Run World Media: 11/05/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 5, 2018

'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன் அருள் பற்றி பலரும் அறியாத சில உண்மைகள்!


நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சரவணா நாடார் என்பவருக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒருவர் தான் செல்வரத்தினம். இவரது சகோதரர்கள் யோகரத்தினம் மற்றும் ராஜரத்தினம். இந்த மூவரில் இளையவரான செல்வரத்தினம் அவர்கள் தான் முதன் முதலில் சென்னை வந்தவர். சென்னை வந்து தனது அயராத உழைப்பால் வியாபாரத்தில் வெற்றிப்பெற்று, தனது சகோதரர்களையும் உடன் சேர்த்துக் கொண்டார் செல்வரத்தினம் அவர்கள்...

காபி விற்றார்... 
 சென்னை சென்ற புதிதில் செல்வரத்தினம் அவர்கள் செய்த தொழில், தெரு தெருவாக சென்று காபி விற்றது. நாள்பட தனது அயராத உழைப்பால் சிறிய கடை ஒன்றை துவங்கி மெல்ல, மெல்ல தொழில் வெற்றி கண்டார் செல்வரத்தினம் அவர்கள். (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
சகோதரர்கள்... 
தான் வியாபாரத்தில் உயர்ந்தவுடன் அவர் செய்து முதல் காரியம் தனது சகோதரர்களை குடும்பத்துடன் சென்னைக்கு அழைத்து வந்து தன்னுடன் சேர்த்துக் கொண்டது.


சாம்ராஜ்ஜியம்!
 சரவணா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் கிளைகள் பல வளர்ந்தன. தன்கள் கால் வைத்த துணிக்கடை, நகைக்கடை, எலக்ட்ரானிக்ஸ் என எல்லா தொழிலும் வெற்றிக் கண்டனர் ரத்தினம் சகோதரர்கள்.


இறப்பு! 
 பக்கவாதம் காரணத்தால் செல்வரத்தினம் அவர்கள் மரணமடைந்தார். இவர் இறந்த பிறகு, பிள்ளைகளுக்குள் பிரிவு வந்தது. யோகரத்தினம் மற்றும் ராஜரத்தினம் அவர்களுடைய பிள்ளைகள் நடத்துவது தான் சரவணா ஸ்டோர்ஸ்.


சரவணன் அருள்!
 செல்வரத்தினம் அவருடைய மகன் சரவணன் அருள் தனது தங்கை கணவருடன் இணைந்து நடத்தி வரும் கடைகள் சரவணா செல்வரத்தினம் ஆகும். இதை இவர் நாடு முழுக்க பல முன்னணி நகரங்களில் கிளைகள் பரப்பி பெரிதாக்க பெரும் முயற்சி செய்து வருகிறார். அதில் வெற்றியும் கண்டுள்ளார்.


நடிப்பு! 
 இவர் தனது கடைக்கு தானே விளம்பரத்தில் நடிப்பது பற்றி பல கருத்துகள் எழுந்து வருகின்றனர். முதலில் தமன்னா, ஹன்சிகாவுடன் நடித்ததற்கு பலரும் இவரை கேலி, கிண்டல் செய்தனர். இப்போது இவர் குழந்தைகளுடன் சம்மர் ஆஃபர் விளம்பரத்தில் நடித்துள்ளார்.


குடும்பம்! 
இவருக்கு திருமணாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இருவருக்கு திருமணமும் முடிந்துவிட்டது.


முருகன்!
 சமீபத்தில் தான் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க வேல் ஒன்றை காணிக்கை செலுத்தி வந்தார் சரவணன் அருள்.


நயன்தார புரளி! 
 இதற்கு இடையே யாரோ, நயன்தாராவுடன் சரவணன் அருள் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என கொளுத்திப் போட, அந்த புரளி காட்டுதீ போல பரவியது. ஆனால், அப்படி ஒரு எண்ணம் தனக்கு இல்லை என சரவணன் அருள் அவர்கள் பதில் அளித்துள்ளார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


தினமும் 4 பேரிட்சம் பழம்- உங்க தொப்பையை வேகமா கரைக்கும் !! எந்த மாதிரி சாப்பிடனும் தெரியுமா?


பேரிச்சை சிறந்த டயட் உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. அதிக அமினோ அமிலங்கள், நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. பொதுவாக ரத்த சோகைக்கு பரிந்துரை செய்வரகள். ஆனால் அது உடல் எடையை கணிசமாக குறைக்கிறது. பேரிச்சை இனிப்பாக இருப்பதால் அதிக கலோரி இருக்கும் என நிறைய பேர் ஒதுக்கி விடுவார்கள். அதுபோல் சர்க்கரை வியாதி இருப்பவர்களும் பேரிச்சை சாப்பிடலாம். பேரிச்சைம் பழம் எப்படி உங்கள் உடல் எடை குறைக்க உதவும் என்பதை இந்த கட்டுரையில் காணலாம். அதற்கு முன் பேரிச்சையைப் பற்றிம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களைக் காணலாம்.

பேரிச்சைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது : 
 பேரிச்சை ஆசியா, இந்தியா, அரேபிய நாடுகள், பங்களாதேஷ், பாகிஸ்தான், மத்திய கிழக்கு பகுதியில் விளைகிறது. இதில் முக்கியமாக ஃப்ரக்டோஸ், குளுகோஸ், சுக்ரோஸ், ஆகியவை கள் இருக்கின்றன. அதன் சத்துக்கள் தெரிந்தால் உண்மையில் ஆச்சரியப்படுவீர்கள். (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
அதிலுள்ள சத்துக்கள் : 
பேரிச்சம் பழத்தில் கார்போஹைட்ரேட் 44 %, நார்ச்சத்து 11.5%, புரதம் 5.6 %, கொழுப்பு 0.5 %, அது தவிர கால்சியம், காப்பர், மெக்னீசியம், சோடியம், உப்பு, விட்டமின், ஏ, பி1, ப்12, சி, நியாசின் மற்றும் எண்ணெய் சத்துக்கள் இருக்கின்றன. இதிலிந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம் இத்தனை சத்துக்கள் கொண்ட பேரிச்சைப் பழம் சுவை மிகுந்தது மட்டுமல்ல. மிகவும் சத்துக்கள் நிறைந்தது. அதற்காக அளவு மீறி சாப்பிட வேண்டாம். உங்கள் பற்கள் பத்திரம். அப்படியே சாப்பிட்டாலும் நன்றாக வாய் கொப்பளித்து விடுங்கள்.


4 பேரிட்சை எப்படி உடல் குறைக்கும்? 
 பேரிச்சையை சாப்பிடுவதால் உடல் எடை குறைக்கலாம் தெரியுமா? வெளி நாடுகளில் பேரிச்சை டயட் என்றே பெயரிட்டு அதனைபின்பற்றி உடல் எடையை குறைக்கிறார்கள். உங்கள் உடல் எடையை குறைக்கும்படி மிக எளிதான டயட் ஒன்று உள்ளது. தினமும் 4 பேரிச்சை காலை 2 மாலை 2 என சாப்பிட வேண்டும். அதனை சாப்பிடும் முறையை பார்க்கலாம்.

தேவையானவை : 
பேரிட்சை -2 
 பசும் பால்- 1 கப்
 மஞ்சள் - 1 சிட்டிகை
 தேன் - 1 ஸ்பூன்.


பயன்படுத்தும் முறை : 
ரொம்ப ஈஸிங்க. காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான பசும் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். பின்னர் இரண்டு பேரிச்சைப் பழத்தை சாப்பிட வேண்டும். இது போலவே இரவும் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்யும்போது 15 நாட்களிலேயே உங்களுக்கு பலன் தெரிய ஆரம்பிக்கும். ட்ரை பண்ணிப் பாருங்க.


