Run World Media: 09/28/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, September 28, 2018

ஒண்ணு ரெண்டு இல்ல... அஞ்சு கேமரா!' - நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன்நோக்கியா...பேரைக் கேட்டவுடனே பலருக்கு நாஸ்டால்ஜியா ஞாபகங்கள் நினைவுக்கு வந்து போகும். ஒரு காலத்தில் சந்தையை ஆண்ட நோக்கியா வீண் பிடிவாதத்தால் காணாமல் போனது.

இன்றைக்கும் கூட பேட்டரி பெர்பாமன்ஸோ, பில்டு குவாலிட்டியோ ஒரு தடவை பழைய நோக்கியாவ நெனச்சு பாக்க வச்சதுதான் அதோட தரத்துக்கு எடுத்துக்காட்டு. இந்த இரண்டு விஷயத்தைத் தவிர நோக்கியா கேமாரவுலையும் கில்லிதான். இங்க பாதி பேர் மொபைலில் போட்டோ எடுக்க பழகுனது நோக்கியா மொபைலாகத்தான் இருக்கும். 

ஸ்மார்ட்போனுன்னு ஒன்னு வாங்குனா அது நோக்கியாவாத்தான் இருக்கும்னு வருஷக்கணக்கா வெயிட் பண்ணுனவங்க இங்க பல பேர் இருக்காங்க. அப்படி தனது வெறித்தனமான  ரசிகர்களுக்காகவே நோக்கியா ஒரு ஸ்பெஷல் ஸ்மார்ட்போனை உருவாக்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஸ்மார்ட்போன்

நோக்கியா நிறுவனம் திரும்பி வந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்தைக் கடந்து விட்டது. இந்த காலகட்டத்தில் பத்திற்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியும் இருக்கிறது. ஆனால் இவையெல்லாம் சந்தையில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தியதா என்று பார்த்தால் இல்லை என்றே கூறலாம். ஏற்கெனவே பிற நிறுவனங்கள் என்ன வசதிகளைத் தருகிறதோ அதையே தனது போன்களிலும் கொடுத்து வருகிறது. வேறு எந்த ஸ்பெஷலான விஷயங்களையும் தரவில்லை என்பதும் பெரிய அளவில் வரவேற்பு இல்லாததற்குக் காரணமாக இருக்கலாம்.

மைக்ரோசாஃப்ட்டிடம் இருந்து கைமாறிய பியூர்வியூ
 Nokia PureView 808 மற்றும் Nokia Lumia 1020
பியூர்வியூ என்ற பெயரை எங்கேயோ பார்த்தது போல இருக்கலாம். நாம் மறந்தாலும் மொபைல் நிறுவனங்கள் மறக்கப் போவதில்லை.ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் ஒரு எம்.பி கேமரா, இரண்டு கேமராவைக் ஸ்மார்ட்போன்களில் கொடுத்ததையே சாதனையாக எண்ணி மொபைல் நிறுவனங்கள் விளம்பரம் பண்ணிக் கொண்டிருந்தன. எல்லாம் இருக்கட்டும் கொஞ்சம் தள்ளிப் போய் விளையாடுங்க பாஸ்னு சொல்லி நோக்கியா களமிறக்கியதுதான் Nokia PureView 808 மற்றும் Nokia Lumia 1020 என்ற இரண்டு ஸ்மார்ட்போன்கள்.


இந்த ஸ்மார்ட்போன்கள் 41 மெகா பிக்ஸல் கேமராவைக் கொண்டிருந்தன, அதில் கேமராவிற்குப் பக்கத்தில் Carl Zeiss மற்றும் PureView என்ற வார்த்தைகள் இருப்பதைப் பலர் கவனித்திருப்பார்கள். கடந்த வருடமே Carl Zeiss நிறுனவத்துடன் இணைந்து கேமரா லென்ஸை  ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தத் தொடங்கி விட்டது. Carl Zeiss தான் வேறு நிறுவனமே தவிர PureView நோக்கியாவிற்கு சொந்தமான பிராண்ட்தான். கடந்த முறை பழைய நோக்கியாவை மைக்ரோசாஃப்ட் வாங்கிய போது அதற்குச் சொந்தமானது. தற்பொழுது நோக்கியாவின் பெயரில் HMD நிறுவனம்தான் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமையை வைத்திருக்கிறது. அப்படியே கடந்த மாதம் மைக்ரோசாஃப்ட்டிடம் இருந்து PureView பிராண்டை கைப்பற்றியிருக்கிறது.
எவ்வளவோ எதிர்பார்த்தோம் ஆனா உங்க பேர் சொல்ற மாதிரி ஒண்ணுமே பண்ண மாட்றீங்களே பாஸ்னு இவ்வளவு நாளாக நோக்கியா ரசிகர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கவலையெல்லாம் போக்க ரெடியாகிக் கொண்டிருக்கிறது நோக்கியா 9. மொபைல் வரலாற்றில் முதல் முறையாக ஐந்து கேமராக்களுடன் என்று முத்திரை பதிக்கும் வகையில் ரெடியாகிக் கொண்டிருக்கிறது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

முதல் முறையாக ஐந்து கேமரா
நோக்கியா
Ggh
இப்பொழுது சந்தையில் டூயல் கேமராவைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் சகஜமாகிவிட்டன. இது தவிர அதிக பட்சமாக சில ஸ்மார்ட்போன்களில் மூன்று கேமராக்களும் இருக்கின்றன. இந்நிலையில்தான் நோக்கியா ஐந்து கேமராவைக் கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாக சில மாதங்களுக்கு முன்னால் தகவல்கள் வெளியாகின. அதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த மாதம் முதல் அந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. அதில் பின்புறமாக மட்டும் ஐந்து கேமரா காணப்படுகிறது, சற்று பெரிய பிளாஷ் ஒன்றும் சென்சார் ஒன்றும் காணப்படுகிறது. PureView பிராண்டின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் கேமராக்கள் உருவாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அடுத்த வருடத் தொடக்கத்தில் நோக்கியா இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கொஞ்சம் லேட்தான் ஆனால் நோக்கியா ரசிகர்களுக்குப் பெரிய விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது.

உணவக கழிப்பறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான 17 வயது பெண்பாலியல் வல்லுறவு


கோப்புப் படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தென் ஆப்ரிக்காவில் உணவக விடுதியில் 17 வயது பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார் என்று எழுந்த குற்றச்சாட்டு அந்நாட்டு மக்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இருபது வயது இளைஞர் கழிப்பறைக்கு சென்றுக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து பலவந்தமாக இழுத்து ஆண்கள் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வல்லுறவு செய்தார் என்று கூறப்படுவதாக காவல் துறை தெரிவிக்கிறது.

சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்க அமைப்பொன்று அந்நாட்டில் ஒரு நாளுக்கு 110 பாலியல் வல்லுறவு சம்பவம் நடப்பதாக கூறுகிறது.

திருமணமனத்துக்கு பிறகு உறவு வைத்துக்கொள்வது கிரிமினல் குற்றமல்ல: உச்சநீதிமன்றம் தீர்ப்புதிருமணமான ஓர் ஆண் திருமணமான இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது கிரிமினல் குற்றம் அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுவரை, பாதிக்கப்பட்ட கணவர் புகார் அளித்தால் அவரது மனைவியுடன் உறவில் இருந்த ஆணுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிலை இருந்தது.


'திருமணமான இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்வது கிரிமினல் குற்றமல்ல'படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதுபோன்ற உறவுகளில் ஈடுப்பட்டால் ஆண் பெண் ஆகிய இருவருமே குற்றம் செய்திருந்தாலும் ஆணுக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது என்ற அம்சத்தில் அடிப்படையில் குற்றவியல் தண்டனை சட்டப் பிரிவு 497-ஐ எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இத்தாலியில் வசிக்கும் ஜோசஃப் ஷைன் என்ற வெளிநாடுவாழ் இந்தியர் 2017 டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 497க்கு எதிராக பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கு மீதான தீர்ப்பை வழங்கியது.
இந்த வழக்கில், திருமணத்துக்கு வெளியே கொள்ளும் உறவை கிரிமினல் குற்றமாக கருத முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பில், "கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் சரிசமமாக பொருந்தும். பெண்ணுக்கான பாலியல் தன்னுரிமையில் சமரசம் செய்ய முடியாது."

"இது ஆணாதிக்க சமூகத்தின் வெளிபாடு. எந்த நிபந்தனையும் பெண்ணிற்கு மட்டும் விதிக்க முடியாது. ஆண் மட்டுமே தூண்டுதல் சக்தியாக இருப்பதாகவும் அதற்கு பெண் பலியாவதாகவும் கருத முடியாது," என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
இந்த பிரிவே அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் கூறி உள்ளனர்.

