Run World Media: 10/14/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, October 14, 2018

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தேவையான வைட்டமின் சி Vitamin Cபெண்கள் மாதவிடாய் காலத்தில் வைட்டமின் சி, இரும்புசத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அவை அதிக ரத்த இழப்பு, திரவ இழப்புகளை ஈடு செய்யும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் துணை புரியும்.

அதிக வலி, தசைப் பிடிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணமாகவும் அமையும். முளைகட்டிய தானியங்கள், கீரை, வெல்லம், பழங்கள், நட்ஸ்கள், முழு தானியங்கள் போன்றவற்றை சாப்பிடலாம். சமையலில் மஞ்சள் பொடி, இஞ்சி, சீரகம், லவங்கப்பட்டை போன்றவற்றை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  ஒருசில வகை உணவுகளை மாத விடாய் காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டியதும் அவசியம்.  காபி பிரியர்கள் அதனை தவிர்ப்பது அவசியமானது. அது ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்திவிடும். அதனால் இதயத்துடிப்பும் அதிகரிக்கும். வீண் டென்ஷன், கவலை போன்ற பாதிப்புகள் உருவாக்கும். காபிக்கு பதிலாக கிரீன் டீ, தக்காளி, கேரட் ஜூஸ் அல்லது சூப் பருகலாம்.


பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், பன்றி இறைச்சி, ஊறுகாய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக காய்கறி சாலட், கஞ்சி போன்றவற்றை சாப்பிடலாம். வெளி உணவுகளை தவிர்ப்பதும் நல்லது. (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!


கொழுப்பு நிறைந்த உணவுகள், பர்கர்கள், கிரீம் சார்ந்த இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். மாதவிடாய் நாட்களில் தவறான உணவுகளை சாப்பிடுவது நீரிழப்பு, சரும வறட்சி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக கோதுமை ரொட்டி, சால்மன் மீன்கள், பருப்பு குழம்பு வகைகளை சாப்பிடலாம்.  பால், பாலாடை கட்டி போன்ற பால் பொருட்களை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக மோர் பருகலாம்.

நொறுக்கு தீனிகள், பிஸ்கட், சிப்ஸ் போன்ற வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அவற்றில் கொழுப்பு அதிகமாக இருக்கும். அவை ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகப்படுத்தி மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும். அதற்கு பதிலாக கேரட், வெள்ளரிக்காய்கள் சாப்பிடலாம். ரொட்டி, பீட்சா போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். அவை மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். செரிமான செயல்பாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.  பதப்படுத்தப்பட்ட பவுடர்களில் தயாராகும் சூப்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பலகாரங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அவற்றுள் உப்பு அதிகமாக இருக்கும். அதற்கு பதிலாக தயிரை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


உல்லாசம் அனுபவித்ததை நேரில் பார்த்ததால் ஏரியில் மூழ்கடித்து சிறுவன் கொலை தாய்-கள்ளக்காதலன் கைது


உல்லாசம் அனுபவித்ததை நேரில் பார்த்ததால் ஏரியில் மூழ்கடித்து சிறுவனை கொலை செய்ததாக தாய் மற்றும் அவருடைய கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுவன் மாயம்

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலகா சிலுகலுபுரா கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சுண்டசாமி. இவருடைய மனைவி சாக்கம்மா. இந்த தம்பதியின் மகன் மகாதேவபிரபு என்கிற பிரீத்தம் (வயது 7). இவன் அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த பிரீத்தம், வெளியே விளையாட சென்றான். ஆனால், வெகு நேரமாகியும் அவன் வீட்டுக்கு திரும்ப வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த நஞ்சுண்டசாமி, அவனை பல இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர், கொள்ளேகால் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சிறுவனை தேடி வந்தனர். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