பேரிட்சை டயட் : 
பேரிட்சையை உங்கள் அன்றாட டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்களுடன் துண்டு துண்டாக நறுக்கி கலந்து சாப்பிடலாம். இனிப்பு வகைகளில் கலந்து செய்யலாம். ஐஸ்க்ரீமில் கலந்து சாப்பிடுங்கள். பின் எவ்வப்போது கொறிப்பதற்கு கண்ட நொறுக்குத்தீனிகளுக்கு பதில் பேரிச்சையை சாப்பிடலாம். அதுவும் மீறி முழு மனதாக பேரிச்சை டயட்டை மட்டும் நீங்கள் பின் தொடர்ந்தால் உடல் எடை, தொப்பை கரைந்து விடும். எப்படி சாப்பிட வேண்டும் என பார்க்கலாமா?


பின்பற்றும் முறை : 
காலை - 2 பேரிட்சை மற்றும் மஞ்சள் பால் மதியம் - பச்சைக் காய்கறிகளுடன் குறைவாக அரிசி சாதம், மாலை - தே நீர் மற்றும் கோதுமை நிறைந்த பிஸ்கட் இரவு - 2 பேரிட்சை மற்றும் மஞ்சள் பால் அத்னுடன் வேக வைத்த பீன்ஸ் அல்லது மீன். இந்த டயட் எளிதான முறைதான். பெரிதாக செலவுமில்லை. வீட்டிலேயே பின்பற்றலாம். இதற்காக மெனெக்கெட எல்லாம் வேண்டியதில்லை. சரியாக 1 மாதம் பின்பற்றிப் பாருங்கள். பேலியோ டயட் , வேகன் டயட் எல்லாம் தேவையே இல்லை. நீங்களே வியக்கும் அளவிற்கு தொப்பை குறையும்.


எப்படி உடல் எடையை குறைக்கிறது? 
 எப்படி வெறும் 2 பேரிச்சம் பழம் உங்க எடையை குறைக்கிறது என சந்தேகமா இருக்கா. காரணங்கள் நிறைய இருக்குங்க. ஒவ்வொன்றா பார்க்கலாம். நீங்களும் தெரிஞ்சு வச்சுக்கோங்க.

பசியை தூண்டாது : 
பேரிச்சையில் அதிக டயட்ரி புரதங்கள் இருக்கின்றது. புரதமோ, நல்ல கார்போஹைட்ரேட்டோ ஜீரணத்தை தாமதப்படுத்துகிறது. இதனால் பசி விரைவில் உணர மாட்டீர்கள். அப்படி பேரிச்சையை காலை ப்ரேக் ஃபாஸ்டாக சாப்பிடும்போது உங்களுக்கு பசியை தூண்டாது. அதோடு முழுச் சத்துக்களும் உங்கள் உடலில் இருக்கும்.


உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் : 
பேரிச்சம் பழத்தில் இருக்கும் நல்ல கொழுப்புக்கள் உங்கல் உடல் பாதிப்புகளை சரி செய்கிறது. உள்ளுறுப்பு காயங்கள், அடிபடுவதால், கண்ட உணவுகளை சாப்பிடுவதால் ஏதாவது நோயினால் என பல காரணங்களால் ஏற்படுவதுண்டு. இந்த காயங்களை ஆற்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ தினமும் பேரிட்சை சாப்பிட வேண்டும்.

தசை வடிவம் தரும் :
 பேரிச்சையில் உள்ள புரதச் சத்துக்கள் உங்களின் தசை வடிவத்தையே மாற்றும் திறன் கொண்டது. தேவையற்ற கொழுப்புகள் மறைந்து ஆரோக்கியமான தசைக் கட்டமைப்பு உருவாகும்.


சர்க்கரை வியாதி தடுக்கும் : 
 சர்க்கரை வியாதியை தடுக்கும். இனிப்புள்ள எல்லா உணவுகளும் சர்க்கரை வியாதியை தரும் என நினைக்க வேண்டாம். பேரிச்சை பழத்திலுள்ள ஃபீனாலின் பண்புகள் இன்சுலினை சுரக்க தூண்டுகின்றன. இவை சர்க்கரையை ஒழுங்குபடுத்தி சர்க்கரை வியாதியை தடுக்கிறது.

சர்க்கரை பதிலாக : 
சர்க்கரையை வேண்டாம் என பல மருத்துவர்கள் அலறுகிறார்கள். ஆனால் சர்க்கரை இல்லாமல் காபி, டீ அருந்த முடியவில்லை என நீங்கள் கவலைப் பட்டால் உங்களுக்கு இந்த விஷயம் வரப் பிரசாதம். பேரிட்சையை உருக்கி, பாகு பதத்தில் காய்ச்சி ஒரு டப்பாவில் போட்டு , சர்க்கரைக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். இதனால் புற்று நோய் முதல் பல ஆபத்தான நோய்கள் தடுக்கப்படுகின்றன.


பேரிட்சையை சாப்பிட்ட பின் உண்டாகும் மாற்றங்கள் :
 கொழுப்பை கரைக்கும் : பேரிச்சை உடலில் விடாப்படியாக தங்கி இருக்கும் கொழுப்பை உடைத்து முற்றிலும் செரிமானத்திற்கு உட்படுத்துகிறது. இதனால் கொழுப்பு வேகமாக கரைந்து உடல் சிக்கென்று ஆகிவிடுகிறது.

நோய் எதிர்ப்பு திறன் : 
உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற ஆரம்பிக்கும். ரத்த சோகையை தடுக்கும். சாதரண சளி, காய்ச்சலிலிருந்து டெங்கு காய்ச்சல் வரை உங்களை நெருங்காது.


அலர்ஜிகள் வராது : 
சிலருக்கு எத்ற்கெடுத்தாலும் அலர்ஜி உண்டாகும். தூசி, புகை, சின்ன பூச்சி கடித்தாலும் கூட உடலில் அலர்ஜி உண்டாகும். அவர்கள் எல்லாம் தினமும் பேரிட்சைப் பழத்தை சாப்பிட்டால் இந்த பாதிப்பு அறவே போய்விடும்.

இதய நலன் கியாரெண்டி : 
 இதய நோய்கள் இந்த காலத்தில் மிகவும் சாதரணமாகிப் போய்விட்டது. ஆனால் நீங்கள் தினமும் பேரிச்சையை சாப்பிடுபவர்கள் என்றால் காலரை தூக்கி விட்டுக் கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் இதயம் பலமடங்கு பாதுகாப்போடு இருக்க பேரிச்சம் பழம் கியாரண்டி தரும்.


ரத்த ஓட்டம் : 
உங்கள் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது. இதனால் எங்கும்க் கழிவுகளோ நச்சுக்களோ தங்காது. தேவையற்ற கட்டிகள், நீர்க்கட்டிகள் உருவாகாது. சுறுசுறுப்போடு இருப்பீர்கள்.

சிறந்த பேரிச்சை எது? 
 பேரிச்சை பிளவு படாமல் இருப்பது நல்லது. சுருக்கங்களோடு இருக்கும் பேரிச்சை தரமானதாக இருக்கும். அவைகளில் நாற்றம் அல்லது வாசனை வரக் கூடாது.


வாங்கிய பின் செய்ய வேண்டியவை :
 வாங்கிய பின் பேரிட்சை சாப்பிடுவதற்கு முன் அதனை கழுவ வேண்டும். இதனால் இனிப்புகளின் மேல் உருவாகும் பேக்டீரியாக்கள் நம் உடலுக்குள் செல்லாமல் தடுக்கலாம். அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்வது நல்லது. தினும் 4- 6 சாப்பிடுங்கள். உங்கள் உடல் எடை மற்றும் தொப்பை குறைவது உறுதி.


