தது. எவ்வளவோ ஜாக்கிரதையாக நாங்கள் இருந்தும், என் புருஷன் இதை கண்டுபிடிச்சுட்டார். எப்பவுமே எங்கள் உறவுக்கு தொந்தரவாகவே இருந்தார். அதனால்தான் அவர் சாப்பிடும்போது அந்த சாப்பாட்டில் விஷம் கலந்து தந்துட்டேன்" என்றார். இதையடுத்து கலைமணி, அழகர்சாமி இருவரும் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலர்கள் தற்போது ஜெயிலில் கம்பி எண்ணி வருகிறார்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்