Run World Media: 10/12/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 12, 2018

சுவர்களுக்கிடையில் எலும்புக்கூடு: பால்கனியில் சுவரை இடித்த போது பயங்கர அதிர்ச்சிபுதுடெல்லி துவாரகா பகுதியில் வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது இரண்டு சுவர்களுக்கு இடையில் முளைத்திருந்த தாவரங்களை அகற்றும் பணியின் போது எலும்புக்கூடு புதைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
எலும்புக் கூட்டைக் கண்டு பீதியில் உறைந்த 2 தொழிலாளர்கள் விஷயத்தை வீட்டு உரிமையாளரிடம் தெரிவிக்க அவர் உடனடியாக போலீஸுக்குத் தகவல் அனுப்பினார்.
நீலச்சட்டை அணிந்திருந்த ஒரு நபரின் எலும்புக்கூடு அது. பிப்ரவரி 2016 முதல் காணாமல் போனதாக தேடப்பட்டு வரும் 24 வயது ஜெயப்பிரகாஷ் என்பவரின் எலும்புகூடு அது என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. உடனடியாக போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். ஜெயபிரகாஷின் மாமா தலைமறைவானதும் போலீஸ் தரப்பில் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
ஜெயப்பிரகாஷ் மாமா விஜய் குமார் மஹாரானா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இந்த வீட்டின் உரிமையாளர் விக்ரம் சிங். இவருக்கு வயது 87. தாப்ரியின் சாணக்கியா பிளேசில் தான் வாடகைக்கு விட்ட 3வது தளத்தின் பால்கனியை பழுதுபார்க்க வேலைக்கு ஆட்களை அமர்த்தியிருந்தார். இவர் 2015-ல் வீட்டின் 3வது தளத்தை மேற்கு வங்கத்திலிருந்து வருவதாகத் தெரிவித்த விஜய் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.இவர் தன் உறவினர் ஜெய் உடன் இங்கு தங்கியிருந்துள்ளார், இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் இருவரும் வெளியில்தான் உணவு அருந்தி வந்துள்ளனர்.
 

இப்படியிருக்கையில் 2 மாதம் சென்ற பிறகு வீட்டு உரிமையாளரிடம் விஜய் தன்னுடன் தங்கியிருந்த மருமகன் ஜெய்யைக் காணவில்லை என்று தெரிவித்துள்ளார். வீட்டு உரிமையாளர் போலீசுக்கு தகவல் அளிக்குமாறு விஜய்யிடம் கூறியுள்ளார். இதனையடுத்து பிப்ரவரி 12, 2016-ல் காணவில்லை புகார் பதிவு செய்யப்பட்டது. ஜெய்யின் தாயாரும் மகனைக் காணாமல் பரிதவித்து வந்துள்ளார்.

மண், தாவரம் கேட்ட விஜய்

இதே காலக்கட்டத்தில்தான் விஜய் வீட்டு உரிமையாளரிடம் கொஞ்சம் மண், தாவரங்கள் இருந்தால் அழகுபடுத்த உதவும் என்று கேட்டுள்ளார். அதைக் கொண்டு பால்கனியில் இருசுவர்களுக்கிடையில் உள்ள இடைவெளியில் அவர் தாவரங்களை வைத்துள்ளார். இதற்கு 2 மாதங்களுக்குப் பிறகு வீட்டை விஜய் காலி செய்துள்ளார்.