ஆண்களுக்கு ஏன் நல்லது? 
ஆண்களுக்கு வேலைப் பளு, வீட்டுச் செலவு, நெருக்கடியான சூழ் நிலைகள் எல பலசவாரி செய்ய வேண்டி இருப்பதால் அவர்களுக்கு கட்டாயம் பேரிச்சம் பழம் சாப்பிட வேண்டும். இதனால் மன அழுத்தங்கள் குறையும். ஆரோக்கியமான மன நிலையில் சிந்திக்கும்படி நரம்பு மண்டலம் வலுப்பெறுகிறது.


விந்தணுக்கள் அதிகரிக்க : 
ஆண்களின் விந்தணு விருத்திக்கு சுத்தமான பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு விட்டு பால் குடித்தால்போதும். தாது விருத்தியுண்டாகும். இரவில் படுக்கும் பொழுது இதை சாப்பிட வேண்டும். காலை உணவுக்குப் பின் 3 பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும். அதேபோல் இரவு உணவுக்குப்பின், 12 பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு ஒரு கப் பசும்பால் குடிக்க வேண்டும். இதை குறைந்தது 2 மாதங்கள் பின்பற்ற வேண்டும்


காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ;
 காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற பேரிச்சம் பழம் உதவும். பேரிச்சம் பழத்தை தேனி ஊற வைத்து சாப்பிட்டால் விரைவில் இழந்த பலத்தை பெறுவார்கள்.


வலியில்லா பிரசவம் :
 கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் கவலைகளில் ஒன்று பிரசவத்தின் போது உண்டாகும் வலி இன்னொன்று பிரசவத்திற்கு பின் உண்டாகும் பருமன். இரண்டிற்குமே பதில் தருகிறது பேரிட்சை . கர்ப்பம் தரித்தபின் தினமும் 4 பேரிட்சைகளை சாப்பிட்டால் வலியில்லாத பிரசவத்தை தருகிறதாம். அதோடு பிரசவத்திற்குப் பின் வரும் உடல் பருமனை குறைக்கிறது.


மந்த புத்தியை மாற்றும் :
 உங்கள் குழந்தைகள் படிப்பு விஷயத்தில் லேட் பிக்கப் பாக இருக்கிறார்களா? தினமும் 2 பேரிட்சை சாப்பிட வையுங்கள். பேரிச்சம்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6 மூளையின் செயலாற்றலை அதிகரித்து, அறிவாற்றல், நினைவாற்றலை ஊக்குவிக்கிறது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


என் உடம்பு தான வேணும், வா எடுத்துக்கோ... நடுரோட்டில் உக்கிரமடைந்த பெண்


உலகின் அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு சமமாக அளிக்கப்படுவது மானபங்கமும், பாலியல் துன்புறுத்தலும் தான். கருப்போ, சிவப்போ, உயரமோ, குட்டையோ, மேல் வகுப்பு, கீழ் வகுப்பு என எந்த பாகுபாடும் இன்றி ஆணாதிக்க சமூகம் பெண்களுக்கு சம பங்கில் அளித்து வருவது இந்த ஒற்றை கொடுமை தான்.
 
 சமீபத்தில் இணையத்தில் வெளியான ஒரு வீடியோ காட்சி, எந்த அளவிற்கு ஒரு ஆண் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருந்தால், அவள் தனது உடையை கழற்றி, உனக்கு என் உடல் தானே வேண்டும் என உக்கிரம் அடைந்திருப்பாள்... என்பதை இந்த உலகிற்கு வெளிகாட்டியுள்ளது... (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!


காட்சி! 
 அந்த வீடியோவில் வெளியான காட்சி இதுதான்... கடுங்கோபம் அடைந்த அந்த இளம் பெண். தனது மார் சட்டையை அவிழ்த்து, கீழே தள்ளப்பட்ட ஆணை கண்டு ஏதோ பாஷையில் திட்டுகிறாள், மிகுந்த ஆத்திரத்தில். பிறகு தனது மார்பகத்தை கொண்டு, கீழே விழுந்திருந்த ஆணின் முகத்தில் தேய்த்து... உனக்கு என் உடல் தானே வேண்டும்... எடுத்துக் கொள்.. என தொடர்ந்து திட்டுகிறார்.


