Run World Media: 10/04/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 4, 2018

பனங்கிழங்கில் பர்பி... வேதாரண்யம் தமிழாசிரியரின் புதிய தயாரிப்பு


தேங்காய் பர்பி, சாக்லேட் பர்பி, ஹார்லிக்ஸ் பர்பின்னு கேள்விப்பட்டு இருப்பீங்க. ஆனால் இதைவிட உடலுக்கு ஊட்டம் அளிக்கும் பனங்கிழங்கு பர்பி தயாரித்து சாதித்துள்ளார் வேதாரண்யத்தை சேர்ந்த 
தமிழாசிரியர் என்பது தெரியுங்களா?

வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தில் பனங்கிழங்கை மூலப்பொருளாக கொண்டு பர்பி தயாரிக்கும் பணியில் தமிழாசிரியர் கார்த்திகேயன் என்பவர் ஈடுபட்டுள்ளார். பாஸ்ட் புட் என்ற நவீன வாழ்க்கையில் பாரம்பரிய உணவுகளை மறந்து விட்டோம். 

உணவே மருந்தாக இருந்த காலம் போய் இன்று வேளைக்கு இத்தனை கலர் மாத்திரைகள் என்று சாப்பிடும் நிலைக்கு நம் ஆரோக்கியம் போய்விட்டது. இப்போது மீண்டும் பழங்காலத்திற்கு திரும் ஆரம்பித்துள்ளோம். அந்த வகையில் பனங்கிழங்கை பறித்து பின்பு அதனை வேகவைத்து நன்கு உலர வைத்து மாவாக்கி அதனுடன் பொட்டுக்கடலை, நிலக்கடலை, ரவா, முந்திரி பருப்பு, ஏலக்காய், நெய் சேர்த்து வெல்லப்பாகும் கொண்டு தயாரிக்கப்படும் கேக் வடிவிலான பனங்கிழங்கு பர்பி தயார் செய்கிறார் கார்த்திகேயன்.


இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்கும் வகையில் உண்பதற்கு ஏற்றதாகவும் அமைகிறது. ஆரோக்கியமான ஒன்றாகவும் உள்ளது. வழக்கமாக ஒரு பனங்கிழங்கு முப்பது பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதை பர்பியாக தயார் செய்யும்பொது குறைந்த பட்சம் ரூ.3 மதிப்பு கூட்டப்பட்டப்படுகிறது.

பனங்கிழங்கில் உள்ள நார்ச்சத்து மாவுச்சத்து போன்றவையுடன் வெல்லம் இணையும்போது இரும்புச்சத்து கூடுதலாக கிடைக்கிறது. உடலுக்கு ஊட்டம் அளிக்கிறது. உடல் எடையைக் குறைத்து உடலை வலுப்படுத்துகிறது. பனங்கிழங்கு மலச்சிக்கலை தீர்த்து உடலில் உள்ள கழிவுகளையும் பிரித்தெடுத்து வெளியேற்றுகிறது.


ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் தனியார் பள்ளி ஒன்றில் தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார். ஒரு கிலோ பர்பி தயார் செய்ய 25 பனை கிழங்கு உள்பட மற்ற பொருட்கள் அனைத்தும் சேர்த்து ரூ.200 செலவாகிறது. ரூ.250-க்கு ஒரு கிலோ பர்பி விற்பனையாகிறது என்று தெரிவித்துள்ளார்.

Popular Posts

மனைவியால் ஏற்படும் துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட கணவர்கள்: விஜயவாடாவில் ருசிகரம்மனைவியால் பாதிக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்களிடம் பேசுகிறார் பாலாஜி. படம்: விஜயபாஸ்கர்
ஆண்களின் இந்த மாதிரியான ஒன்றுகூடலை விஜயவாடா நகரம் இதுவரை பார்த்திருக்காது.


திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை; மனைவிகள் தங்களைக் கொடுமைப்படுத்துகின்றனர் என்றுகூறி, சட்ட ரீதியான உதவிகளைப் பெற ஏராளமான கணவர்கள் அங்கு ஒன்றுகூடினர்.
ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் பொறியாளர், ஆசிரியர், விவசாயி, ரியல் எஸ்டேட் தரகர், முன்னாள் அரசு அதிகாரி, ரயில்வே ஊழியர் என்று கலவையான மனிதர்கள் அங்கு குழுமி இருந்தனர்.
தங்களின் மனைவிகளோடு ஏற்படும் பிணக்குகளையும், தங்களைக் கொடுமைப்படுத்த அவர்கள் சட்ட விதிகளைப் பயன்படுத்துவதையும் குறித்து அவர்கள் கவலையுடன் விவாதித்தனர்.
கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் நலச் சங்க ஹாலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மனைவியால் பாதிக்கப்பட்டோர் சங்கம் (Bharya Badhitula Sangham) இந்தக் கூட்டத்தை நடத்தினர்.

''பொதுவாக கணவர்களால் மனைவிகள் கொடுமைப்படுத்தப்படும் சம்பவங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றைக் கண்டிக்கிறோம். ஆனால் அதே நேரம் சில இடங்களில் மனைவிகள் அவர்களுக்குச் சாதகமாக சட்டத்தைப் பயன்படுத்தி, கணவன்களைத் துன்புறுத்துகின்றனர்'' என்கிறார் விஜயவாடாவைச் சேர்ந்த ரயில்வே அதிகாரி.
தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவது திருமணம் செய்துள்ள பாலகிருஷ்ணா, ''நான் இப்போது பிரச்சினையில் இருந்து வெளியே வந்துவிட்டேன். ஆனால் என்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆசைப்படுகிறேன்'' என்கிறார்.
ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் பொறியாளர், அங்கிருக்கும்போது தான் துன்புறுத்தப்பட்டதாகக் கூறுகிறார். ''நான் இங்கே வந்தபோது என்னுடைய பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. என்னுடைய மனைவி புகார் கொடுத்ததன் விளைவு இது.


நான் நீதிமன்றத்தின் மூலம் பாஸ்போர்ட்டைத் திரும்பப் பெற்றாலும், என்னால் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் பணிபுரிய முடியவில்லை. இங்கு வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறுவதே இதற்குக் காரணம். நாங்கள் இரண்டு மாதங்களே இணைந்து வாழ்ந்தோம்'' என்கிறார்.
இந்த சந்திப்பில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் முதியவர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

இதுகுறித்துப் பேசிய மனைவியால் பாதிக்கப்பட்டோர் சங்கத் தலைவர் ஜி.பாலாஜி, ''பொய்யான வழக்குகளால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு ஆதரவாக அரசாங்கம் செயல்பட வேண்டும். வருங்காலத்தில் எந்த அப்பாவி ஆணும் பிரிவு 498ஏ-வால் பாதிக்கப்படக் கூடாது'' என்கிறார்.


Popular Posts


சின்னமனூர் அருகே 10 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை: 3 இளைஞர்களுக்கு தூக்கு


சின்னமனூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞர்கள் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தேனி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் 10 வயது சிறுமி.  அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு டிச.1-ம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமி விளையாடச்சென்றார். சிறுமி ஐயப்பன் கோவிலுக்கு செல்ல மாலை அணிந்திருந்தார். விளையாடச்சென்ற சிறுமி காணாமல் போனார். அவரை உறவினர்கள் அவரை அப்பகுதி முழுதும் தேடினர்.

அப்போது அவரது வீட்டுக்கு அருகே இருந்த தோட்டத்தின் கிணற்றில் சிறுமி பிணமாக மிதந்தது தெரியவந்தது. சிறுமியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய ஓடைப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. விசாரணையில் காமாட்சிபுரம் அம்பேத்கர் காலனியை சேர்ந்த சுந்தர்ராஜ் (25), ராபின் (எ) ரவி (23), குமரேசன் (19) ஆகிய 3 பேரும் சேர்ந்து  பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது. ஆனால் அவர்களும் சேர்ந்தே சிறுமியை தேடுவது போல நடித்துள்ளனர். பின்னர் அவர்களை போலீஸார் கைது செய்தனர்.


