Run World Media: 08/19/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, August 19, 2018

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை முழுவதும் படிக்க.


கனமழை : வால்பாறை தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு


நிவாரணப்பொருள் அனுப்ப ரயிலில் கட்டணம் இல்லைகேரளாவுக்கு ரயிலில் அனுப்பும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டணம் கிடையாது' என ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்துள்ளார்.ரயில்வே அமைச்சர் பியுஷ்கோயல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 'இந்தியா முழுவதும் இருந்து கேரளாவுக்கு ரயிலில் அனுப்பும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது' என கூறியுள்ளார். மேலும் கேரளாவில், எம்.எம்.எஸ்., மற்றும் இணைய வசதியை பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பி.எஸ்.என்.எல்., சார்பில் நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்களுக்கு இலவச 'வாய்ஸ் கால்' அனைத்து நெட்வொர்க்கிற்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு லாரி மணல் ரூ.35 ஆயிரம் வெள்ளத்தால் மேலும் உயரும்?ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மணல் தட்டுப்பாடு அதிகரித்து, ஒரு லாரி மணல், 35 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது. தொடர் வெள்ளத்தால், இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.கடந்த மாதம் வரை, திருச்சியில் மட்டுமே அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. அங்கிருந்து, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் முழுவதும் மணல் விற்பனை செய்யப்பட்டது. 


 

ஆன் - லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு, 40 நாட்களுக்கு பின், எஸ்.எம்.எஸ்., மூலம், லாரியுடன் வந்து மணலை பெற்றுச் செல்லுமாறு குறுந்தகவல் அனுப்பப்படும்.அந்த, எஸ்.எம்.எஸ்., தகவலை திருச்சி மணல் விற்பனை யார்டில் காண்பித்து, லாரிகளில் மணலை எடுத்து வர வேண்டும். தினமும், 150 - 200 லாரிகளுக்கு மட்டுமே மணல் கிடைக்கும். ஆனால், ஆன் - லைனில் தினமும், 10 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்து காத்திருப்பர். பதிவு செய்து குறைந்தபட்சம், 45 நாட்களுக்கு பிறகே கிடைக்கும். 2 யூனிட் அளவு கொண்ட ஒரு லாரி மணல், 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.இதனால், மணல் வியாபாரத்தை நம்பி இருந்த பலரும் ஏமாற்றமடைந்து, மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர்.
 

 மணல் தேவையை கருத்தில் கொண்டு, மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டை கிராமத்தில் அரசு மணல் குவாரிக்கு அனுமதிஅளிக்கப்பட்டது. இங்கிருந்து, சிவகங்கை அருகே உள்ள காயாங்குளம் கிராமத்திற்கு கொண்டு சென்று, அங்கிருந்து, ஆன் - லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
 

மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் மணல் லோடு கேட்டு, ஆன் - லைனில் முன்பதிவு செய்ய துவங்கினர்.ஆனால், கிராம மக்கள் எதிர்ப்பு காரணமாக குவாரி திறக்கப்படவில்லை. தற்போது வைகை தவிர மற்ற அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரியில் செயல்பட்டு வந்த, மணல் குவாரியும் மூடப்பட்டுவிட்டது.வைகை அணையின் நீர்மட்டம், 65 அடியை கடந்து விட்டதால், இன்று முதல் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தெ.புதுக்கோட்டை குவாரியும் செயல்பட வாய்ப்பில்லை. ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருந்த மணல் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என்பதால் மணல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.சிவகங்கை மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர், செந்தில் கூறியதாவது:இதுவரை ஒரு லாரி மணல்,25 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. ஆவணி பிறந்து கட்டடப்பணிகள் துவங்கும் நிலையில் அரசு குவாரிகளில் மணல் இல்லை. இருக்கும் மணல் லோடு, 35 ஆயிரத்திற்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க.,வுடன் கூட்டணி: விரும்புது பா.ஜ.க., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்


 

வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற, பா.ஜ., மேலிடம் விருப்பம் தெரிவித்துள்ளது. தி.மு.க., தரப்பில், இன்னும், 'கிரீன் சிக்னல்' தரப்படவில்லை.  
இதனால், 'மாஜி' மத்திய அமைச்சர் அழகிரியை, பகடைக்காயாக பயன்படுத்தி, தி.மு.க.,விற்கு நெருக்கடி கொடுக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தி.மு.க., தலைவர் கருணாநிதி, உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதும், 'அவருக்கு வேண்டிய உதவிகள் செய்ய தயாராக உள்ளோம்' என, பிரதமர் மோடி அறிவித்தார்.

நாளைய மின் தடை - 20.08.2018 - Tomorrow Power Shutdown

காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரைஅரியலுார் துணை மின் நிலையம்: அரியலுார், அத்தியூர், தொழுவந்தாங்கல், கடுவனுார், பெரியக்கொள்ளியூர், வடமாமாந்துார், ஈருடையாம்பட்டு, சின்னக்கொள்ளியூர், அருளம்பாடி
 சுத்தமலை, ஓடியந்தல், வாணாபுரம், சீர்ப்பனந்தல், இளையனார்குப்பம், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, பகண்டைகூட்ரோடு, மரூர், கடம்பூர், மையனுார், ஏந்தல், பெரியபகண்டை ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்