வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தூக்கில் தொங்கிய கர்ப்பிணி.. வேகமாக வந்து பிரசவம் பார்த்த பெண் போலீஸ்.. அதிரவைத்த சம்பவம்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 21, 2018

தூக்கில் தொங்கிய கர்ப்பிணி.. வேகமாக வந்து பிரசவம் பார்த்த பெண் போலீஸ்.. அதிரவைத்த சம்பவம்!



மத்திய பிரதேசத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்து வயிற்றில் இருந்த குழந்தையை வெற்றிகரமாக வெளியே எடுத்துள்ளனர். 


மத்திய பிரதேச மாநிலம் கட்னி என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த லட்சுமி தாக்குர் மற்றும் சந்தோஷ் தாக்குர் தம்பதிக்கு 4 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர் ஐந்தாவது முறையாக கர்ப்பம் தரித்து, குழந்தை பிறப்பிற்காக காத்து இருந்துள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

தற்கொலை செய்து கொண்டார் 
இந்த நிலையில் திடீர் என்று நேற்று முதல் நாள் இரவு அவர் வீட்டிற்கு பின்பக்கம் இருந்த மாட்டு தொழுவத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நிறை மாத கர்ப்பிணியான அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. தன் மனைவி தூக்கில் தொங்கி இருந்ததை பார்த்த சந்தோஷ் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

சோதனை செய்தனர் 
இதையடுத்து அந்த இடத்துக்கு சப் இன்ஸ்பெக்டர் கவிதா சக்னி வந்துள்ளார். உடலை கீழே இறக்க அந்த பெண்ணுக்கு அருகே சென்றவர், அப்போதுதான் அவர் கர்ப்பமாக இருந்ததை கண்டுபிடித்துள்ளார். அதோடு அந்த குழந்தை, தாயின் உடலில் இருந்து பாதி வெளியே வந்து தொங்கி கொண்டிருந்ததையும் பார்த்து அதிர்ந்துள்ளார்.


வெளியே எடுத்தார்  
இதனால் அந்த போலீஸ் அதிகாரியே வேகமாக செயல்பட்டு, அந்த குழந்தையை வெளியே எடுத்தார். லட்சுமி தாக்குர் ஏற்கனவே இறந்துவிட்டதால் வேகமாக அந்த குழந்தையை போலீஸ் அதிகாரி வெளியே எடுத்தார். அருகாமையில் இருந்த மருத்துவருக்கு போன் செய்துவிட்டு அவரின் அறிவுரையின் பெயரில் பிரசவம் பார்த்துள்ளார்.

வெற்றி
அதன்பின் அங்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். குழந்தையின் தொப்புள் கொடி வெட்டப்பட்டு தற்போது அந்த குழந்தை பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண்ணின் தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment