Run World Media: 10/25/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 25, 2018

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  புதுப்பிக்க தவறியவர்களுக்கு  மீண்டும் புதுப்பித்துக்கொள்ள  வாய்ப்பினை அறிவித்து தமிழக அரசு அரசாணை அறிவித்துள்ளது

இந்த வாய்ப்பினை வரும் மூன்று மாதத்திற்குள்  பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


இயேசு சொன்ன உவமைகள் : நல்ல சமாரியன்எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசிப்பவன், மனிதனை நேசிக்காமல் இருக்க முடியாது. “என்னை நேசிப்பவன் என் கட்டளைகளைக் கடைபிடிப்பான்” என்பதே இயேசுவின் வாக்கு. 

 லூக்கா 10 : 25..36

திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என்று அவரிடம் கேட்டார்.

(தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!


அவர் மறுமொழியாக,

‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’
என்று எழுதியுள்ளது” என்றார்.  இயேசு, “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்” என்றார்.  அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை:“ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறுநாள் இருதெனாரியத்தை⁕ எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்’ என்றார்.“கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?” என்று இயேசு கேட்டார். அதற்கு திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரே” என்றார். இயேசு, “நீரும் போய் அப்படியே செய்யும்” என்று கூறினார்.  இயேசுவிடம் கேள்வி கேட்பவர்கள் பெரும்பாலும் அவரை எப்படியாவது மாட்டி விடவேண்டும் எனும் நோக்கத்தில் தான் கேள்விகளைக் கேட்டார்கள். அதிலும் குறிப்பாக, மறைநூல் அறிஞர்கள், சட்ட வல்லுநர்கள், பரிசேயர்கள், குருக்கள் போன்றவர்களுடைய கேள்விகள் இரண்டு சிந்தனைகளை உள்ளடக்கியனவாகவே இருந்தன.1. தங்களுடைய மறை ஆளுமையை, மத அறிவை வெளிப்படுத்த வேண்டும் எனும் நோக்கம்.

2. இயேசுவை அவரது வாயாலேயே மாட்ட வைக்க வேண்டும் எனும் சிந்தனை.

இந்த கேள்வியும் அப்படிப்பட்ட‌ ஒரு கேள்வி தான். இங்கே கேள்வி கேட்ட நபர் திருச்சட்டத்தை அலசி ஆராய்ந்தவர். மத சட்டங்களின் சந்து பொந்துகளில் உலவியவர். அவருடைய கேள்வி “நிலைவாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்” என்பது.யூதர்களுடைய நம்பிக்கைப்படி, நிலைவாழ்வு பெறவேண்டுமெனில் மத சட்டங்களைக் கடைபிடித்தால் போதும். இயேசு என்ன சொல்கிறார் என்பதைக் கேட்பதற்காக அவன் அந்தக் கேள்வியை இயேசுவின் முன்னால் வைக்கிறான்.

சட்ட வல்லுநருக்கு இயேசு சட்டத்தின் வழியிலேயே சென்று ஒரு கேள்வியைக் கேட்கிறார். “திருச்சட்டத்தில் என்ன சொல்லியிருக்கிறது ?”

கேள்வி கேட்டவனுக்கு குஷி. இந்த ஏரியாவில் அவன் எக்ஸ்பர்ட். சட்டென சொல்லி விடுகிறான் பதிலை. எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசி, உன்னைப் போல உனக்கு அடுத்திருப்பவனை நேசி. அது தான் திருச்சட்டத்தின் சாரம்சம் என்றான்.சரியாகச் சொன்னாய். அப்படியே செய், உனக்கு நிலைவாழ்வு கிடைக்கும் என்றார் இயேசு.  எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசிப்பவன், மனிதனை நேசிக்காமல் இருக்க முடியாது. “என்னை நேசிப்பவன் என் கட்டளைகளைக் கடைபிடிப்பான்” என்பதே இயேசுவின் வாக்கு. இறைவனின் கட்டளைகள் மனிதனை அன்புசெய்வதில் தான் நிறைவு பெறுகின்றன.  கேள்வி கேட்டவனுக்கு அத்துடன் திருப்தி வரவில்லை. தான் எல்லாமே பக்காவாக செய்து வருவதாக அவனுக்கு ஒரு தற்பெருமை. கேள்வி கேட்டவன் ஒரு யூதனாய் இருக்கலாம். அவன் தன்னுடைய நேர்மைத் தன்மையை வெளிப்படுத்தி விடும் நோக்கில் அடுத்த கேள்வியைக் கேட்டான்.“யார் எனக்கு அடுத்திருப்பவன்”, எனது அயலான் யார் ? யார் எனக்கு பிறன் ?

அப்போது தான் இயேசு இந்த உவமையைச் சொல்கிறார்.

வழியிலேயே கள்வர்களால் குற்றுயிராக்கப்பட்ட நிலையில் கிடக்கிறார் ஒரு மனிதர். ஒரு குரு, குருவுக்கு உதவி செய்யும் லேவியர் இருவரும் தற்செயலாய் அந்த வழியாய் வருகின்றனர். ஆனால் அவனைக் கண்டதும் விலகிச் சென்றனர். அவனுக்கு உதவ மத மனங்கள் முன்வரவில்லை. அப்போது அங்கே பயணமாய் வருகிறான் சமாரியன் ஒருவன். யூதர்களின் ஜென்ம விரோதி.அவன் அடிபட்டவனை நெருங்கி, முதலுதவி செய்து, விலங்கின் மீது ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டு சென்று, பணம் கொடுத்து, மீண்டும் தேவைப்பட்டால் தருவதாக உத்தரவாதமும் கொடுத்து கிளம்பிச் செல்கிறான்.  இப்போது இயேசு கேள்வியை திருப்பிக் கேட்கிறார். அடிபட்டவனுக்கு யார் அயலான் ? “அவனுக்கு இரக்கம் காட்டியவனே” என்கிறான் திருச்சட்ட வல்லுநர். அவனுடைய வாயில் அந்த ‘சமாரியன்’ எனும் வார்த்தையே வரவில்லை. அந்த அளவுக்கு வெறுப்பு அவனுக்குள் இருந்தது.இயேசு சொன்னார், “நீயும் போய் அவ்வாறே செய்”


தேவையில் இருக்கும் நபருக்கு உதவுபவனே அடுத்திருப்பவன். அதாவது இதயங்களால் அடுத்திருக்க வேண்டும், உடலாலோ, நில எல்லைகளாலோ அடுத்திருப்பதில் எந்த பயனும் இல்லை. மனித நேயத்தை மறுதலிக்கும் விஷயங்களில் இறைவன் இருப்பதில்லை.அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


பெண்கள் வீட்டுத்தோட்டம் அமைப்பது எப்படி?நாம் இயற்கை முறையில் வளர்க்கும் காய்கனிகளில் இயற்கை உரங்களை இட்டு வளர்ப்பதால் பூச்சி மருந்து மற்றும் நச்சு இல்லாத காய்கனிகளை பெறலாம். 

 
வீடுகளில் இருக்கும் காலி இடங்களில் தோட்டம் அமைத்து காய்கனிகளை சாகுபடி செய்யலாம். கடைகளில் வாங்கும் காய்கறிகளில் பூச்சி மருந்தின் தாக்கம் இருக்கும். ஆனால், நாம் இயற்கை முறையில் வளர்க்கும் காய்கனிகளில் இயற்கை உரங்களை இட்டு வளர்ப்பதால் பூச்சி மருந்து மற்றும் நச்சு இல்லாத காய்கனிகளை பெறலாம். (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!! காலி இடம்


