Run World Media: 10/11/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 11, 2018

மதுராந்தகம் பிரபல பாத்திக்கடையில் இரண்டாவது நாளாக வருமான வரி துறையினர் சோதனைமதுராந்தகம் பிரபல பாத்திக்கடையில் இரண்டாவது நாளாக வருமான வரி துறையினர் சோதனை.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இயங்கி வரும் அன்சர் ஸ்டோர் பாத்திரக்கடையில் சுமார் 12 மணி நேரத்திர்க்கு மேல் வருமான வரி துறையினர் 10க்கும் மேற்பட்டோர் சோதனையிட்டு வருகின்றனர்.


வந்துட்டார்ல எங்க சிங்கம்.. குஷியில் சரவணன் அருள் ரசிகர்கள்.. ரஜினி பாணியில் கலக்கல் டான்ஸ்!வெள்ளையும் ஜொல்லையுமா வந்த சரவணா ஸ்டார் அண்ணாச்சி
  சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் விளம்பரங்களில் கால் வைத்துள்ளார், சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள். முன்னணி நிறுவனங்கள், விளம்பர மாடல்களை கொண்டோ, நடிகர், நடிகைகளை கொண்டோதான், தங்களது விளம்பரங்களை நடிக்க வைப்பார்கள். வசந்த் அன்டு கோ உள்ளிட்ட சில நிறுவனங்களில் உரிமையாளர்களே விளம்பர படங்களில் தோன்றுவார்கள். சரவணா ஸ்டோர்ஸ்சை பொருத்தளவில் முதலில், விளம்பர மாடல்கள், சினிமா ஸ்டார்கள்தான் நடித்து வந்தனர். ஆனால், பின்னர்தான், 'தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்' உரிமையாளர் சரவணன் அருள், விளம்பர உலகில் கால் பதித்தார்.

நடிகைகளுடன் நடித்தார் 
 அதுவரை, 'தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்' உரிமையாளர் எப்படி இருப்பார் என அறியாதவர்கள் எல்லோருமே, விளம்பர படத்தை பார்த்துதான், சரவணன் அருள் யார் என்பதை அறிந்து கொண்டனர். தமன்னா, ஹன்சிகா ஆகிய நடிகைகளுடன் சரவணன் அருள் நடித்த விளம்பர படங்கள் பட்டிதொட்டியெங்கும் சென்று சேர்ந்தன.


வயிற்றெரிச்சல்
 புகழை பார்த்தால் சிலருக்கு உள்ளுக்குள் புழுங்கும் இல்லையா.. அதுபோலத்தான், சரவணன் அருள் புகழ் பரவியதும், அவரை கிண்டல் செய்வது போன்ற மீம்களை சில வயிற்றெரிச்சல் பார்ட்டிகள் வெளியிட்டு, அதில் சந்தோஷப்பட்டனர்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
ஆனால், இவையெல்லாம், சரவணன் புகழை குறைக்கவில்லை. அவர் மக்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றபடிதான் இருந்தார்.

மகள் திருமணம்

இந்த விளம்பர படங்களில் நடித்த நிலையில்தான், சரவணன் அருள் மகளுக்கு திருமணமானது. அப்போது, அடேங்கப்பா, மகளுக்கே திருமணம் செய்து வைக்கும் வயதா இவருக்கு என தமிழகமே ஆச்சரியத்தில் மூக்கில் விரல் வைத்தது. இப்படியாக, தன்னம்பிக்கைக்கு உதாரணமாக விளங்கினார் சரவணன் அருள். தனது மகள் திருமணத்திற்கு, நிறுவனத்தில் பணியாற்றுவோர் குடும்பத்திற்கு பரிசுப்பொருட்கள் வழங்கி அவர்களையும் திருமண விழாவில் தங்கள் குடும்பத்தாரை போலவே கவனித்ததாக பூரிக்கிறார்கள் அங்கு பணியாற்றுவோர்.


ஆடி மாத விளம்பரம் 
ஆனால், கடந்த ஆடி மாத தள்ளுபடி நேரத்தில் வெளியான, 'தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்' விளம்பரத்தில், சரவணன் நடிக்கவில்லை. விளம்பர படங்களை உன்னிப்பாக கவனிப்போர் இதை கவனிக்க தயங்கவில்லை. உடம்பு சரியில்லையா என்று சிலர் நகைச்சுவையாக மீம்கள் வெளியிட்டு கேள்வி எழுப்பினர். ஆனால், இதோ மீண்டும் வந்துவிட்டார் சரவணன் அருள். தீபாவளிக்கு என்ட்ரி தீபாவளியையொட்டி, வெளியாகியுள்ள தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் விளம்பரத்தில், சரவணன் அருள் நடித்துள்ளார். அஸார், ராமர், வடிவேல் பாலாஜி உள்பட பல டிவி சேனல் பிரபலங்களும் அதில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த்தின் அருணாச்சலம், படையப்பா திரைப்பட நடன பாணியில் உள்ளது சரவணனின் ஆக்ஷன்கள். விளம்பரங்களில் மீண்டும் சரவணன் அருளை கண்டதால் அவரது ரசிகர்கள் படு உற்சாகமாகிவிட்டனர்.
தீபாவளிக்கு என்ட்ரி
தீபாவளியையொட்டி, வெளியாகியுள்ள தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் விளம்பரத்தில், சரவணன் அருள் நடித்துள்ளார். அஸார், ராமர், வடிவேல் பாலாஜி உள்பட பல டிவி சேனல் பிரபலங்களும் அதில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த்தின் அருணாச்சலம், படையப்பா திரைப்பட நடன பாணியில் உள்ளது சரவணனின் ஆக்ஷன்கள். விளம்பரங்களில் மீண்டும் சரவணன் அருளை கண்டதால் அவரது ரசிகர்கள் படு உற்சாகமாகிவிட்டனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