“திங்களன்று தொழிலாளர்களை வைத்து சுவற்றை இடிக்கச் சொன்னேன். அங்கிருந்து தாவரத்தையும், மண்ணையும் அகற்றச் சொன்னேன். இதை செய்த போது அங்கு எலும்புக்கூடு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனே தெரிவிக்க நான் போலீஸை வரவழைத்தேன்” என்றார் வீட்டு உரிமையாளர்.
இதனையடுத்து தாப்ரி போலீஸ் நிலைய ஆபீசர், குற்றப்புலனாய்வுத் துறை ஆகியோர் இடத்துக்கு விரைந்து புகைப்படங்கள், வீடியோ எடுத்தனர்.
தீன் தயாள் மருத்துவமனையில் பரிசோதனைக்காக எலும்புக்கூடு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது, டி.என்.ஏ சோதனை நடத்தி அது ஜெய்யின் எலும்புதானா என்று கண்டறியப்படும்.
ஜெய் பணியிலிருந்து திரும்பவில்லை என்று மாமா விஜய் அளித்த புகார் போலியானது என்று போலீஸார் இப்போதைக்கு முடிவெடுத்து கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

 

வைரமுத்துவால் ஐஸ்வர்யா ராயும் பாதிக்கப்பட்டாரா? சின்மயி விவகாரத்தில் மூக்கை நுழைத்தார்


கடந்த சில தினங்களாக ஊடகத்துறை, சினிமா துறையை சேர்ந்த பெண்களை தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து பகிர்ந்து வருகிறார்கள்.
பாலிவுட்டில் நானா படேகர் தொடங்கில் கோலிவுட்டில் வைரமுத்து வரை குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சுவிட்சர்லாந்தில் பாடகி சின்மயியிடம் வைரமுத்து தவறாக நடக்க முயன்றதாகவும், அதிலிருந்து தப்பித்த பிறகு வைரமுத்துவின் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட மறுத்ததற்கு பிரபல அரசியல்வாதியின் பெயரைச் சொல்லி மிரட்டியதாகவும் சின்மயி பதிவிட்டிருந்தார்.

(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

சின்மயிக்கு நடிகர் சித்தார்த் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் நடிகை ஸ்ரீரெட்டியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
வைரமுத்து குறித்து வெளிப்படையாக தெரிவித்த சின்மயிக்கு நடிகை ஸ்ரீரெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.

 
இது தொடர்பாக பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, எல்லா பெண்களுக்குள்ளும் ஒரு துர்க்கையின் தைரியம் இருக்கிறது என்று பாராட்டியுள்ளார்.
இந்த மூவ்மென்ட்டில் வெளியே வந்ததுக்கு நன்றி! எல்லோரும் அவருடைய தைரியத்தை பாராட்ட வேண்டும் என பதிவிட்டுள்ளார். மேலும் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் MeTooIndia குறித்து நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியதாவது, பாலியல் துன்புறுத்தல் குறித்து நான் கடந்த காலத்தில் பேசியிருக்கிறேன், இனியும் பேசுவேன்.
 

இப்போது, ஒரு பிரசாரம் முன்னெடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சமூகவலைதளங்கள் இத்தகைய பிரசாரங்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. MeToo பிரசாரத்தை நாம் நீர்த்துபோகாமல் முன்னெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Postsஇதுக்கு பேரு தான் கோ-இன்சிடன்ஸோ...?!?! 2 நிமிஷம் ஃப்ரீயா இருந்தா இந்த பக்கம் வந்துட்டு போங்க!

ட்வின்ஸ் ரெண்டு பெரும் பிறந்தநாளுக்கு ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டுட்டு வரது இல்ல கோ-இன்சிடன்ஸ்... ஒரே ஸ்கூல்ல, வேற, வேற செக்ஷன்ல படிக்கிற ரெண்டு பசங்க பிறந்தநாள் அன்னிக்கி ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டுட்டு வந்தா... அது தான் கோ-இன்சிடன்ஸ்.


