Run World Media: 10/08/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, October 8, 2018

கருப்பு ஆடுகளால் பாலியல் தொல்லை : சமந்தாமொபைல் கடை திறப்பு விழாவிற்காக மதுரை வந்திருந்தார் நடிகை சமந்தா. கடையை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் சமந்தா பேசியதாவது : தமிழகத்தில் ரசிகர் இல்லாமல் நான் இல்லை, எனது வெற்றிக்கு ரசிகர்களே முக்கிய காரணம். நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள். 


சினிமா எனக்கு கடவுளுக்கு சமமானது, அதில் எந்த குறையும் இல்லை. 10 ஆண்டுகளாக இருக்கிறேன். பாலியல் ரீதியான தொல்லைகளை சந்தித்தது இல்லை. எல்லா துறையிலும் இருப்பது போன்று சினிமா துறையிலும் ஒரு சில கருப்பு ஆடுகளால் பாலியல் ரீதியான தொல்லைகள் ஏற்பட்டு சினிமாவின் பெயர் கெடும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு சமந்தா கூறினார்.

Popular Posts


வாய் திறக்கும் கவர்னர்: 'கிலி' அமைச்சர்கள்தமிழக அரசின் ஊழல்களை வெளிக் கொண்டு வரலாம் என, மத்திய பா.ஜ., அரசு, கவர்னர் பன்வாரிலாலுக்கு பச்சைக் கொடி காட்டியதைத் தொடர்ந்து, முதல் கட்டமாக, தமிழகத்தில் இருக்கும் பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டதில் பல கோடி ரூபாய் லஞ்சம் விளையாடி இருக்கிறது என கூறத் துவங்கி இருக்கிறார்.

சமீபத்தில் அண்ணாப் பல்கலைக் கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் புரோகித், அடுத்து சென்னை, தி.நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, இதே ஊழல் குற்றச்சாட்டை கூறி, பகீர் கிளப்பினார்.


Popular Posts


சசிகலா கதாபாத்திரத்தில் நடிப்பது யார்? [ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில்] - ‘த அயர்ன் லேடி’ (The Iron Lady)


ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரியதர்ஷினி, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கி, தயாரிக்கிறார். இப்படத்துக்கு ‘த அயர்ன் லேடி’ (The Iron Lady) என்று பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் உருவாகும் இந்தப் படத்தில், முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர். இப்படம், ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து 'தி இந்து' ஆங்கிலத்திடம் பேசிய பிரியதர்ஷினி, ''இந்தப் படம் இளம் நடிகையாக ஜெ. தனது வாழ்க்கையைத் தொடங்கியதில் இருந்து, மருத்துவமனையில் இருந்த கடைசி நாட்கள் வரை பேசும். படத்தின் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர்கள் இன்னும் தயங்குகின்றனர். ஆனால் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கத் தைரியமாக முன்வந்தவர் நித்யா மேனன்'' என்று தெரிவித்தார்.


இந்நிலையில், ஜெயலலிதாவின் உயிர்த்தோழியான சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. பிரியதர்ஷினி இயக்கியுள்ள ‘ஷக்தி’ படத்தில், பிரதான வேடத்தில் வரலட்சுமி நடித்துள்ளார். எனவே, அவர்தான் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தை, விஜய் மற்றும் பாரதிராஜா ஆகியோரும் தனித்தனியாக இயக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Popular Postsஹெல்மேட் இல்லாமல் வேகமாக சைக்கிள் ஓட்டினால் ரூ. 2000 அபராதம் ! - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்


சைக்கிள் ஓட்ட ஹெல்மெட் தேவை என்பது தெரியுமா? அதை விட சைக்கிளை குறிப்பிட்ட வேகத்தில் தான் ஓட்ட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கேரளாவின் கும்பாலாவில் இருக்கும் நெடுஞ்சாலை காவல்துறை அதிகாரிகள், உத்தரபிரதேசத்தை சேர்ந்த காசிம் என்பவரை பிடித்து, ரூ.2000 அபராதம் விதித்திருக்கிறார்கள். காரணம்? சைக்கிளில் அதிக வேகமாகச் சென்றதுதான். காசிமே இதில் அதிர்ச்சியாகியிருக்கிறார்.

தன்னிடம் பணம் இல்லை என காசிம் கூறியபோது, காவல்துறை அதிகாரிகள் ரூ.500-க்கான ரசீதை அவரிடம் தந்திருக்கிறார்கள். காசிம்மின் சைக்கிளில் காற்றையும் இறக்கிவிட்டிருக்கிறார்கள். காசிம்க்கு அடுத்த அதிர்ச்சி, அந்த ரசீதில் இருந்தது ஒரு பெண்ணின் ஸ்கூட்டர் எண். காசிம், நடந்த சம்பவத்தை, அந்த ரசீதுடன், சமூக வலைதளத்தில் பதிவிட்டவுடன் இது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

கும்பாலா மாவாட்ட தலைமை காவல் அதிகாரி இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் காவல் நிலைய பொறுப்பாளரே இதன் பின் இருக்கிறார் என்றும், விரைவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Popular Posts

24 வயதுடைய இளம் பெண் ஒருவர் தற்கொலை


இத்தாலியில் பணிபுரிந்து வந்த இலங்கை பெண்ணொருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கை வந்துள்ள நிலையில் , கடந்த வாரம் அவர் மீண்டும் இத்தாலி நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார். 4 வருடமாக காணப்பட்ட காதல் தொடர்பிற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இவ்வாறு விஷம் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துருகிரிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Popular Posts


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்