Run World Media: 10/26/18

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 26, 2018

செவ்வாய்க்கிழமை ராத்திரி கெஸ்ட் ஹவுஸில் மீட் பண்ணலாம்.. ஆசை ஆசையாய் போய் பார்த்தால்!பெண் பார்க்க தனியாக சென்றவரின் கதி என்ன ஆனது தெரியுமா ?
 சென்னை: கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணி, அதற்காக வரன் பேசப்பட்ட ஒரு பெண்ணை நேரில் பார்க்கலாம்னு ஆசை ஆசையா ஓடிசென்ற இளைஞர் ஆடிப்போய் நின்ற அதிர்ச்சி சம்பவம் இது! சென்னை எம்எம்டிஏ காலனி திருக்குறளார் தெருவை சேர்ந்தவர் சேர்ந்தவர் காளிசரண். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வீட்டில் நீண்ட காலமாகவே திருமணம் செய்ய அவரிடம் வற்புறுத்தி கொண்டே இருந்தனர். தட்டிக் கழித்துகொண்டே சென்ற காளிசரண், கடைசியாக 2 வருடத்திற்கு முன்புதான் கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டார்.

பெண்ணிடம் அழைப்பு
 ஆனால் 2 வருடமாகவே பெண் ஏதும் அமையவில்லை. இதற்காக மேட்ரிமோனியல் அமைப்புகளிடம் எல்லாம் அணுகி தனக்கேற்ற பெண் வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இதுபோல திருமண வரன் பார்க்கும் அமைப்புகளிடம் ஆன்லைன் மூலம் பதிவு செய்து வைத்திருந்தார். அதில் ஒரு அமைப்பின் மூலம் ஒரு பெண் காளிசரணுக்கு போன் செய்தார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

மீட் பண்ணலாமா?
 "என் பெயர் பிரியா ஐயர், பெங்களூரில் வேலை பார்க்கிறேன், உங்களை பற்றிய தகவல்களை ஆன்லைனில் பார்த்து விட்டோம். உங்களை நேரில் பார்க்க வேண்டுமே... ஒருமுறை நாம் பார்த்துவிட்டால் கல்யாணம் பேசி முடிக்க வேண்டியதுதான்" என்றார். இதற்கு காளிசரணும், "எப்போது, எங்கே பார்க்கலாம் என்று நீங்களே சொல்லுங்கள்" என்றார். பிரியா ஐயர், "செவ்வாய்கிழமை ராத்திரி சங்கம் தியேட்டரில் மீட் பண்ணலாம்" என்றார்.சங்கம் வேண்டாம் 
 ஆனால் காளிசரணுக்கு திரும்பவும் போன் செய்த பிரியா ஐயர், சங்கம் தியேட்டரில் வேண்டாம், வடபழனி மாலில் பாக்கலாம்" என்றார். திரும்பவும் போன் செய்து, "வடபழனி வேண்டாம்... பொன்னம்மாள் தெருவில் ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு... அங்க வந்திடுங்க" என்றார். இப்படி மாற்றி மாற்றி இடத்தை சொன்னாலும், 2 வருடமாக பெண் கிடைக்காமல் இப்போதுதான் ஒரு பெண் கிடைத்துள்ளதால், சொன்ன இடத்துக்கெல்லாம் காளி சரண் 'வருகிறேன்' என்றே சொன்னார்.


கெஸ்ட் ஹவுஸ் 
அதன்படி கடைசியாக அந்த பெண் சொன்ன இடத்துக்கு காளிசரண் போனார். கல்யாணம் செய்து கொள்ள போகும் பெண் எப்படி இருப்பார், எப்படி பழகுவார் என்ற எண்ணங்களுடனே காளிசரண் சென்றார். அப்போது பிரியா ஐயர், கெஸ்ட் ஹவுஸ் வாசலில் நின்றிருந்தார். தன்னை ஊர், பெயருடன் அறிமுகப்படுத்தி கொண்டார். பிறகு, "மாடியில் என் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள், வாங்க போகலாம்" என்று காளிசரணை கூட்டிக் கொண்டு ரூமுக்கு சென்றார். அங்கே 3 ஆண்களும் இருந்தனர்.போட்டோ எடுத்தனர்
 பெண்ணின் சொந்தக்காரர்கள் ஆயிற்றே என்று புன்னகையுடன் சென்றார். ஒரு வார்த்தைகூட காளிசரண் பேச ஆரம்பிக்கவில்லை, அதற்குள் வந்த 3 பேரும் கத்தியை எடுத்து கொண்டு காளிசரணை மிரட்டினர். செயின், மோதிரம், எல்லாத்தையும் கழட்டு என்று மிரட்டி வாங்கியதுடன், செல்போனை மற்றும் ஏடிஎம் கார்டினை பிடுங்கி கொண்டனர். பிறகு ஏடிஎம் பின்கோடு என்ன என்று கேட்டு அதையும் வாங்கி கொண்டனர். கடைசியாக காளிசரணை தனியாக நிற்க வைத்து போட்டோ எடுத்தனர். ஒருவேளை தங்களை பற்றி வெளியே போய் சொன்னால் இந்த போட்டோவை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று மிரட்டினர்.


