Run World Media: 11/01/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 1, 2018

(அரசு வேலை ) மத்திய அரசின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைத் துறையில் வேலை வாய்ப்பு!மத்திய அரசின் பொது சேவைத் துறையான ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். யூபிஎஸ்சி-சார்பில் இப்பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும். வருடத்திற்கு இரு பிரிவுகளாக இரண்டு முறை நடத்தப்படும் இத்தேர்விற்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைத் துறையில் வேலை வாய்ப்பு!
 முதற்கட்ட தேர்வு:- 
அறிவிப்பு : 2018 அக்டோபர் 31
 தேர்வு நடைபெறும் நாள் : 2019 பிப்ரவரி 03
 (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 26
 இரண்டாம்கட்ட தேர்வு:-
 அறிவிப்பு : 2019 ஜூன் 12 
தேர்வு நடைபெறும் நாள் : 2019 செப்டம்பர் 08

 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜூலை 08
 விண்ணப்பப் படிவம் பெற : www.upsc.gov.in இப்பணியிடம் குறித்தும், விண்ணப்பப் படிவம், நுழைவுச்சீட்டு உள்ளிட்ட மேலும் விபரங்களை அறிய விரும்புவோர் யூபிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.upsc.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


ரூ.65 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் உள்ள நிரப்பப்பட உள்ள குரூப் III ஏ பணியிடங்களான 30 இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் நவம்பர் 21க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்த காலியிடங்கள்: 30

பதவி: இளநிலை ஆய்வாளர்

 தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.  (தொடர்ச்சி கீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!

வயது வரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.20,600 - ரூ.65,500

 விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in / www.tnpscexams.net / www.tnpscexams.in ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு  செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.01.2019

கட்டணம்: கட்டணம்: தேர்வுக் கட்டணமாக ரூ.150 மற்றும் விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மற்றும் வங்கிகள் மூலமாவும் செலுத்தலாம். எஸ்.சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒன்டைம் பதிவுக்கட்டணம் என்ற முறையில் விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.
 


மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_28_notyfn_JICS.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.11.2018


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது…


குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது தாய்மார்கள் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என மருத்துவத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.  குழந்தைகளுக்கு உணவூட்டும் சிரமம் பெரும்பாலும் தந்தையர் அறியாததே! குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் தாய்மார்கள் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என மருத்துவத் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

1. குழந்தைகள் உணவைச் சிந்திவிட்டால் திட்டுவதோ, அடிப்பதோ, மிரட்டுவதோ கூடாது. கூடவே, குழந்தைகளுக்கு எவ்வளவு உணவு தேவையோ அந்த அளவு மட்டுமே உண்ணப் பழக்குங்கள். போதும் எனுமளவுக்கு உண்டபின் அதிகமாய் உண்ணச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டாம். (தொடர்ச்சி கீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!

2. சோறு சாப்பிடு, கீரை சாப்பிடு அப்படி சாப்பிட்டால் சாக்லேட் வாங்கித் தரேன், ஐஸ்கிரீம் வாங்கித் தரேன் என்று சொல்வது தவறு. அப்படிச் சொல்வதனால் சோறு என்பது மோசமான பொருள் என்றும், சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவை நல்ல பரிசுப் பொருட்கள் போன்ற ஒரு தோற்றம் குழந்தைகளின் மனதில் பதிந்து விடும். நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகளுக்கு உணவின் மீதான நாட்டம் குறையவும், இனிப்புகளின் மீதான விருப்பம் மிகைப்படவும் இது ஒரு காரணமாகிவிடுகிறது.3. இனிப்புகளை முழுமையாய் தவிர்க்காதீர்கள். அப்படி மறுக்க மறுக்க குழந்தைகளுக்கு இனிப்புகளின் மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வரும். பின்பு வாய்ப்புக் கிடைக்கும் போது வட்டியும் முதலுமாய் சேர்த்து இனிப்பை உண்டு உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும். எனவே ஒரு குறிப்பிட்ட அளவு இனிப்பு வகையறாக்களை வழங்கி வருவதே சிறப்பானது.4. அதிக கொறித்தல் பொருட்களைக் குழந்தைகளுக்கு வழங்காமல் இருப்பதே நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் உணவு ஊட்டுவதும், சரியான நேரத்தில் தின்பண்டங்கள் கொடுப்பதும் நல்லது. எப்போதும் ஏதேனும் கொறித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் ஆரோக்கியமான மதிய உணவையோ, இரவு உணவையோ தேவையான அளவு சாப்பிட மறுக்கும்.  வீடுகளில் தேவையற்ற உணவுப் பொருட்களை வாங்கி நிறைக்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக நீங்கள் வாங்கி வைக்கும் குளிர்பானமோ, சிப்ஸோ குழந்தை சாப்பிடக் கூடாது என நீங்கள் எண்ணுவதில் அர்த்தமில்லை. குறைந்தபட்சம் குழந்தைகளிடமிருந்து அவற்றை முழுமையாய் மறையுங்கள்.