வீடுகளில் இருக்கும் காலி இடங்களில் சிறிய அளவில் வீட்டு தோட்டம் அமைக்கலாம். ஆனால், ஒரு குடும்பத்திற்கு ஆண்டு முழுவதும் காய்கனிகளை பெற சற்று கூடுதலான இடத்தில் தோட்டங்களை அமைக்கலாம். ஒரு நபருக்கு ஒரு சென்ட் என்ற விகிதத்தில் 5 நபர்கள் உள்ள குடும்பத்திற்கு 5 சென்ட் வீதம் தோட்டம் அமைத்தால் ஆண்டு முழுவதும் வீட்டிற்கு தேவையான காய்கனிகளை பெறலாம்.வீட்டு தோட்டம் அமைக்க உள்ள இடத்தை தேர்வு செய்து கொண்டு அந்த இடத்தில் காணப்படும் தேவையற்ற சிமெண்டு கட்டிகள், கற்கள் உள்பட செடிகளின் வளர்ச்சியை பாதிக்கும் பொருட்களை முதலில் அகற்ற வேண்டும். தேர்ந்தெடுத்த நிலத்தை சத்துள்ளதாக மாற்ற அந்த மண்ணின் வளத்தை மேம்படுத்த வேண்டும்.தொழு உரம்

உதாரணமாக, நிலத்தின் மண் உவர் மண்ணாக இருந்தால் பசுந்தாள், செம்மண் மற்றும் தொழுஉரத்தை நிலத்தில் இட்டு 2½ அடி ஆழம் வரை மண்ணை கொத்தி விட வேண்டும். களிமண் நிலமாக இருந்தால் பசுந்தாள் உரம், தொழுஉரம், சாம்பல் இவைகளை கலந்தும், களர் மண்ணாக இருந்தால் பசுந்தாள் உரத்தை அதிக அளவில் இட வேண்டும். சாதாரணமாக தோட்ட மண்ணில் தொழுஉரம் அல்லது கம்போஸ்ட் இவைகளை அதிகமாக இட்டு மண்ணை வளப்படுத்தி கொள்ளலாம்.காய்கனிகளை பயிரிடும் போது நீண்ட காலப்பயிர்களான முருங்கை, கருவேப்பிலை, கொய்யா, மாதுளை, எலுமிச்சை, பப்பாளி, லட்சக்கொட்டை கீரை, தவசிக்கீரை போன்றவற்றை தோட்டத்தின் ஓரத்தில் நட வேண்டும். இந்த சிறிய ரக செடிகளில் நிழலானது, தோட்டத்தின் உள்பகுதியில் விளையும் காய்கனி பயிர்களின் மீது படாதவாறு இருக்க வேண்டும். விரைவில் பலன் தரக்கூடிய கீரைவகைகள், கொத்தமல்லி இவைகளை தோட்டத்தில் நடப்பதற்காக விடப்பட்ட நடைபாதைகளின் 2 பக்கங்களிலும் சிறுபாத்தி அமைத்து பயிரிடலாம். பாத்திகளை பிரித்து, வரப்புகளில் வெங்காயம், முள்ளங்கி, இஞ்சி இவைகளை பயிரிடலாம்.கொடி வகைகள்

படரும் கொடிவகைகளை தனி கவனத்துடன் பயிரிட வேண்டும். தோட்டத்தின் 4 மூலைகளிலும் பந்தல் அமைத்து அதன்கீழ் பாகல், பீர்க்கு, புடலை, அவரை ஆகியவற்றை விதைத்து பயன் பெறலாம். அவரை மற்றும் புடலையை ஒரே பந்தலில் படர விட வேண்டும். அவரை பூ விடும் முன் புடலை பூ விட்டு பலன் கொடுத்து விடும். அதிக வயதுடைய பயிரான கத்தரி, மிளகாய் பயிர்களுக்கு இடையே ஊடுபயிராக குறைந்த கால வயது பயிரான முள்ளங்கி, தண்டுக்கீரை இவைகளை சாகுபடி செய்து பலன் பெறலாம்.  பயிர் நோய்கள் தாக்கும் நிலை காணப்பட்டால் வேம்பு கரைசல் உள்ளிட்ட இயற்கை பூச்சி கொல்லிகளை பயன் படுத்தி நோய்களை கட்டுப்படுத்த வேண்டும்.நடவு காலம்