ஏரியில் பிணமாக மீட்பு

இந்த நிலையில், கடந்த 10-ந்தேதி அந்த கிராமத்தில் உள்ள ஏரியில் சிறுவனின் உடல் மிதப்பதாக கொள்ளேகால் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அவன் மாயமான, நஞ்சுண்டசாமி என்பவரின் மகன் பிரீத்தம் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கொள்ளேகால் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பிரீத்தம், தவறி விழுந்து இறந்தானா? அல்லது யாராவது கொலை செய்தனரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். மேலும் அவனுடைய உடலில் காயங்கள் இருந்ததால், அவனை யாரோ மர்மநபர்கள் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

கொலை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கொள்ளேகால் துணை போலீஸ் சூப்பிரண்டு புட்டமாதய்யா, சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராஜண்ணா, சப்-இன்ஸ்பெக்டர் வனராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்தப்பகுதியை சேர்ந்த, மகேஷ் என்பவர், சிறுவன் மாயமான அன்று அவனை அதே கிராமத்தை சேர்ந்த நாகராஜ மூர்த்தி என்பவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார், நாகராஜ மூர்த்தியை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அப்போது, சிறுவன் பிரீத்தமை, ஏரியில் மூழ்கடித்து கொலை செய்ததை நாகராஜ மூர்த்தி ஒப்புக் கொண்டார். பின்னர் அவர் அளித்த வாக்குமூலம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

உல்லாசம் அனுபவித்ததை...

நஞ்சுண்டசாமியின் மனைவி சாக்கம்மாவுக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த நாகராஜ மூர்த்தி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி நஞ்சுண்டசாமி வீட்டில் இல்லாத நேரத்தில் நாகராஜ மூர்த்தியும், சாக்கம்மாவும் உல்லாசமாக இருந்துள்ளனர். அந்த சமயத்தில், சிறுவன் பிரீத்தம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்துள்ளான். அப்போது, தாயும், நாகராஜ மூர்த்தியும் அரைகுறை ஆடைகளுடன் உல்லாசமாக இருப்பதை பிரீத்தம் பார்த்துள்ளான்.

இதனை பார்த்து அவர்கள் 2 பேரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறுவன் பிரீத்தம், தங்கள் கள்ளத்தொடர்பு விவகாரம் பற்றி வெளியே கூறிவிடுவானோ என்று 2 பேரும் பயந்துள்ளனர். மேலும், சிறுவன் பிரீத்தமை கொலை செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, நாகராஜ மூர்த்தி சிறுவன் பிரீத்தமை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு கிராமத்தையொட்டி உள்ள ஏரியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். பின்னர், சிறுவனின் உடல் ஏரியில் இருந்து மீட்கப்பட்டபோது, சாக்கம்மாவும், நாகராஜ மூர்த்தியும் எதுவும் தெரியாதது போல பிரீத்தமின் உடலை பார்த்து அழுதுள்ளனர். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


தாய்-கள்ளக்காதலன் கைது

இதையடுத்து கொள்ளேகால் டவுன் போலீசார் நாகராஜ மூர்த்தி மற்றும் சாக்கம்மாவை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


ரேஷன் கடை ஊழியர்கள் நாளை முதல் வேaலைநிறுத்தம் - Fair Price Shop Strike News

நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும், நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். பணி வரன்முறை, ஓய்வூதியம், மருத்துவ படியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 30  கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்கும் இந்த போராட்டத்தால் 30 ஆயிரம் ரேஷன் கடைகள் மூடப்படும் எனவும் கூறினார். நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


பெண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய மருத்துவ குறிப்புகள்....!


இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். இவை பருத்தி மூலப்பொருளினால் செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம் என்றுதான் நாம் நினைத்துகொள்வோம். ஆனால் நம் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ ரசாயனங்கள்  இதில் இருக்கிறது.
பெரும்பாலான நாப்கின்கள், வண்ணம் போக்குகின்ற ரசாயனங்களாலும், மீள்சுழற்சி செய்யப்பட்ட காகிதங்களாலும் தயாரிக்கப்படுகின்றன. இதில் டயாக்சின் என்ற  ரசாயனம் கலக்கப்படுக்கிறது. இவை கர்ப்பப்பையைப் பாதிக்கும் அளவிற்குத்தீங்கானது என்று ஆய்வுகள் கூறுகின்றன. சானிட்டரி நாப்கினில் ஈரத்தை உறிஞ்சுவதற்காக Hxcdf கலக்கப்படுகிறது. இந்த ரசாயனங்கள் நோய்த் தடுப்பாற்றலையும், கருமுட்டை உற்பத்தித் திறனையும்  குறைக்கக்கூடியவை. 