5. இன்றைக்கு எங்கும் பரவியிருக்கும் குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், எனர்ஜி பானங்கள் போன்றவை குழந்தைகளுக்கு எந்த நன்மையும் தருவதில்லை என்கிறது ஜெர்னல் பீடியாட்ரிக்ஸ் ஆய்வு முடிவு ஒன்று. மாறாக இவை உடல் நலத்தைக் கெடுத்து விடுகிறதாம். எனவே 100 விழுக்காடு பழச்சாறு என்றெல்லாம் கவர்ச்சிகரமாய் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.6. பழச்சாறு போன்றவற்றுக்குப் பதிலாக தண்ணீர் அதிகமாய் அருந்துவதற்குக் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். எல்லோரும் எல்லாவற்றையும் விரும்பமாட்டார்கள் என்பதும் நமக்கு மிகவும் பிடித்தது இன்னொருவருக்கு சுத்தமாகப் பிடிக்காமல் போகும் என்பதையும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். பிடிக்கவில்லை என்று சொல்வதனால் உங்கள் குழந்தையை திட்டாதீர்கள்.

7. குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உணவை கொடுத்து போரடிக்காதீர்கள். ஒரே மாதிரியான உணவைக் கொடுக்க வேண்டி வந்தால் அதன் வடிவத்தையோ, சுவையையோ எதையேனும் வித்தியாசமாய் காண்பியுங்கள். வித்தியாசமானவை குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்பதையும், பிடித்தமான பாத்திரத்துக்காகவே குழந்தைகள் உணவை உண்பார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.8. ஒரு கடி, ஒரு வாய் என குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். காய்கறி போன்றவற்றை தினமும் கொஞ்சம் கொஞ்சம் உண்ணப் பழக்கினாலே அவை நீண்டகால உணவுப் பழக்கமாய் மாறிவிடும். எனினும், எதையும் அளவுக்கு மீறி வற்புறுத்தாதீர்கள்.


9. குழந்தைகளுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பறவை, பூ, படகு என வித்தியாசமான வடிவங்களில் வெட்டிப் பரிமாறிப் பாருங்கள். குழந்தைகள் வெகுவாக விரும்பி உண்பார்கள்.  சிறு சிறு சமையல் வேலைகளில் உங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். அவர்களுக்கு உணவின் மீதான நாட்டம் அதிகரிக்கும்.   

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


வைட்டமின் பி12 குறைபாடுநல்ல சத்தான உணவினை முறையாக உண்டாலும் நான்கில் ஒருவருக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. 
 
20-ம் நூற்றாண்டில் இருந்தே மனிதன் உடல் உழைப்பினை சிறிது சிறிதாக குறைத்து வருகின்றான். சைக்கிள், கார் என வளர்ந்து இன்று ஒரு கம்ப்யூட்டர் மூலம் உலகை வலம் வருகின்றான்.  பன்னிரெண்டு மணிநேரம் கூட அமர்ந்தே இருக்கும் மனிதர்களுக்கு உடல் அசைவுகள், நடை இவை மிகக்குறையும். ஒரே காரணத்தினால் அவர்கள் ஆயுளைக் கூட அதிகம் குறைத்துக் கொள்கின்றனர் என்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
(தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!

மேஜை முன்னாடி வேலை என்றாலும் நின்று செய்ய பழகுங்கள். நான் காலையில் ஒரு மணிநேரம் நடக்கின்றேன், உடற்பயிற்சி செய்கின்றேன் என்று சொல்லி மீதி நேரம் அமர்ந்தே வேலை செய்வது உடலை வெகுவாய் பாதிக்கின்றது. ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை 250 அடிகள் நடக்க வேண்டும். 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 2 நிமிடங்களாவது எழுந்து நிற்கவேண்டும். நிற்பதும், நடப்பதும் உடல், மன சக்தியினை கூட்டும். உடல் செயல் பாட்டுத்திறனைக் கூட்டும். மூட்டுகளை இயல்பாய் செயல்பட வைக்கும். புற்றுநோய் தாக்குதலை குறைக்கும். மன உளைச்சலை நீக்கும். இனி அலுவலகத்தில் எல்லோருடனும் நடந்துகொண்டே வேலை செய்வீர்களா?கைகள் வலுவடைகின்றன.
வயிறு தசைகள் இறுக்கம் பெறுகின்றன.
ஆரோக்கி யமான கால் மூட்டு கிடைக்கின்றது.
கால்கள் பலம் பெறுகின்றன.