வீட்டு தோட்டம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட காலி இடத்தை சம அளவுள்ள பாத்திகளாக பிரித்து கொண்டால் முதல் பாதி பிப்ரவரி, மே மாதத்தில் தக்காளி பயிரும், ஜூன், ஜூலை மாதத்தில் டிசம்பர் மாதம் வரை கத்தரியும், ஜனவரி முதல் பிப்ரவரி வரை கீரை வகைகளையும் பயிர் செய்யலாம். இதே போல் 2-வது பாத்தியில் மார்ச் முதல் ஜூன் வரை வெண்டையும், ஜூன் முதல் செப்டம்பர் வரை கொத்தவரையும், செப்டம்பர், அக்டோபரில் முள்ளங்கியும், நவம்பர், பிப்ரவரியில் வெங்காயமும் பயிரிடலாம்.இதே போல் 3-வது, 4-வது பாத்திகளில் பயிரினை மாற்றி மாற்றி ஆண்டு முழுவதும் அனைத்து காய்கறிகளும் தினந்தோறும் கிடைக்கும் வண்ணம் திட்டமிட்டு பயிரிடலாம். காய்கறி பயிருக்கு என்று தயாரிக்கப்படும் நுண்ணுயிர் மற்றும் காய்கனி கலப்புரத்தை இட்டு கூடுதல் மகசூல் பெறலாம். இதன் மூலம் அன்றாடம் வீட்டு சமையலுக்கு நமது வீட்டு தோட்டத்தில் விளையும் காய்கறிகள் சுவையுடன் சத்தையும் தருவதாக இருக்கும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Postsஆதரவற்ற தொழிலாளிக்கு தள்ளுவண்டியில் இறுதி ஊர்வலம் - மரித்துப் போனதா மனிதநேயம்?தேனியில் ஆதரவற்ற தொழிலாளி பிணத்தை மயானத்துக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யாமல் தள்ளுவண்டியில் இறுதி ஊர்வலமாக எடுத்துச் சென்ற சம்பவம் மனிதநேயம் மரித்துப்போனதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.


 தேனி வாரச்சந்தை வளாகத்தில் நேற்று காலையில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். தகவலறிந்த தேனி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் இறந்து கிடந்தவர் சிவனாண்டி, அவருக்கு சுமார் 60 வயது இருக்கும் என்றும், அவர், பல ஆண்டுகளாக சந்தையில் தள்ளுவண்டியில் பொருட்களை ஏற்றிச் செல்லும் தொழிலாளியாக வேலை பார்த்தது தெரியவந்தது. (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!! மேலும் விசாரணையில், அவர் ஆதரவற்ற நிலையில், தங்குவதற்கு வீடு இன்றி வாரச்சந்தையிலேயே தங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
இதற்கிடையே அவருடைய பிணத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி எதுவும் செய்யப்படவில்லை. ஆதரவற்ற நிலையில் கிடந்த பிணத்தை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 2 பேர் ஒரு தள்ளுவண்டியில் வைத்து தேனி பள்ளிவாசல் தெருவில் உள்ள மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அவர்களுடன் போலீஸ்காரர் ஒருவரும் சென்றார்.

