Run World Media: 10/09/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 9, 2018

மசூதியின் மேற்கூரை மீது வீசப்பட்டிருந்த சாக்குப்பையில் கசிந்த இரத்தம் : 7 வயது சிறுமி கொன்று திணிக்கப்பட்டிருந்த கொடூரம்



இந்தியா உத்தரப்பிரதேசத்தில் 7 வயது சிறுமி கொல்லப்பட்டு, மசூதியின் மேற்கூரையில் உடல் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் முராத் நகரைச் சேர்ந்த சிறுமி, கடந்த சனிக்கிழமையிலிருந்து காணாமல் போனதாக, பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.  (தொடர்ச்சி கீழே...)


இதையும் படிக்கலாமே !!!

இந்நிலையில், அங்குள்ள மசூதியின் மேற்கூரையில் இரத்தக்கறையுடன் மூட்டை கட்டப்பட்ட சாக்குப்பை ஒன்று மீட்கப்பட்டது. அதில், கொடூரமாகக் கொல்லப்பட்ட ஒரு சிறுமியின் உடல் திணித்து வைக்கப்பட்டிருந்தது.
தகவலறிந்து வந்த பொலிசாரும், பெற்றோரும் அங்கு வந்த பார்த்தபோது, காணாமல் போன சிறுமிதான் கொல்லப்பட்டாள் என உறுதி செய்யப்பட்டமையால், பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இக்கொலையை, முராத் நகரைச் சேர்ந்த கவுன்சிலரும் அவரது 3 சகோதரர்களும்தான் செய்திருக்கக் கூடும் என்றும், தேர்தல் முன்விரோதம் காரணமாக கொன்றிருக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளமையும் குறிப்பிடதக்கது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் : காஞ்சி. கலெக்டர் தகவல் - Last Date - 01/11/2018



காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 159 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 127 சமையல் உதவியாளர் காலி பணியிடங்களுக்கு தகுதியுடைய பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மனுக்கள் வரவேற்கப்படுகிறது.

 நாளை முதல் நவ.1ம்தேதி வரை அலுவலக வேலை நாட்களில் விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அலுவலகங்களில் வழங்கப்படும். மேலும் http://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் அளிக்கப்படவோ, பெறப்படவோமாட்டாது. காலி பணியிடங்கள் இனசுழற்சி முறையில் நிரப்பப்படும். அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு இனசுழற்சி முறை பின்பற்றப்படமாட்டாது.  (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!


சத்துணவு அமைப்பாளர் பணிக்கு, பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 1-7-2018 அன்று 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும். பழங்குடி இனத்தை சேர்ந்தவராக இருந்தால் 8ம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி அடைந்தவ ராக இருக்கவேண்டும்.  1-7-2018 அன்று 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும். விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப் பட்டோர் 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பணியிடத்திற்கும் விண்ணப்பதாரரின் குடி யிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கிமீக்குள் இருக்கவேண்டும்.


சமையல் உதவியாளர் பணி:
பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி, 1-7-2018 அன்று 21 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராக வும் இருக்கவேண்டும். பழங்குடி இனத்தை சேர்ந்தவராக இருந்தால் எழுதப் படிக்க தெரிந்தவராகவும்,  1-7-2018 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும். விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும். விண்ணப்பிக்கும் பணியிடத்திற்கும், விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கிமீக்குள் இருக்கவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மனுதாரரின் புகைப்படம் மற்றும் கல்விச்சான்று, பள்ளி மாற்றுச்சான்று, சாதி, இருப்பிடம், வருமானச்சான்று, குடும்ப அட்டை, விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர் எனில் அதற்கான வட்டாட்சியர் சான்று மற்றும் ஏனைய முன்னுரிமை சான்று இணைப்புகளுடன் அக்.10 முதல் நவ.1ம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் சமர்ப்பிக்கவேண்டும். அதன்பிறகு விண்ணப்பங்கள் வழங்கப்படவோ, பெறப்படவோ மாட்டாது.


சத்துணவு அமைப்பாளர் பணிக்கு ரூ.7700 - 24,200 என்ற ஊதிய விகிதத்தின்கீழ் மற்றும் சமையல் உதவியாளர் பணிக்கு ரூ.3000 - 9000 என்ற ஊதிய விகிதத்தின்கீழ் ஊதியம் வழங்கப்படும். சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் காலி பணியிடங்களுக்கான இனசுழற்சி குறித்த விவரங்களை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அலுவலகங்களில் தெரிந்துகொள்ள லாம். நவ.1ம்தேதி மாலை 5.45 மணிவரை பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே உரிய பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். தகுதிவாய்ந்த மனுதாரர்களுக்கு மட்டும் நேர்முக தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பப்படும். இவ்வாறு  அறிக்கையில் கூறியுள்ளார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


‘கடவுள் கூறியதால் உங்கள் வீட்டுக்கு வந்தேன்’ தம்பதியிடம் 35 சவரன் நகை நூதன அபேஸ்: போலி சாமியாருக்கு வலை



தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் போலி சாமியார் ஒருவர் அவர்கள் வீட்டிற்கு வந்துள்ளார். அவர், உங்கள் வீட்டில் வாஸ்து சரியில்லை. வாஸ்து தோஷத்தை சரி செய்தால் நீங்கள் எடுக்கும் செயல்கள் வெற்றி பெறும்.


 நான் யார் வீட்டுக்கும் செல்வது கிடையாது. உங்கள் வீட்டிற்கு கடவுள் உத்தரவிட்டதால் வந்துள்ளேன் எனக்கூறியுள்ளார். சாமியாரின் பேச்சை முழுவதுமாக நம்பிய கங்காதரும், ராதாவும்  இதற்கு பரிகாரத்தை கூறுங்கள் சுவாமி என்றனர்.  (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!


இதையடுத்து ஒரு பாத்திரத்தில் அரிசியை வைத்து அதற்குள் தங்க நகைகளை வைத்து பூஜை செய்ய வேண்டும் என போலி சாமியார் தெரிவித்தாராம்.
அவர் கூறியபடி ராதா வீட்டில் இருந்த 35 சவரன் மதிப்புள்ள செயின் மற்றும் தங்க நகைகளை அரிசி பாத்திரத்தில் வைத்து போலி சாமியாரிடம் வழங்கியுள்ளார். அதனை மஞ்சள் துணியில் வைத்து கயிறு கட்டி சிறிது நேரம் பூஜை செய்த சாமியார், இதை பூஜை அறையில் வைத்துவிட்டு மாலையில் குளித்துவிட்டு இதை திறந்து அதில் உள்ள அரிசியை சமைத்து சாப்பிட்டால் வீட்டில் உள்ள தோஷங்கள் விலகும் என தெரிவித்தார்.


இதேபோன்று தம்பதியினர் மாலையில் குளித்துவிட்டு பாத்திரத்தைத் திறந்து பார்த்தபோது கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதில் தாங்கள் வைத்த நகைகள் எதுவும் இல்லை. போலி சாமியார் நகை வைத்திருந்த பாத்திரத்தை மறைத்து வைத்துவிட்டு வெறும் அரிசி உள்ள பாத்திரத்தை அவர்களிடம் வழங்கி ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து ஜெகத்யாலா போலீசில் கங்காதர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி சாமியாரை ேதடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


போதை தலைக்கேறிய நிலையில் போலீசுடன் தகராறில் ஈடுபட்ட இளம்பெண்கள்



மும்பையில் இளம்பெண்கள் போதை தலைக்கேறிய நிலையில் அவர்கள் போலீஸாரையே தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மும்பை மிரா சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற பார்ட்டியில் கலந்து கொண்ட இளம்பெண்கள் சிலர் நன்றாக குடித்துவிட்டு போதையில் வெளியேறினர். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

போதை தலைக்கேறிய 4 இளம்பெண்கள் ரோட்டில் ஆபாச  வார்த்தைகளை பேசிக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீஸார், அவர்களின் சண்டையை தடுக்க முயன்றனர். ஆனால் அந்த போதை பெண்மணிகள் போலீஸாரையே தாக்க முயன்றுள்ளனர். மேலும் அவர்கள் போலீஸாரை தகாத வார்த்தையாலும் திட்டி தீர்த்துள்ளனர்.
 பொறுமை காத்த போலீஸார், பின்னர் லத்தியால் அடித்து ஜீப்பில் ஏற்றி உள்ளனர். ஒரு கட்டத்தில் 4 பெண்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியே சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்