இதுகுறித்த வழக்கு தேனி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பளிக்கப்பட்டது.  நீதிபதி திலகம் சிறுமியை கொலை செய்த குற்றத்திற்காக சுந்தர்ராஜ், ராபின் (எ) ரவி, குமரேசன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Popular Postsநாமே நமக்கான எண்ணெய் எடுக்கலாம்... வீட்டுக்குள் ‘மினி’ செக்கு!
உடலுக்கு ஆரோக்கியம் கொடுத்துவந்த பல பாரம்பர்ய முறைகள் இன்று பெரும்பாலும் நம்மிடையே இல்லை. அதில் அழிவின் விளிம்பில் இருக்கும் மரச்செக்கு எண்ணெய்யும் ஒன்று. ஆனால், சமீப காலமாக மக்களிடையே ஏற்பட்ட விழிப்பு உணர்வின் காரணமாக ஓரளவு மரச்செக்கு எண்ணெய்  பிரபலமடையத் தொடங்கியுள்ளது. இதற்குக் காரணம் வெளியே கிடைக்கும் எண்ணெய் வகைகளில் பெரும்பாலானவை கலப்படம் செய்யப்பட்டது என்பதுதான்.


நாம் உண்ணும் உணவில் ஏதாவது ஒரு வகையில் எண்ணெய் கலந்திருக்கும். இந்த அளவுக்கு உடலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய்களை வாங்கும் மக்களும் சுத்தமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதனால்தான் மரச்செக்கு எண்ணெய் வகைகள் பிரபலமடையத் தொடங்கியுள்ளன. பளபளக்கும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனையாகும் எண்ணெய்கள் உடலுக்கு நன்மை தருகிறதா என்றால் கேள்விக்குறிதான்.  மரச்செக்கு என்று சொல்லி விற்கப்படும் எண்ணெய்களிலும் போலியானவை கலந்திருக்கிறது. நேரிலேயே வரவழைத்து நம் கண்முன்னே செக்கை ஆட்டிக் கொடுக்கும் மரச்செக்குகளும் இருக்கத்தான் செய்கின்றன.இந்நிலையில் எண்ணெய் கலப்படத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், எண்ணெய் அதிகமாக உபயோகப்படுத்தும் மக்களுக்குத் தூய எண்ணெய் பெறும் வகையிலான இயந்திரம் ஒன்று சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாகப் பரவி வந்த வண்ணம் இருந்தன. தமிழ்நாட்டில் இந்த நவீன செக்கை தயாரித்து விற்பனை செய்து வரும் வடிவேல் குமாரிடம் பேசினோம். "நமது முன்னோர்கள் உபயோகப்படுத்திய பல அரிய விஷயங்களை இன்று நாம் கைவிட்டுவிட்டோம். ஆனால், அதன் பின்னர்தான் பல நோய்களுக்கு ஆளாகி இருக்கிறோம். அதற்குக் காரணம், பளபளப்பாக உள்ள உணவுப்பொருட்கள் நல்லது என்ற வாசகம் நம்மிடையே திட்டமிட்டு பரப்பட்டது. அதன்படி, ரெடிமேடாக கிடைத்த உணவுகளும், உணவுப் பொருட்களும் நமது வாழ்வை அழிவை நோக்கித் திருப்பியது. அதில் குறிப்பிடத்தக்கது எண்ணெய் வணிகம்தான். அதன் பிடியில் இருந்து தப்பிக்கவே இந்தக் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணெய் பிழியும் நவீன செக்கில் இருந்து தொடர்ந்து ஐந்து மணிநேரம் வரைக்கும் எண்ணெய் எடுத்துக் கொண்டே இருக்கலாம். அதன் பின்னர் சிறிது ஓய்வு கொடுத்து, மீண்டும் பயன்படுத்தலாம்.