அவர்கள் தேனி-கம்பம் பிரதான சாலையில் நேரு சிலை சிக்னல் வழியாக சென்றபோது, அவருடைய முகத்தை கூட மூடாமல் இருந்தனர். இதைப்பார்த்த பொதுமக்களும், வாகனங்களில் சென்றவர்களும் வேதனை அடைந்தனர். பின்னர் பள்ளிவாசல் தெருவில் உள்ள மயானத்தில் குப்பைகள் கொட்டப்பட்ட பகுதியில் தள்ளுவண்டியை நிறுத்தி வைத்தனர். நீண்டநேரம் கழித்து அவருடைய உடலை அடக்கம் செய்தனர்.ஆதரவற்ற நிலையில் இருந்த சிவனாண்டிக்கு, மரணத்துக்கு பின்னும் ஆம்புலன்ஸ் கூட ஏற்பாடு செய்து அடக்கம் செய்யாமல், தள்ளுவண்டியில் இறுதி ஊர்வலம் நடத்தியது மனித நேயம் மரித்துப் போய்விட்டதா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.  இதுகுறித்து தேனி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘பிணம் கிடப்பதாக தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். விசாரணை நடத்தியபோது இயற்கையான மரணம் என்று தெரிய வந்தது. மேலும், அவர் அடையாளம் தெரிந்த நபர் என்பதால் வழக்குப்பதிவு செய்ய வேண்டிய தேவை ஏற்படவில்லை. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் நகராட்சி சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகம் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யாததால் துப்புரவு பணியாளர்கள் தள்ளுவண்டியில் பிணத்தை வைத்து மயானத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்’ என்றார்.


நகராட்சி சுகாதார அலுவலர் சுந்தர்ராஜனிடம் கேட்டபோது, ‘வழக்கமாக இதுபோன்ற பிணங்களை போலீசார் தான் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொண்டு செல்வார்கள். நகராட்சி மூலம் பிணத்தை எடுத்துச் செல்வதற்கு கிராம நிர்வாக அலுவலர் மூலம் முறையான கடிதம் கிடைக்கப்பெறவில்லை. பிணத்தை அப்புறப்படுத்தும் பணிக்காக துப்புரவு பணியாளர்கள் உதவிக்கு சென்றுள்ளனர்’ என்றார்.தேனி கிராம நிர்வாக அலுவலர் குமரேசனிடம் கேட்டபோது, ‘எனக்கு தகவல் கிடைத்தபோது, நான் ஒரு வழக்கு தொடர்பாக கோர்ட்டுக்கு சென்று இருந்தேன். தொலைபேசியில் தொடர்பு கொண்டு போலீசாருக்கும், சுகாதார அலுவலருக்கு தகவல் கொடுத்து இருந்தேன். கோர்ட்டில் இருந்து வந்து, முறையான கடிதம் கொடுப்பதாக தெரிவித்து இருந்தேன். அதற்குள் தள்ளுவண்டியில் பிணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்’ என்றார்.  அரசு இலவச அமரர் ஊர்தி சேவையை செயல்படுத்தி வருகிறது. அதை பயன்படுத்தி இருந்தாலே தள்ளுவண்டியில் இறுதி ஊர்வலம் நடத்தும் அவல நிலை ஏற்பட்டு இருக்காது, என்பது பலரது ஆதங்க குரலாக ஒலித்தது. அடையாளம் தெரியாத பிணம் கிடந்தால் போலீசார் அதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவது வழக்கம். அதுவே அடையாளம் தெரிந்த நபர் இயற்கையாக உயிரிழந்து இருந்தால் பெரும்பாலும் வழக்குப்பதிவு செய்வது கிடையாது. உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும். இதுபோன்ற நிகழ்வுகளில் பெரும்பாலும் போலீசாரே ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்வது வழக்கமாக உள்ளது. தற்போது தேனியில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யாமல் தள்ளுவண்டியில் பிணத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இதன்மூலம் ஆம்புலன்ஸ் யார் ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன? ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்வது யாருடைய பொறுப்பு? என்பது குறித்து தேனி தாசில்தார் சத்தியபாமாவிடம் கேட்டபோது, ‘ஆதரவற்ற பிணம் பொது இடங்களில் கிடந்தால், இயற்கை மரணமாக இருந்து பிரேத பரிசோதனை தேவைப்படாத பட்சத்தில் அதை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவ இடம் கிராமப்புற பகுதியாக இருந்தால் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், நகர் பகுதியாக இருந்தால் நகராட்சி நிர்வாகத்துக்கும் கிராம நிர்வாக அலுவலர் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பிணத்தை அப்புறப்படுத்தி அடக்கம் செய்யப்பட வேண்டும். அப்போது வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருப்பார்கள்’ என்றார். 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

 

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்