ரஜினி மக்கள் மன்றத்திற்கு 47 ஆயிரம் பூத் கமிட்டி அமைப்புரஜினி மக்கள் மன்றத்திற்கு இதுவரை 47 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர்.


சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் டாக்டர் இளவரசன், ஓயவு பெற்ற காவல் அதிகாரி ராஜசேகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் கடந்த 5ஆம் தேதி முதல் மாவட்ட நிர்வாகிகளுக்கான கூட்டம் நடைபெற்றது.

(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 66,627 பூத் கமிட்டிகளில் 47 ஆயிரம் பூத் கமிட்டிகளை நியமித்து விட்டதாக மாவட்ட நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதுவரை 70 சதவீத பூத் கமிட்டி வேலைகள் முடிவடைந்த நிலையில் மீதம் இருக்கக்கூடிய பூத் கமிட்டிகளை விரைவில் முடிக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது. 


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

                  

தமிழக ராணுவ வீரர் மரணம் வீர‌ மரணம் அல்ல : அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள்அரசு மரியாதை செலுத்தாத‌தால் குழப்பமடைந்த ஜெகனின் உறவினர்கள் உடலை ஒப்படைக்க வந்த ராணுவ வீர‌ர்களிடம் அதுபற்றி கேட்டபோது அவரது மரணம் வீர‌ மரணம் அல்ல என தெரிவித்துள்ளனர். 


தக்கலை அருகே பருத்திக்காட்டுவிளையை சேர்ந்தவர் வேலப்பன். இவருடைய மகன் ஜெகன் (வயது 38). இவர் கடந்த 18 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் எல்லை பகுதியில் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது தீவிரவாதிகள் சுட்டதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஜெகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்ததாக கூறபட்டது.

(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
  பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து இன்று காலை குமரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பருத்திக்காட்டுவிளைக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்த் நிலையில்  டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜெகனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தாத‌தால் குழப்பமடைந்த ஜெகனின் உறவினர்கள், உடலை ஒப்படைக்க வந்த ராணுவ வீர‌ர்களிடம் அதுபற்றி கேட்டபோது, அவரது மரணம்,  வீர‌ மரணம் அல்ல என தெரிவித்துள்ளனர். சக ராணுவ வீர‌ருடன் ஏற்பட்ட மோதலில் ஜெகன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இது குறித்து சம்மந்தப்பட்ட வீர‌ரை கைது செய்துள்ளதாகவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த ஜெகனின் உறவினர்கள், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண‌ன் மூலம், ராணுவ அதிகாரிகளிடம், ஜெகனின் உயிரிழப்பில் உள்ள மர்மத்தை விளக்குமாறு கேட்டு கொண்டுள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


நவம்பர் 1ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம் என போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-


நவம்பர் 1ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம். மற்ற இடங்களில் இருந்து சென்னைக்கு 9,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
தீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கம். சென்னையில் இருந்து நவம்பர் 3,4,5 தேதிகளில் சுமார் 11,367 பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் 30 முன்பதிவு மையங்கள் செயல்படும். கோயம்பேட்டில் 26 முன்பதிவு மையங்கள் செயல்படும்.

சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளிக்கு கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி பேருந்து நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கம். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை. ஆம்னி பேருந்துகளுக்கு இன்னும் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. மாணவர்களுக்கு பஸ் பாஸ் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விரைவில் 100 மின்சார பேருந்துகள் வாங்கப்படும். இவற்றில் சென்னையில் 80-ம், கோவையில் 20-ம் இயக்கப்படும் என கூறினார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


சாதத்திற்கு அருமையான வெண்டைக்காய் சப்ஜிஇந்த வெண்டைக்காய் சப்ஜி தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, நாண், தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் :


வெண்டைக்காய் - கால் கிலோ,

பெரிய வெங்காயம் - 4,
தக்காளி - 2,
பூண்டு - 4 அல்லது 5 பல்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
சமையல் எண்ணெய் - 4 டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
  
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
செய்முறை:
வெங்காயம், தக்காளி, பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெண்டைக்காய் சிறியதாக இருந்தால் அதை அப்படியே எடுத்துக் கொள்ளவும். பெரியதாக இருந்தால் இரண்டாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெண்டைக்காயை சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும்.


மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து வாசனை போகும் வரை சுருள வதக்கிக் கொள்ளவும்.

பிறகு வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும்.


அதில், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். இந்த கிரேவி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சூப்பரான வெண்டைக்காய் சப்ஜி ரெடி.

 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்