தென்கிழக்கு பிரேஸில்!
 இந்த காணொளிப்பதிவு தென்கிழக்கு பிரேஸிலின், ரிபேரா ப்ரோட்டோ நகர மையத்தில் பதிவானது என அறியப்படுகிறது. இந்த காணொளிப்பதிவில்தோன்றிய அந்த நீலநிற சட்டை அணிந்திருந்த இளம் பெண் ஒரு சேல்ஸ் பெண் என்றும். அவர் பொது இடத்தில் தனது வியாபாரம் குறித்த ஃப்ளையர்கள் (Ad Flyers) மக்களிடம் விநியோகம் செய்துக் கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.


பாலியல் வன்கொடுமை! 
தரையில் வீழ்ந்திருந்த ஆண் நெடுநேரமாக அந்த பெண்ணை பொது இடத்தில் வைத்து துளைத்தெடுத்தான் என்றும். தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான் என்றும் கூறப்படுகிறது. (பொது மக்களும், யாரும் இதை கண்டு கொள்ளாமல் நகர்ந்துக் கொண்டே இருந்தார்கள்). ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த பெண் உக்கிரமடைந்து. உனக்கு என் உடல் தானே வேணும். வா எடுத்துக் கொள் வா... என அந்த ஆணை தரையில் தள்ளிவிட்டுள்ளார்.


யாரும் எதிர்பார்க்கவில்லை.
 அந்த ஆணை, கீழே தள்ளிய பிறகு தான் கூடியிருந்த மக்கள் கண்விழித்து என்ன நடக்கிறது என காண துவங்கினார்கள். அந்த ஆளை இளம்பெண் சரமாரியாக திட்ட துவங்கினார். நீண்ட நேரமாக என்னை தொல்லை செய்துக் கொண்டே இருக்கிறான் என கூறினார். எனது வேலையை செய்ய விடாமல் சீண்டுகிறான் என கொந்தளித்துள்ளார்.


நான் ஒன்றும் செய்யவில்லை... 
அடி வாங்கிக் கொண்டிருந்த அந்த ஆண், தான் ஒன்றும் செய்யவில்லை. தனது மனைவியுடன் ஷாப்பிங் தான் வந்தேன் என்றும் கூறியுள்ளார். ஆனால், அந்த கடுங்கோபத்தில் இருந்த இளம்பெண், " என்னை ஒரு செக்ஸ் பொம்மை போன்று தானே கண்டாய், எனது மார்பை தீண்ட வேண்டும் என்று தானே என்னை நெருங்கினாய். வா, எடுத்துக் கொள் வா" என தனது மேலாடையை அவிழ்த்து, அந்த ஆணின் முகத்தில் தேய்த்துள்ளார்.


அடி!
 பாலியல் தொந்தரவு கொடுத்த ஆணை கீழே தள்ளி, அடித்து உதைத்து தனது கோபத்தை தீர்த்துக் கொண்டார் அந்த இளம்பெண். பிறகு தனது மேலாடையை எடுத்து அணிந்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். இந்த மொத்த நிகழ்வையும் கூடி இருந்த கூட்டம் படம் பிடித்தது., வீடியோ எடுத்ததே தவிர, யாரும் அந்த ஆண் சீண்டும் போதும் தடுக்கவில்லை. இந்த பெண் கோபப்படும் போதும் உதவவில்லை.


ஆதரவு! 
 சுற்றியிருந்த மக்களில் வேடிக்கை பார்த்த பலரும், இந்த பெண்ணின் நடவடிக்கையை ஆதரிக்கிறோம். எத்தனை நாள் தான் பெண்கள் பொருத்து போவார்கள் என கூறியுள்ளனர். மேலும், ஒரு பெண் மட்டும், நீ செய்வது அபத்தமாக இருக்கிறது. நகரின் மத்தியில், சிறு குழந்தைகள் கண்ணெதிரே நீ இதுபோன்று நடந்துக் கொள்ளக் கூடாது. இது பெண்களை அவமானப்படுத்தும் செயலாக இருக்கிறது" என கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.