பொதுவாகவே சானிட்டரி நாப்கின்கள் அசுத்தமான இடங்களில் தான் வைக்கப்படுகின்றன. கழிப்பறை சிங்க் அடியில், கழிப்பறை மேஜை மீது அல்லது பைக்குள்,  மற்ற பொருட்களின் நடுவில் குப்பை போல் வீசப்படுகின்றன. ஒவ்வொரு பாக்கெட்டும் முறையாக சீல் செய்யப்படுவது அவசியமாகும். பெரும்பாலான நுண்ணுயிரிகள் நேரடியாகக் காற்றோட்டமில்லாத சூழ்நிலையில் வாழக்கூடியவை. இதனால் சானிட்டரி நாப்கின் காற்றோட்டமாக இருப்பது  அவசியமாகும். பெரும்பாலான கழிவறைகள் இருட்டாகவும், ஈரமாகவும் இருப்பதால் நுண்ணுயிரிகள் எளிதாக நாப்கினில் தொற்றிக் கொள்ள வழிவகை செய்யும். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!


நாப்கின் மாற்றும்போது கைகளைக் கழுவாமல் இருப்பது, புதிய நாப்கினை பயன்படுத்துவதற்குக் கைகளை கழுவாமல் உபயோகிப்பது தவறான பழக்கம்.  உபயோகித்த நாப்கினை எடுத்துவிட்டுக் கை கழுவாமல் புதிய நாப்கினை பாக்கெட்டில் இருந்து எடுப்பது, நுண்ணுயிரிகளை மேலும் பரவச் செய்யும். உணவுப்பொருட்களில் இருப்பது போல் எல்லா நாப்கின் பாக்கெட்களிலும் காலாவதி தேதி இருப்பதில்லை. ஆனால் காலாவதி தேதி குறிப்பிட்டிருக்கும் நாப்கினை வாங்கிப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது.

ஒவ்வொரு நாப்கினையும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவது, தவறான அணுகுமுறை. உடல் நலத்தைப் பணயம் வைத்துப் பணத்தைச் சேமிப்பது  நல்லது அல்ல. நாப்கின்களைப் பயன்படுத்துவதைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பதைப் போல், அதை அப்புறபடுத்துவதைப் பற்றித் தெரிந்துகொள்வதும் மிக அவசியம். உபயோகப்படுத்திய நாப்கினை டாய்லெட் பிளஷ்ஷில் போடுவது மிகவும் தவறான ஒன்றாகும். குறிப்பாக ஆண்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகப் பெண்கள் சில தவறுகளை செய்கின்றனர். மாதவிடாய் என்பது பெண் உடலில் ஏற்படும் இயற்கையான  ஒரு வளர்சிதை மாற்றம் என்ற எண்ணத்தையும், விழிப்புணர்வையும் வளர்த்துக் கொள்ளவேண்டும். 

உபயோகித்த நாப்கினை பேப்பரில் சுற்றிக் குப்பைத் தொட்டியில் போடவும். மேலும் குப்பைத் தொட்டிகளை நீண்டகாலம் காலிசெய்யாமல் வைத்திருந்தால் கிருமிகள் தொற்றும் வாய்ப்புகள் உள்ளது. பெண் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு அவசியம் வேண்டும். உங்கள் பெண் பிள்ளைகளுக்கு எந்த கூச்சமும் இல்லாமல் நாப்கினை வாங்குவதற்கு கற்று  கொடுப்பது நல்லது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்