இதுமட்டுமில்லாம, பல விஷயங்கள நாம கோ-இன்சிடன்ஸா பார்க்கலாம்... பஸ்ல முன்னாடி நிக்கிறவர் பேப்பர்ல படிச்சுட்டு இருக்க அதே வாசகம், 
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
பின்னாடி நிக்கறவர் டீ-ஷர்ட்ல பிரின்ட் ஆகி இருந்தா.. அதுக்கூட கோ-இன்சிடன்ஸ் தான். பெரும்பாலும் கோ-இன்சிடன்ஸ் வியப்பையும், அதிர்ச்சியையும் தான் தரும். ஆனா, சிலவகையிலான கோ-இன்சிடன்ஸ் தான் நம்மள விழுந்து, விழுந்து சிரிக்க வைக்கும். அப்படி, LOL, ROFL மாதிரி வயிறு வலிக்க உங்கள சிரிக்க வைக்கிற கோ-இன்சிடன்ஸ் புகைப்படத் தொகுப்ப தான் நாம இங்க பார்க்கப் போறோம்... அதுவும் சரியான நேரத்துல, சரியான இடத்துல... எடுத்த பர்ஃபெக்ட் க்ளிக்ஸ்...

எதிரிக்கும் இந்த நிலைமை வரக் கூடாது... கண்ட இடத்துல படத்த வெச்சுட்டு போனா இப்படி தான்...அதாகப்பட்டது பொதுஜனங்களே... இவங்க எல்லாம் கல்யாணத்துக்கு வந்தbridesmaidsனு நீங்க நினைக்கலாம்... ஆனா, அதுதான் இல்லையாம்.. இந்த படத்த போஸ்ட் பண்ண லேடி என்ன சொல்லி இருக்காங்கன்னா... 

கல்யாணத்துக்கு வந்த வெவ்வேறு விருந்தாளிகள்... ஒரே மாதிரியான ட்ரெஸ் போட்டுட்டு வந்ததாகவும், விசாரிச்சு பார்த்ததுல.. எல்லாரும் ஒரே கடையில ஒரே ஆபர்ல அள்ளிட்டு வந்ததாகவும் தகவல் கிடைச்சிருக்கு... அடடே!


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


முதல்வர் பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவுமுதல்வர் பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்..

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக முதல்வர் பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறையின், ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த இந்த வழக்கில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.


முதலில் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார். லஞ்ச ஒழிப்புத் துறைதான் இந்த வழக்கை விசாரித்து வந்தது. இதில் கிட்டத்தட்ட 4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்த பணிகளில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை என்பது முதல்வருக்கு கீழே செயல்படக்கூடிய ஒரு அமைப்பு. அதனால் இதில் பெரிய அளவில் எந்த விசாரணையும் செய்யப்படாமல், வழக்கில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இதனால் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது புதிய திருப்பமாக சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. [திடீர் வாக்கு வங்கியாக மாறும் வட மாநிலத் தொழிலாளர்கள்.. என்ன காரணம்.. பரப பின்னணி! ] தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் முறையாக விசாரிக்கவில்லை. 
 
இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மிகவும் மெத்தனமாக செயல்பட்டுள்ளது. இதனால் விசாரணையை சிபிஐ மேற்கொள்ளட்டும். 3 மாதத்தில் சிபிஐ முதல் கட்ட விசாரணையை முடிக்க வேண்டும். இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

பெண்களை மரியாதையுடன் எப்படி நடத்த வேண்டும் என்பதை கற்கும் நேரமிது..பெண்களை மரியாதையுடனும் கவுரவத்துடனும் எப்படி நடத்த வேண்டும் என்பதை கற்பதற்கான நேரம் இது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
 #MeeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. இந்த ஹேஷ்டேக் தற்போது வைரலாகி வருகிறது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து கூறியுள்ளார். அவர் கூறுகையில் பெண்களை மரியாதையுடனும், கெளரவத்துடனும் நடத்த இனி எல்லோரும் கற்றுக்கொள்வார்கள். மாற்றத்தை உருவாக்க உண்மைகளை உரக்கவும் தெளிவாகவும் சொல்ல வேண்டும்.


மூடி மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வர உருவாகி உள்ள சூழல் மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்களை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் எப்படி நடத்த வேண்டும் என்பதை கற்கும் நேரம் இது என்றார் ராகுல்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்