4 பேர் அடையாளங்கள்
 ஆனாலும் இப்படி ஒரு பெண்ணை நம்பி ஏமாந்து எல்லாத்தையும் இழந்து விட்டோமே என்பதை காளிசரணால் ஏற்றுக் கொள்ளவே இல்லை. நேராக வடபழனி போலீஸ் ஸ்டேஷன் சென்று புகாரையும் கொடுத்து, வந்திருந்த 4 பேர் பற்றின அடையாளங்களையும் சொன்னார். இதுகுறித்து போலீசார் சம்பந்தப்பட்ட கெஸ்ட் அவுஸ் சென்று அங்கு விசாரணை நடத்தி வருவதுடன், அந்த தெருவில் உள்ள சிசிடிவி காமிரா காட்சிகளை கொண்டும் ஆய்வு செய்து வருகிறார்கள்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


திருமணமாகாத விரக்தியில் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலைதிருமணமாகாத விரக்தியில் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

 
ஆவடியை அடுத்த சேக்காடு பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவருடைய தம்பி வடிவேலு (வயது 40). இவர் வேலூரில் தங்கி இருந்து பேக்கரிகளுக்கு சரக்கு வினியோகிக்கும் வேலை செய்து வந்தார். வடிவேலுக்கு திருமணமாகவில்லை என்பதால் அவர் மிகுந்த விரக்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது. (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!


இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வடிவேலு, தனது அண்ணன் சங்கரை பார்க்க ஆவடி வந்தார். அப்போது அவர் தனக்கு 40 வயதாகியும் திருமணம் ஆகாததை சங்கரிடம் கூறி வருத்தப்பட்டு உள்ளார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற வடிவேலு பின்னர் வீடு திரும்பவில்லை. இது பற்றி அறிந்து சங்கர் தனது தம்பி, வடிவேலுவை தேடி வந்தார்.


இதற்கிடையே சேக்காடு பிரதான சாலையில் வடிவேலு மயங்கிய நிலையில் கிடப்பதாக சங்கருக்கு தகவல் கிடைத்தது. சங்கர் உடனே அங்கு சென்று பார்த்த போது, வடிவேலு மதுபோதையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, சங்கர், வடிவேலுவை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் மதுவில் விஷம் கலந்து குடித்தது தெரியவந்தது.


இதையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நள்ளிரவு 12.30 மணியளவில் வடிவேலு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


ஐடிஐ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை !தொழிற் கல்வி அளிக்கும் அரசு கல்வி நிறுவனமான ஐடிஐ-யில் பயிலும் பின்தங்கிய மாணவர்களுக்கு ஸ்ரீ வித்யாசாகர் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஐடிஐ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ! 
 தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ளஅரசு அங்கீகாரம் பெற்ற ஐடிஐ-யில் படித்து வரும் மாணவர்கள் இந்த கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
 விண்ணப்பப் படிவம் பெற:-
 இந்த ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பி-1, நறுமுகை அடுக்ககம், பிருந்தாவன் நகர் விரிவு, ஆதம்பாக்கம், சென்னை - 88 என்ற முகவரியில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


10-வது தேர்ச்சியா ? தமிழக அரசில் ரூ.65 ஆயிரத்திற்கு வேலை !தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் உள்ள இளநிலை ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10, 12-வது தேர்ச்சி அடைந்திருந்தாலே போதுமானது. தகுதியும், விருப்பமும் உடையோர் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.


