Run World Media: 10/06/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 6, 2018

நீதிபதியின் கார் மீது மோத முயற்சி: டாடா மேஜிக் வேனை ஓட்டிப் பழகிய இளைஞர்கள் 3 பேர் கைதுராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலை டாட்டா மேஜிக் வேனை ஓட்டிப்பழகிய இளைஞர்கள் நீதிபதியின் கார்மீது மோதும் வகையில் வாகனத்தை ஓட்டியும், பாதுகாவலரிடம் சண்டையும் போட்டதால் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அபிராமபுரம் ராஜா அண்ணாமலைபுரம் பக்ஸ் சாலையில் வசிப்பவர் பிரான்சிஸ் சேவியர் (35) இவர் வாடகைக்கு டாடா மேஜிக் வாகனம் ஓட்டி வருகிறார். வாகனம் எப்போதும் அவரிடமே இருக்கும். இவரது உறவுப்பையன் ராம் பிரகாஷ் (18), இவரது நண்பர் சுகுமார் (24) இவர் பட்டினபாக்கத்தில் வசிக்கிறார். ராம் பிரகாஷ், சுகுமார் இருவரும் சேவியரின் டாட்டா மேஜிக் வேனை எடுத்து ஓட்டி பழகுவர். அவ்வாறே நேற்றும் ஓட்டி பழகியுள்ளனர்.அப்போது கிரீன்வேஸ் சாலை அமைச்சர்கள் நீதிபதிகள் குடியிருப்பு பகுதியிலிருந்து, ராஜா அண்ணாமலைபுரம் நோக்கி கிரீன்வேஸ் சாலையில் டாட்டா மேஜிக் வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றுள்ளனர். அப்போது தாசில்தார் அலுவலகம் அருகே உயர் நீதிமன்ற நீதிபதி ராஜா அண்ணாமலைபுரம் வழியாக கிரீன்வேஸ் சாலையில் எதிர்புறம் வந்துள்ளார்.


அப்போது டாட்டா மேஜிக் வாகனம் எதிர்சாலையில் அவர்கள் கார்மீது மோதுவதுபோல் சென்றுள்ளது. நீதிபதியின் கார் ஓட்டுநர் பிரேக் அடித்து காரை நிறுத்தியுள்ளார். நீதிபதியின் பாதுகாவலர் அவர்களை பிடித்து கேட்டுள்ளார். ஆனால் இருவரும் பாதுகாவலர்இடம் சண்டையிட்டுள்ளனர்.இதையடுத்து அவர்களை அபிராமபுரம் போலீஸார் கைது செய்தனர். வாகன உரிமையாளர் பிரான்சிஸ் சேவியர் மீது பிரிவு 279(பொதுமக்கள் செல்லும் பாதையில் தாறுமாறாக வாகனத்தை ஓட்டுவது), 336 (பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்குவது), மற்றும் ராம் பிரகாஷ், சுகுமார் இருவர் மீதும் ஐபிசி பிரிவு 75 (தகராறில் ஈடுபடுவது) 7(1)a செயல்பட விடாமல் தடுப்பது, வன்முறையில் ஈடுபடுவது. ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Popular Posts

ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் - தமிழகத்தில் அதிதீவிர கனமழைக்கு வாய்ப்பு இல்லைகாற்றழுத்த தாழ்வு பகுதியால் அதிதீவிர கனமழை பெய்யும் என வெளியிடப்பட்ட எச்சரிக்கை திரும்ப பெறப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறும் என்றும், இதன் காரணமாக 7-ம் தேதி தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதிகளில் அதிதீவிர கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்நிலையில், தற்போதைய வானிலை  நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நேற்று உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் இருக்கிறது. எனவே, நாளை அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை. எனவே, தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்ப பெறப்படுகிறது.

எனினும், இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் 8-ம் தேதி வரை அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், குமரிக்கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு இன்று முதல் 8-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.


Popular Posts

ATM கார்டு அளவில் பர்சில் மடித்து வைத்து கொள்ளகூடிய ரெயின் கோட் (கார்டு) - (Rain Card)மழை காலங்களில் உடல் நலத்தை பேணிக் காக்க நாம் மழையில் நனையாமல் இருக்க வேண்டும். ஒரு காலத்தில் மழையில் நனைந்தாலும் உடல் உபாதைகள் வராமல் தான் இருந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் அதிகமாக பாதிப்படைந்ததாலும், 100-ல் 75 சதவீதம் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதும் காணப்படுகிறது.

இந்நிலையில் நாம் மழையில் நனையாமல் இருக்க வாகனங்களில் செல்லும்போது Rain Coat அணிவது அவசியமாயிற்று. ஆனால் ரெயின் கோட்டினை எங்கே மடித்து வைப்பது என்ற காரணத்தினாலேயே  பெரும்பாலானோர் ரெயின் கோட் அணியாமல் மழையில் நனைந்தபடியே பயனிக்கின்றனர்.


இந்த காலகட்டத்தில் Rain Card (ரெயின் கார்டு) என்ற சிறிய ஏ.டி.எம் கார்டு அளவிலான ரெயின் கோட் அறிமுகமாகியுள்ளது. இதனை நமது பர்சில் வைத்துக் கொள்ளலாம். இந்த ரெயின் கார்டினை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.
மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி அவசியம்!பிசியோதெரபிஸ்ட், ரம்யா செந்தில்குமார்


ஒவ்வொரு பெண்ணுக்கும், மாதவிடாய் நேர வலிகள் வேறுபட்டவை. அன்றாட வேலைகளை கூடச் செய்ய முடியாத அளவுக்கு இருக்கும்; அந்த நாட்களில் ஓய்வெடுப்பதும், சத்துமிக்க உணவை சாப்பிடுவதும் அவசியம். மூளையிலிருந்து உறுப்புகளுக்கு செய்திகளை எடுத்துச் செல்லும் வேதிப்பொருட்களான, 'ஹார்மோன்' மாற்றங்களால், மாதவிடாய் காலத்தில், உடல் பாரமாக இருப்பதாக உணர்வர்.

இந்த வேதிப் பொருட்களின் சமநிலையற்ற தன்மையால், மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு கவலை உணர்வு மேலோங்கி இருக்கும். சிலர் அதிக கோபத்துடனும், பதற்றத்துடனும் காணப்படுவர்.மார்பகங்கள் வீங்கியிருப்பது போல தோன்றும்; வலியும் ஏற்படும். மேல் வயிறு பெரிதானது போல தோன்றும். அடிவயிறு பகுதியில் இழுத்துப் பிடிப்பது போன்ற வலி ஏற்படும். இந்த சிரமங்களால், மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்யக் கூடாது என, பெண்கள் நினைக்கின்றனர்.


ஆனால், அப்போது சில உடற்பயிற்சிகளை செய்வது, நல்ல பலன் களை கொடுக்கும்.சாதாரணமாக, சைக்கிள் ஓட்டுவது நல்ல பயற்சி. அதுவும், 'ஜிம்'மில் ஒரே இடத்தில் அமர்ந்தபடி சைக்கிள் ஓட்டுவதால், தொடைப்பகுதி வலிமை அடையும். கைகளுக்கான பயிற்சிகளையும் செய்யலாம். 'கார்டியோ' உடற்பயிற்சிகளில் வகைப்படுத்தப்பட்டிருக்கும், 'சைக்கிளிங், ட்ரெட்மில்'லில் ஓடுவது போன்றவற்றை, 20 முதல், 40 நிமிடங்கள் வரை செய்யலாம். நடைபயிற்சியும், மிதமான ஓட்டமும் கூட உதவும். சிலருக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருக்கலாம்.


எனவே, வயிற்றுக்கான பயிற்சிகளை தவிர்ப்பது நல்லது. இந்த நேரத்தில் உடற்பயிற்சிகள் செய்வதால், மூளையில், ஒருவித அமிலம் சுரந்து, வலியை உணரும் சக்தி குறையும்; ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆனால், மாதவிடாய் கால ரத்தப் போக்கு அதிகரிக்காது. ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், தசைகள் வலிமையடைந்து, மாதவிடாய் காலச் சோர்வு குறைந்து, புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணரலாம்.


சுகப்பிரசவமாக இருந்தால், குழந்தை பிறந்த மூன்றாவது நாளில் இருந்தும், சிசேரியன் என்றால், ஒரு வாரம் கழித்தும், உடற்பயிற்சிகள் செய்யலாம். உடல் செயல்பாட்டுகளின் அடிப்படையில், காலை வேளை தான், உடற்பயிற்சிக்கு ஏற்றது. சில பெண்களுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளில், காலை நேரத்தில் அதிக ரத்தப்போக்கு இருக்கும். இது போன்ற பிரச்னை உள்ளவர்கள், மாலையில் உடற்பயிற்சி செய்யலாம்.

Popular Posts


H2O தெரியாமல் பேந்த பேந்த முழித்த மாடல் அழகி


அழகிப் போட்டிகளில் கட்டாயம் கடைசி ரவுண்டில் ஏதாவது கேள்வி கேட்பார்கள். அந்த பதில் கூட அவர்களுக்குப் பட்டத்தைப் பெற்றுத் தரலாம்.நான் இறந்த பின்னரும் இந்த உலகை பார்க்க விரும்புகிறேன். அதனால் கண் தானம் செய்வேன் என்று கூறிய ஐஸ்வர்யா ராய் ஆகட்டும்.

நான் விரும்பும் உன்னதமான வேலை தாயாக இருப்பதே எனக் கூறிய மனுஷி சிலாராக இருக்கட்டும் அற்புதமான பதில்களால் பரிசை வென்றவர்களாவர். அண்மையில் நடந்த மிஸ் வங்கதேசம் அழகிப் போட்டியில் ஒரு போட்டியாளரிடம் H2O என்றால் என்னவென்று கேட்கப்பட்டது. 3-ம் வகுப்பு குழந்தைகூட இது தண்ணீர் எனக் கூறிவிடும். ஆனால், அந்த அழகியோ பேந்த பேந்த முழித்தார். அதில், அதி பயங்கரமான கேள்வியைக் கேட்டதுபோல் இன்னொரு முறை கேள்வியை சொல்லுங்கள் என்று கேட்டார்.

Popular Posts


தினம் ஒரு திரிகடுகம் அர்த்தத்துடன் - Daily one Thirukadugam with meaning - 1 - 06/10/2018

தினம் ஒரு திரிகடுகம் :


திரிகடுகம் - 1:
கண் அகல் ஞாலம் அளந்ததூஉம், காமரு சீர்த்
தண் நறும் பூங் குருந்தம் சாய்த்ததூஉம், நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம், - இம் மூன்றும்
பூவைப் பூ வண்ணன் அடி.
 

 அர்த்தம் :

உலகத்தை அளந்ததும், குளிர்ச்சியான மலர்களை உடைய குருந்த மரத்தைச் சாய்த்தும், வஞ்சகமான வண்டியை உதைத்ததும் ஆகிய மூன்றும் நிகழ்த்திய திருமாலின் அடிகளை வணங்கினால் அனைத்து தீமைகளும் போகுமே.

Popular Posts


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்