நாடகம்!
 ஆனால், அந்த ஆண் மற்றும் பெண் என ஒரு மேடை நாடக குழு சேர்ந்த அமைத்த நாடகம் தான் இது. இந்த மொத்த நிகழ்வும் அவர்கள் திட்டமிட்டு செய்த ஒன்று. பாஸ்டோ ரிபேரோ எனும் நபர் தான் இந்த நாடகத்தை உருவாக்கியுள்ளார். உலகம் முழுக்க பொது இடங்களில் வேலை செய்து வரும் பெண்கள், இது போன்ற கொடுமைகள் அனுதினமும் அனுபவித்து வருகிறார்கள். இதை எல்லாம் தடுக்க யார் தான் இருக்கிறார். இந்த தவறுகளை அனைவரும் எதிர்க்க வேண்டும். ஆண்களின் இந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த நாடகத்தை ஏற்பாடு செய்தோம் என கூறியுள்ளார்.


பெண் சக்தி!
 பெண் என்பவள் பெரும் சக்தி, சமூகத்தின் அடையாளம் என உலகம் முழுக்க வெறும் வார்த்தைகளில் மட்டுமே கூறிக் கொள்கிறோம். ஆனால், அந்த சக்தி தினம், தினம் எத்தனை தடங்கல்கள் மற்றும் கொடுமைகளை எதிர்த்து இந்த உலகில் வாழ்ந்து வருகிறது என உங்களுக்கு தெரியுமா என பெண்ணியவாதிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


தினமும் இரவு என் தந்தை செய்யும் காரியத்தை கண்டு, முற்றிலும் வெறுக்கிறேன்!


நான் வாழும் வாழ்க்கை வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும் என சிலர் எண்ணுகிறார்கள். மூன்று பிள்ளைகளில் நான் தான் இளையவள். நான் ஒரு அப்பர்-மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த பெண். நான் சொல்லாமலேயே, நான் செல்லமாக வளர்ந்தவள், வேண்டுவது எல்லாம் கிடைக்கும் என பலர் எண்ணுகிறார்கள்.
 உண்மையும் அதுதான். ஆனால், நான் வேண்டாத சில விஷயங்களும் எனக்கு கிடைத்துள்ளது. அதை பற்றி நான் வெளியே பேச கூட முடியாத நிலை. எனது குழந்தை பருவ நாட்கள் மிகவும் அழகானவை, அற்புதமானவை. ஆனால், இரவு மிகும் அசௌகரியமானது, சித்திரவதையானது. அந்த நினைவுகள் என்னுள் பல ஆழமான மறையாத வடுக்களை உருவாக்கி சென்றுள்ளது. இன்னும் நான் அதை எப்படி கையாள்வது என அறியாதிருந்தேன்....
(தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
தாய், தந்தையுடன்...
 சிறுவயதில் நான் எனது தாய், தந்தையுடன் தான் உறங்குவேன். என் உடன் பிறந்தவர்கள் பக்கத்து அறையில் படுத்து உறங்குவார்கள். அப்போது நான் இரண்டாவது அல்லது மூன்றாவது படித்துக் கொண்டிருந்த காலம். அப்போது தான் எனது பெற்றோர் பற்றி நான் ஒன்று கண்டறிந்தேன். சில சமயங்களில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை குறைத்து மதிப்பிடுவது உண்டு. அதனால் பாதிக்கப்பட்டவள் நான். நான் படுத்தவுடன் உறங்கிவிடுவேன் என எனது பெற்றோர் கருதினர். ஆனால், நடுராத்திரியில் அந்த சப்தம் கேட்கும் போது என்னால் அந்த நேரத்தில் விழித்துக் கொள்ள முடியாத நிலை தான் இருந்தது.