10-வது தேர்ச்சியா ? தமிழக அரசில் ரூ.65 ஆயிரத்திற்கு வேலை !
 வேலை : இளநிலை ஆய்வாளர் 
 காலிப் பணியிடம் : 30 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

 கல்வித் தகுதி : 10 மற்றும் 12-வது தேர்ச்சி
 அதிகாரப்பூர்வ அறிவிப்பு : www.tnpscexams.in/
 வயது வரம்பு:- 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
 ஊதியம் : ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை

 விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் http://www.tnpsc.gov.in என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
 விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 23.10.2018 முதல்
 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 21.11.2018

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

 தேர்வு நடைபெறும் தேதி : 27.01.2019
 விண்ணப்பக் கட்டணம் : ரூ.150
 தேர்வுக் கட்டணம் : ரூ.150
 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவம் பெறவும் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnpsc.gov.in/latest-notification.html அல்லது http://www.tnpsc.gov.in/notifications/2018_28_notyfn_JICS.pdf என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

மனைவியை கூட்டி வர கிளம்பினார் கணவர்.. தூக்கி வாரி போட்ட அந்த போட்டோ.. பரிதாப தற்கொலை!மனைவியை கூட்டி வர கிளம்பிய கணவர் தற்கொலை! கொடைக்கானல்: கோபித்து கொண்டு தன் அம்மா வீட்டுக்கு போன பொண்டாட்டியை மீண்டும் கூட்டி வருவதற்காக சென்ற கணவன் தற்கொலை செய்து கொண்டார். எதற்காக? ஏன்? இதை படிங்க!! கொடைக்கானல் அருகே உள்ள பி.எல்.செட்டு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வராணி. அவருக்கு வயது 25. கல்யாணம் ஆகி 2 வருடமாகிறது. ஆனால் எப்ப பார்த்தாலும் சண்டை.. சண்டை.. அதற்கு காரணம் சசிகுமாரின் நாசமா போன குடி!!

அம்மா வீடு
 இவர் ஒரு முழு நேர குடிகாரர். அதனால்தான் தினமும் வீட்டில் இரண்டு பேருக்கும் தகராறு நடந்து கொண்டே இருக்கும். இப்படியே சண்டை, சச்சரவாய் குடும்பம் போய் கொண்டிருந்த நிலையில், ஒரு கட்டத்தில் வெறுப்பாகிவிட்ட செல்வராணி, சசிகுமார் மேல் கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு போய் விட்டார்.  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!


தவறை உணர்ந்தார்
 இதனால் வீடு வெறுமையாகி போனது. மனைவி வீட்டில் இல்லாததால் தவறை உணர்ந்தார் சசிகுமார். அதற்காக நல்லூர் காட்டு வளவு பகுதியில் உள்ள மாமியார் வீட்டுக்கு கிளம்பினார். அதற்காக பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டார். எப்படியாவது பொண்டாட்டியை சமாதானப்படுத்தி கூட்டி வந்து விட வேண்டும் என்று நினைத்துகொண்டே போனார்.மனைவியின் போட்டோ 
 அப்போது, செல்போனில் எடுத்து பார்த்து கொண்டிருந்தார். அப்போது தனது ஃபேஸ்புக்கில் திடீரென ஒரு போட்டோ இருப்பதை கண்டு ஷாக் ஆகிவிட்டார். காரணம், தன் மனைவிக்கு வேறு ஒரு இளைஞர் முத்தம் கொடுத்தது போன்ற போட்டோ அது. அந்த இளைஞர் இவர்கள் வசித்து வரும் அதே பகுதியை சேர்ந்தவர்தான். அந்த போட்டாவை பார்க்க பார்க்க சசிகுமாரால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.பஸ் சீட்டில் அதற்கு மேல் உட்காரகூட பிடிக்கவில்லை.


பூச்சி மருந்து 
 இதனால் கே.சி.பட்டி என்ற இடத்திலேயே பாதி வழியில் பஸ்சை விட்டு கீழே இறங்கிவிட்டார். பின்னர் அங்கிருக்கும் ஒரு கடைக்கு வேக வேகமாக சென்று பூச்சி மருந்தை வாங்கி மடக்கென்று குடித்து விட்டார். விஷம் குடித்த வேகத்திலேயே மாமனார் வீட்டுக்கு போனார். அங்கிருந்த மனைவியிடம் போட்டோ பற்றி கேட்டார்.மயங்கி விழுந்தார்
 முதலில் அவர் மறுத்தாலும் பிறகு "ஆமாம்" என்று ஒத்து கொண்டார். இதைக் கேட்டதும், ஏற்கனவே விஷம் சாப்பிட்டுவிட்ட சசிகுமார் அப்படியே மயங்கி சரிந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் கொண்டு சென்றும், காப்பாற்ற முடியவில்லை. சிகிச்சை பலனின்றி சசிகுமார் இறந்துவிட்டார். இதுகுறித்து, தாண்டிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்