ஒரு கிலோ எள்ளையோ அல்லது தேங்காயையோ 20 நிமிடத்தில் பிழிந்து எண்ணெய்யை எடுத்துக் கொள்ள முடியும். எண்ணெய் அரைக்க ஸ்குரூவிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் எண்ணெய் பிழியும்போது ஏற்படும் வெப்பமும் குறைவாகவே இருக்கும். இதில் வெளிப்படும் வெப்பம் அதிகபட்சமாகவே 25 டிகிரி அளவுக்குத்தான் இருக்கும். இது ஒரு அத்தியாவசியமான பொருளும் கூட. இந்த இயந்திரம் உபயோகப்படுத்துவதால் நமக்குத் தேவையான எண்ணெய்களை நாமே சொந்தமாக உற்பத்தி செய்ய முடியும். இதற்காகச் செலவிடப்படும் தொகை வாங்கும் தொகை மட்டும்தான்.


இந்தக் கருவி தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிகமாகக் கிடைக்கும். இப்போதைக்கு விலை அதிகமாக இருந்தாலும், மக்கள் அதிகமாக வாங்க ஆரம்பிக்கும்போது விலை குறையும் வாய்ப்பு அதிகம். இதில் எடுக்கும் எண்ணெய்யில் எந்தவிதமான வேதிப்பொருளும் மாறாமல் சுத்தமான எண்ணெய்யாக கிடைக்கிறது. கலப்பட எண்ணெய்க்கு இது மாற்றாக இருக்கும்" என்றார். இதுவும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறையையே 100% பின்பற்றுவதாகச் சொல்ல முடியாது. ஆனால், கலப்படத்தைத் தவிர்க்க நிச்சயம் உதவும் எனச் சொல்லலாம்.


Popular Posts


கோடையும்! முட்டையும்! - Summer Vs Egg


மற்ற உணவுகளையும் விட அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்ற முட்டை அதிகமாக சாப்பிட்டால், உடலின் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சொல்லப்படுவதுண்டு. அதனால் பெரியவர்கள் வெயில்காலத்தில் முட்டை சாப்பிட்டால், அவர்கள் தங்களுடைய உடலை சமாளித்துக் கொள்ள முடியும். குழந்தைகள் சாப்பிடும்போது உடல் நலக்கோளாறுகள் உண்டாகும். அவற்றை குழந்தைகளால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் தான், தாய்மார்கள் குழந்தைகளுக்கு வெயில்காலத்தில் முட்டை கொடுக்க தயங்குகிறார்கள்.

முட்டையில் எவ்வளவு புரதம் இருக்கிறதோ அதேபோல, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி மிக அதிக அளவில் நிறைந்திருக்கிறது. அவை எலும்புகளை மிக உறுதியாக வைத்திருக்கவும் எலும்பு வளர்சியில் மிக முக்கியப் பங்காற்றுகிறது.

வைட்டமின், புரோட்டீன் மட்டுமல்லாமல் மினரல்கள், கால்சியம், பாஸ்பரஸ், ஜிங்க், அயோடின், மிக அதிக அளவிலாக ஃபேட்டி ஆசிட், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு புரதத்தை நிறைவு செய்வதற்கான முட்டைக்கு பதிலாக மாற்று உணவுக்கு வெயில்காலத்தில் முன்னுரிமை வழங்குகிறார்கள்.
ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்கள், என்ன சொல்கிறார்கள் என்றால், முட்டை உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும் தான். ஆனால், குழந்தைகளுக்கு முட்டை கொடுப்பதை கோடை காலத்தில் முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் முட்டை ஒரு நாளின் ஊட்டச்சத்து தேவையில், பெரும்பான்மையை நிறைவு செய்யும். அதனால் தாராளமாக ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் வீதம் குழந்தைகளுக்கு கொடுக்கப்படலாம் என்றே ஊட்டச்சத்து நிபுணர்களும் மருத்துவர்களும் குறிப்பிடுகிறார்கள்.

Popular PostsFeatured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்