வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பல லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் வைத்திருந்த பிரபல டிவி நடிகை கைது
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 17, 2018

பல லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் வைத்திருந்த பிரபல டிவி நடிகை கைது



போதைப் பொருள் வைத்திருந்த மலையாள நடிகை அஸ்வதி பாபு மற்றும் அவரின் கார் டிரைவர் கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அஸ்வதி பாபு(22). படங்களில் துணை நடிகையாகவும், டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். 
  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

அவர் கொச்சியில் உள்ள த்ரிக்காக்காரா பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் அஸ்வதியிடம் எக்ஸ்டசி போதைப் பொருள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


ரெய்டு 
போலீசார் நேற்று அஸ்வதியின் வீட்டில் திடீர் என்று சோதனை நடத்தினர். அப்பொழுது பல லட்சம் மதிப்புள்ள எக்ஸ்டசி போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அஸ்வதியும், அவரின் கார் டிரைவர் பினாய் ஆபிரகாமும் வாடிக்கையாளரிடம் போதைப் பொருளை விற்பனை செய்ய காத்திருந்தபோது போலீசாரிடம் சிக்கினார்கள்.

அஸ்வதி 
அஸ்வதி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் நள்ளிரவு பார்ட்டிகளில் பயன்படுத்தப்படுவது ஆகும். போலீசார் அஸ்வதி மற்றும் பினாயை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பினாய் தான் பெங்களூரில் இருந்து அந்த போதைப் பொருளை வாங்கி வந்து அஸ்வதியிடம் கொடுத்துள்ளார்.


கண்காணிப்பு 
ரகசிய தகவல் கிடைத்த பிறகு போலீசார் அஸ்வதியை சில வாரங்களாக கண்காணித்துள்ளனர். அதன் பிறகே நேற்று அஸ்வதியும், பினாயும் கையும் களவுமாக சிக்கியுள்ளனர். இந்த போதைப் பொருள் நெட்வொர்க் பெரியதாக இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

ரூ. 200 கோடி 
கடந்த செப்டம்பர் மாதம் எர்ணாகுளத்தில் மட்டும் ரூ. 200 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் அஸ்வதியிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் மல்லுவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment