Run World Media: 10/10/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 10, 2018

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்: ஹானர் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!



பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் பொறுத்தவரை அக்டோபர் 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது, இந்த விற்பனையில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹானர் நிறுவனத்தின் சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே இந்த அருமையான வாய்ப்பை பல்வேறு மக்கள்களும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் மூலம் ஹானர் நிறுவனம் 1மில்லியன் ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. மேலம் குறிப்பிட்ட ஹானர் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு குறைந்த விலை அறிவிக்கப்படும் என்று 

ஹானர் 9என்
 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ஹானர் 9என் ஸ்மார்ட்போன் மாடலுக்க ரூ.2000 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படும் அதேபோன்று 4ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்ட ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படும்.


ஹானர் 10
 ஹானர் 10 ஸ்மார்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட போது ரூ.32-999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999-க்கு விற்பனை செய்யப்படும். பின்பு எக்சேஞ்ச் வசதி மற்றும் இஎம்ஐ வசதி கூட இந்த திட்டதில் அறிவிக்கப்பட்டுள்ளது.(தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!


ஹானர் 9 லைட் மற்றும் ஹானர் 9ஐ
 ஹானர் 9 லைட்(32ஜிபி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்படும். பின்பு எக்சேஞ்ச் வசதி மூலம் ரூ.3000 வரை விலைகுறைப்பை பெற முடியும். மேலும் ஹானர் 9ஐ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹானர் 7ஏ
 ஹானர் 7ஏ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.8,999-ஆக இருந்தது, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-க்கு விற்பனை செய்யப்படும். குறிப்பாக 5.7-இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் அடக்கம்.

ஹானர் 7எஸ்
 ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.6,999-ஆக இருந்தது, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,499-க்கு விற்பனை செய்யப்படும். குறிப்பாக 5.4-இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் அடக்கம். மேலும் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் மூலம் விலைகுறைக்கப்படும்.



அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

 

குழந்தைகளை பாராட்டுங்கள்



குழந்தைகளின் மனது சின்னச் சின்ன பாராட்டுகளுக்காக எப்போதும் ஏங்கி நிற்கும். அதைச் சரியான நேரத்தில் கண்டுபிடித்து ஊக்கப்படுத்தினாலே தோல்வி என்கிற வலைக்குள் அவர்கள் விழ மாட்டார்கள். 
சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் : காஞ்சி. கலெக்டர் தகவல் - Last Date - 01/11/2018 # தகாத உறவுக்கு தடையாக இருந்த தந்தை… ரவுடிகளை வைத்து போட்டு தள்ளிய மகள் # நாம் அனைவருக்கும் புற்றுநோய் உள்ளதா..? இதை கவனமாக படியுங்கள்..!

உங்கள் குழந்தைக்கு, இயல்பிலே நல்ல குணங்கள் இருக்கலாம். அந்தக் குணத்தை தக்க வைக்க, அவை வெளிப்படும்போதெல்லாம் பாராட்டுங்கள். குழந்தைகளைப் பாராட்டும் போது, எந்தச் செயலுக்காகப் பாராட்டுகிறோம் என்பதை அவர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லுவதுதான் சரி. அவர்களை தன் செயலில் தெளிவுடன் இறங்க வைக்க இதுதான் நல்ல வழியும் கூட. 
(தொடர்ச்சி கீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!

பாராட்டுகளைப் பொறுத்தவரை, அவை வாய் வார்த்தைகளாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஒரு தட்டிக்கொடுத்தலோ, ஒரு முத்தமோ, அன்பான அழுத்தமான அணைப்போ, ஆச்சர்யப் பார்வையோ, தலை கோதி விடுதலோ, பிடித்த இடத்துக்கு அழைத்துச் செல்வதோ, பிடித்த உணவைச் சமைத்து தருவதாகவோகூட இருக்கலாம்.


உங்கள் குழந்தையின் ஏதேனும் ஒரு சிறப்பான செயல்பாட்டினை, அவர்களுக்குப் பிடித்தவர்களின் முன்னிலையில் வைத்து பாராட்டுங்கள். இது அவர்களுக்குத் தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு, தொடர்ந்து இது போன்ற செயல்களைச் செய்யும் ஊக்கத்தையும் அளிக்கும். நம் பாராட்டுதல்கள் குழந்தையை ஊக்கப்படுத்துவதாக மட்டுமல்லாமல், பிறரைப்பாராட்டும் தன்மையைக் குழந்தையிடம் வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். மற்றவர்களிடம் உள்ள நல்ல குணங்களையும் ஏற்று அதையும் மனதார பாராட்டுவதை குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே பழக்குங்கள். இதுஅவர்களுக்கான தலைமைப் பண்பை வளர்க்கும்.



திறனை வெளிப்படுத்தும் போதும், போட்டிகளில் வெற்றி பெறும் போதும் மட்டும் பாராட்டாமல், தோல்வி அடையும் போதும், குழந்தையின் பங்களிப்பை முதன்மைப்படுத்தி பாராட்டுதல் வேண்டும். ஒருமுறை பாராட்டிவிட்டு அந்தத் திறமையை அப்படியே விட்டுவிடாமல், உங்கள் குழந்தையின் ஸ்பெஷல் திறனை வளர்த்தெடுக்க வழியாக இருந்து உதவுங்கள். அவர்களின் அடுத்தகட்ட நகர்வுக்கு அதுதான் உதவும். பாராட்டு என்பது நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் போன்றது. உணர்வுரீதியான மற்றும் சமுக ரீதியான சரியான வளர்ச்சிக்கு குழந்தைகளுக்குப் பாராட்டு என்னும் வைட்டமின் சத்து மிக மிக அவசியம்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

 

4 வயது சிறுமிக்கு மண்டை ஓட்டை நீக்கிவிட்டு செயற்கை மண்டை ஓடு.. புனே மருத்துவர்கள் சாதனை!



புனேவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் இந்தியாவிலேயே முதல் முறையாக மண்டை ஓடு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. நான்கு வயது சிறுமிக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இந்த சிறுமிக்கு கார் விபத்தில் அடிபட்டுள்ளது. அப்போது இரண்டு பெரிய ஆபரேஷன்கள் செய்து இவர் உயிர் பிழைக்க வைக்கப்பட்டார்.
சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் : காஞ்சி. கலெக்டர் தகவல் - Last Date - 01/11/2018 # தகாத உறவுக்கு தடையாக இருந்த தந்தை… ரவுடிகளை வைத்து போட்டு தள்ளிய மகள் # நாம் அனைவருக்கும் புற்றுநோய் உள்ளதா..? இதை கவனமாக படியுங்கள்..!


அதன்பின் மண்டை ஓட்டில் ஏற்பட்ட சின்ன விரிசல் பெரிதாகி உள்ளது. இதனால் அதை மாற்ற வேண்டும் என்று மறுபடியும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று இவருக்கு மண்டை ஓட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்படி இவர் மண்டை ஓட்டில் ஐந்தில் மூன்று பங்கை மாற்றி இருக்கிறார்கள். இதற்காக செயற்கையாக செய்யப்பட்ட மண்டை ஓடு பயன்படுத்தப்பட்டுள்ளது.

 இந்த செயற்கை மண்டை ஓடு அமெரிக்காவில் செய்யப்பட்டது. இதை அந்த சிறுமியின் மண்டை ஓட்டை எடுத்துவிட்டு பொருத்தி இருக்கிறார்கள். (தொடர்ச்சி கீழே...)


இதையும் படிக்கலாமே !!!

இப்போது அந்த சிறுமி நலமுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக மண்டை ஓட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

இன்டெர்வியூல பாடி-லாங்வேஜ் மூலம் எப்படியெல்லாம் ஸ்கோர் பண்ணலாம்?



இன்டெர்வியூ பீதியில், சிலருக்கு பெயரை செல்லி அழைத்த உடன் நன்கு தெரிந்த விஷயங்கள் கூட, சில நேரங்களில் முற்றிலும் மறந்து போக வாய்ப்புள்ளது. இன்டெர்வியூவை பொறுத்தமட்டில் பல்வேறு விஷயங்கள் தெரிந்து வைத்திருப்பதை விட, அவற்றை அவர் எப்படி தக்க நேரத்தில் வெளிப்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றிக்கான வாய்ப்புகள் அடங்கியுள்ளது.
சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் : காஞ்சி. கலெக்டர் தகவல் - Last Date - 01/11/2018 # தகாத உறவுக்கு தடையாக இருந்த தந்தை… ரவுடிகளை வைத்து போட்டு தள்ளிய மகள் # நாம் அனைவருக்கும் புற்றுநோய் உள்ளதா..? இதை கவனமாக படியுங்கள்..!

இன்டெர்வியூல பாடி-லாங்வேஜ் மூலம் எப்படியெல்லாம் ஸ்கோர் பண்ணலாம்? 

நமக்கு தெரிந்த விஷயங்களை வெளிப்படுத்துவதில், கண்கள், வார்த்தைகளை தவிற பாடிலாங்வேஜ் எனப்படும், உடல் மொழி முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. இன்டெர்வியூவில் பாடி-லாங்வேஜ் மூலம் எப்படி ஸ்கோர் பண்ணலாம்? என்பது குறித்த சில விஷயங்களை இங்கு பார்க்கலாம்.(தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!


புன்னகை
 இன்டர்வியூ அறையில் நுழைந்த உடன் சிறு புன்னகையுடன் முதல் வணக்கத்தை தெரிவியுங்கள். உங்கள் புன்னகை இயல்பாக இருக்க வேண்டும். மேல்நோக்கி குவிந்திருக்கும் இதழ்கள் நீங்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பதை காட்டும். கீழ் நோக்கிய இதழ்கள் பல விஷயங்களை நம்மும் புதைத்து வைத்திருப்பதை காட்டுவதாக அமையும். நேராக குவிந்திருக்கும் இதழ்கள் இரண்டும் கலந்த எண்ணம் கொண்டவர்களாக நம்மை பிரதிபலிக்கும்.


நடை 

நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு வந்த உடன் நடையில் கவனம் தேவை. நடை என்றால் சும்மா சுறுசுறுப்பாக எழுந்து ஓடும் கன்றுக்குட்டி போல் இருக்க வேண்டும். நேராக நிமிர்ந்த நடையுடன் உள்ளே சென்றால் உங்களுக்கு இன்டெர்வியூ மீது எந்த பயமும், பதட்டமும் இல்லை. உறுதியாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதுவே மெதுவாக நகர்கிறீர்கள் என்றால் சிறு பதட்டத்துடன் இருப்பதாக அர்த்தம். "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம் நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம்". நடை பழக்கம் என்பது மேற்கூறிய ஔவையின் பாடலின் படி நடந்து பழகினால் மட்டும் போதும். எளிதாக கற்று விடக்கூடியதுதான்.


கை குலுக்கல்
 தேர்வுக் குழுவினர் கை குலுக்கினால், அழுத்தமான மற்றும் உறுதியான கை குலுக்கலாக உங்களுடையதை வைத்துக் கொள்ள வேண்டும். கண்ணும், கையும் பேசும்படி கை குலுக்கினால் நேர்மையான, நம்பிக்கைகுரிய கைகுலுக்கலாக அமைகிறதாம். இதுவே கண் பார்வையை தவிர்த்து கைகுலுக்கும் போது இவர் சுயநலக்காரர், என்பது போன்ற எதிர்மறையான கருத்துக்களை பதிவு செய்வதாக அமையும்.
அமர்தல்

அறைக்குள் நுழைந்த உடன் அமரச் சொல்லும் வரை காத்திருங்கள். அவர்கள் அமரச் சொன்னதும், நன்றி கூறி அமரலாம். முக்கியமாக ஃப்ரீயாக அமர்வது அவசியம். எனினும், நீங்கள் அமரும் விதம், நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு செய்பவர்களை நோக்கி, நன்றாக நிமிர்ந்து உட்காருங்கள். கால்களை குறுக்காகப் போட்டுக் கொண்டோ, பைலை முகத்திற்கு எதிராக வைத்துக் கொண்டோ, ஒரு புறமாக சாய்ந்தே, நுனி சீட்டில் அமருவதை தவிர்க்கலாம்.


திரும்புதல்
 இன்டெர்வியூ அறையை விட்டு திரும்புகையில் மிடுக்கான நடையுடன், திரும்ப வேண்டும், எப்படி என்றால் "ஜெயித்தாலும், தோத்தாலும் மீசைய முறுக்கு" என்பது போல், தளர்வான நடை ஏதோ கப்பல் கவுந்ததைப் போல் திரும்புவது உங்களுக்கு இந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்பதை காட்டுவதாக அமையும். மேற்கூறியவைகளை பின்பற்றினலே பாதி பாஸ் மார்க் வந்துவிடும் மீதி மார்க் நம்மகிட்ட என்ன திறமை இருக்கு என்பதை பொறுத்து அமையும்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு! Last Date : 18/10/2018



பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் : காஞ்சி. கலெக்டர் தகவல் - Last Date - 01/11/2018 # தகாத உறவுக்கு தடையாக இருந்த தந்தை… ரவுடிகளை வைத்து போட்டு தள்ளிய மகள் # நாம் அனைவருக்கும் புற்றுநோய் உள்ளதா..? இதை கவனமாக படியுங்கள்..!
மொத்த காலிப் பணியிடம் : 20
 (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!

வயது வரம்பு : 25 முதல் 50 வரையில் (பணிகளுக்கு ஏற்றவாறு வயதுவரம்பு வேறுபடும்)
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பக் கட்டணம்:- பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ.600. இதர பிரிவு விண்ணப்பதாரர்களும் : ரூ.100.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 18.10.2018

விண்ணப்பிக்கும் முறை : www.bankofbaroda.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான விண்ணப்பம் உள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bankofbaroda.com அல்லது https://www.bankofbaroda.com/writereaddata/Images/pdf/Detailed_Advertisement.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்