வைட்டமின் பி12-ன் சில செய்திகளைப் பற்றி அடிக்கடி கூற வேண்டிய அவசியம் மருத்துவ உலகில் உள்ளது. நல்ல சத்தான உணவினை முறையாக உண்டாலும் நான்கில் ஒருவருக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.  தண்ணீரில் கரையும் இந்த வைட்டமின் பி12 பல வருடங்கள் கூட கல்லீரலில் பாதுகாப்பாக சேகரித்து உடலை வைக்கின்றது. இது மிக அவசியம் என்பதால் இதனை பத்திரப்படுத்தி வைக்கும் இயற்கை உந்துதல் உடலுக்கு இருப்பது அதிசயத்தக்க ஒன்றே. இந்த வைட்டமின் பி12 நரம்பு மண்டலம், சீரண மண்டலம், ரத்தக் குழாய்கள், இனப் பெருக்கு மண்டலம் இவை அனைத்திற்கும் மிக முக்கியமானது.* ஹார்மோன்  சுரப்புகளை சீர் செய்யும்.
* நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டும்.
* மாவுச்சத்தினை குளூகோசாக மாற்றும்.
* புரதம் உடலில் ஏற்று சீராக செயல்பட உதவும்.
 * பொதுவில் சைவ உணவு உடட்கொள்பவர்களுக்கு பி12 குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இவர்கள் மருத்துவ  ஆலோசனைப்படி பி12 சத்து மாத்திரைகள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். வயது கூடும் பொழுது பி12 சக்தியை உணவிலிருந்து உரிஞ்சு சத்து குறையும், ஏனெனில் வயிற்றில் ஆசிட் சுரக்கும் தன்மை குறையும். பொதுவில் ரத்த சோகை, கை கால்களில் குறுகுறுப்பு.சோர்வு, மலச்சிக்கல், கண் பார்வை குறைதல், மன நலமின்மை, மறதி, நரம்பு பிரச்சினைகள் இவை பி12 குறைபாட்டின் அறிகுறிகளாக வெளிப்படும்.

உங்கள் மூளையினை சுறுசுறுப்பாக வைக்கின்றது?
* சக்தி * புரதம் * கார்பன் டை ஆக்சைட்

உங்கள் உணவினை முழுமையாய் செரிக்க உதவுவது எது?
* வயிறு மட்டுமே * சீரண மண்டலம் * மூளை

ஜீரண மண்டலத்தில் உள்ள ஏதாவது மூன்று உறுப்புகளின் பெயர் சொல்லுங்களேன் ?
உங்கள் சருமம், நகம், முடி, சதை, உள் உறுப்பு, மூளை எவற்றிலுமே புரதம் இல்லை.
* உண்மை * தவறு
வைட்டமின் டி யினைக் கூறும் மற்றொரு பெயர் என்ன?

* தூக்க வைட்டமின் * சூரிய ஒளி வைட்டமின்

நம்மை வேலை செய்ய ஏதுவாக்குகின்றது எது?
* சக்தி * ஜீரண உறுப்புகள் * நுரையீரல்

உணவில் உள்ள இதுதான் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றது?
* புரதம் * நார் சத்து * கொழுப்பு சத்து


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Postsதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!- வானிலை ஆய்வு மையம்தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.


சென்னையில் விட்டுவிட்டு பலத்த மழை பெய்வதால் கடந்த 3 நாட்களாக பருவ நிலை மாறி இதமான குளிர் நிலவுகிறது. நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. இன்று காலையிலும் மழை விட்டுவிட்டு தூறிக் கொண்டே இருந்தது. தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவ மழையால் அடுத்த 2 நாட்களுக்கு 3-ந்தேதி வரை சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும். உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும்
(தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
இந்த நிலையில் சென்னை வானிலை மைய இயக்குனர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும். என கூறி உள்ளார்.

* காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம், கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்