திருமணமான ஓர் ஆண் திருமணமான இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது கிரிமினல் குற்றம் அல்லபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

நீதிபதி சந்திரசூட் பெண்களை கணவரின் உடமையாக கருதுவது பெண்களின் உரிமையை சிதைக்கும் என தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி இந்து மல்ஹோத்ரா பாரபட்சமான இந்த சட்டப்பிரிவு சட்டத்தில் இடம்பெறக் கூடாது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

"சுயமாக முடிவெடுக்கும் உரிமை பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், ஆண்களை மட்டுமே தண்டிக்கும் இந்த சட்ட நடைமுறையைப் பயன்படுத்தி, தனியுரிமையில் அரசு தலையிடும் வழக்கம் முடிவுக்கு வருகிறது," என அவர் தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.

வழக்கு பின்னணி
முன்னதாக இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு, 'அடல்ட்ரி' சட்டப்பிரிவில் மாற்றங்களைச் செய்தால் அது சட்டத்தை நீர்த்துப்போக செய்துவிடும், சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறி இருந்தது.

இதுபற்றி முன்னர் கருத்து கூறி இருந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கருணா நந்தி, "இந்த வழக்கின் முடிவு மேலும் பல வழக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். திருமண உறவில் பாலியல் பலாத்காரம், திருமணமான தம்பதிகளாக இருந்தாலும், இருவரின் சம்மதத்தோடுதான் பாலியல் உறவு கொள்ளவேண்டும்" என்று கூறி இருந்தார்.
"அதேபோல, சட்டப்பூர்வ வயது வந்த இருவர், தம்பதிகளாக இல்லாவிட்டாலும் பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொண்டால், அதற்கு குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படக்கூடாது" என்று கோரப்பட்டு இருந்தது.

இதுபோன்ற உறவுகளில் ஈடுப்பட்டால் ஆண் பெண் ஆகிய இருவருமே குற்றம் செய்திருந்தாலும் ஆணுக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது என்ற அம்சத்தில் அடிப்படையில் குற்றவியல் தண்டனை சட்டப் பிரிவு 497 - ஐ எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.படத்தின் காப்புரிமைGETTY IMAGES

1860ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வயது வந்தோர் சட்டம், சுமார் 157 ஆண்டு பழையது. இச்சட்டத்தின் கீழ், ஆண் ஒருவர், வேறொரு திருமணமான பெண்ணின் சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டிருந்தால், அந்த பெண்ணின் கணவர் இதுகுறித்து புகார் அளித்தால், முறையற்ற உறவு சட்டத்தின் கீழ், பாலியல் உறவு கொண்ட ஆண் குற்றவாளியாக கருதப்படுகிறார். குற்றம் உறுதி செய்யப்பட்டால் ஐந்தாண்டு சிறை தண்டனை அல்லது அபராதம், சில சமயங்களில் சிறை தண்டனையும் அபராதமும் சேர்த்து வழங்கப்படும்.
இப்போது இந்த தீர்ப்பு இதனை மாற்றி அமைத்துள்ளது.

தினம் ஒரு நாலடியார் அர்த்தத்துடன் - Daily one Naaladiyar with meaning - 3

தினம் ஒரு நாலடியார்
பாடல் - 3.
யானை எருத்தம் பொலியக் குடை நிழற் கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
வினை உலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.

அர்த்தம் :
யானையின் பிடாரியிலே அமர்ந்து எல்லாரும் காணுமாறு குடைநிழலில் படைகளுக்கெல்லாம் தலைவராகச் சென்ற அரசர்களும், தீவினை கெடுப்பதனால், முன்னிருந்த நிலையினின்றும் வேறுபட்டு, தம் மனைவியையும் பகைவர் கவர்ந்துகொண்டு போக, வறுமையில் வீழ்வர். (நல்வினை போய், தீவினை வருமானால் அரசரும் தாழ்வடைவர். எனவே, செல்வம் உள்ளபோதே அறம் செய்க என்பதாம்.)

தினம் ஒரு திருக்குறள் அர்த்தத்துடன் - Daily one Thirukkural with meaning -3

 தினம் ஒரு குறள் :

குறள் - 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

 அர்த்தம் :

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்