பரிதாபகரமான நிலை... 
நானும் எனது தந்தையும், எனது தாய் மற்றும் உடன் பிறந்தோர் உறங்க செல்லும் முன்னரே படுக்கையறைக்கு சென்றுவிடுவோம். எனது அம்மா அவரது வீட்டு வேலைகளில் பிஸியாக இருப்பார். உடன் பிறந்தோர் பள்ளி பாட வேலைகள் செய்துக் கொண்டிருப்பார்கள். நான் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற பிறகு அவர் அனுதினமும் எனது தாயை வற்புறுத்துவார். தினமும் இது நடக்கும், இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என தெரியாது. எனது தாய் பரிதாபகரமாக சப்தமிடுவார். அவருக்கு வலிக்கிறது என்று மட்டும் தான் நான் அறிவேன். சில காலம் கழித்து தான் அது எதனால் என நான் அறிந்துக் கொண்டேன்.


அசௌகரியம்! 
 இது தான் காரணம் என அறிந்த பிறகு இரவு மட்டுமல்ல, பகலிலும் நான் எனது தந்தையை வெறுக்க ஆரம்பித்தேன். ஆனால், இதுகுறித்து என்னால் வெளியே பேச இயலவில்லை. நான் நடுராத்திரியில் உடல்நலம் சரியில்லாதது போல நடிக்க துவங்கினேன். அவர்கள் நான் பயந்து போய் இருப்பதாக கூறினார்கள். வேண்டுமென்றே நாடு ராத்திரியில் எழுந்துக் கொள்வேன். என் தாயை அவரிடம் இருந்து காக்க, என்னென்ன செய்ய முடியுமோ, அனைத்தும் செய்தேன். ஆயினும், பல நாட்கள் அவர் விருப்பம் போலவே தொடந்தது.


மூன்று வருடங்கள் இப்படி தொடர்ந்தது... 
 இதில் பெரும் கொடுமையே, இது குறித்து யாரிடம் எப்படி கூறுவது என அறியாதிருந்தது தான். என் உடன் பிறந்தோர் என்னைவிட மிகவும் வயது மூத்தவர்கள். நான் அவர்களுடன் அவ்வளவு நெருக்கமாகவும் இருந்தது இல்லை. நண்பர்கள் அல்லது ஆசிரியர்களிடம் இந்த கேள்வியை எப்படி கேட்பது என்றும் தெரியவில்லை. பணியாள், ஓட்டுனர் என யாரிடமும் இதுகுறித்து நான் ஆலோசிக்க முடியாது. குழந்தைகள் இதுகுறித்து பேச கூடாது என்பது நமது சமூகத்தில் எழுதப்படாத சட்டம். ஆனால், என் வாழ்வில் இது பெரிய பிரச்சனை.


ஏழாம் வகுப்பு!
 நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, நான் நிரந்திரமாக எனது உடன் பிறந்தோருடன் உறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எங்கள் இரு அறைகளுக்கு மத்தியில் பல சுவர்கள் இருந்தன. ஆனால், எனது எண்ணம் முழுக்க அவர்களது படுக்கையறை பற்றியே இருந்தது.


இயல்பு...?!
 எனது தாயின் பாதுகாப்பு குறித்து நான் மிகவும் ஆலோசித்தேன். நான் கொஞ்சம், கொஞ்சம் வளரும் போது தான் செக்ஸ் என்றால் என்ன, அந்த ஆக்டிவிட்டி என்ன என்பது அறிய துவங்கினேன். திருமணத்திற்கு பிறகு இது மிக இயல்பு என்பதை உணர்ந்தேன். ஆனால், திருமண வாழ்வென்பது இது மட்டும் தான் என்றால், எனக்குக் அப்படி ஒரு பந்தமே தேவையில்லை.


குடி! 
 நான் பிறக்கும் முன்னர் அனைவரும் தாத்தா- பாட்டி வீட்டில் இருந்ததாகவும், அப்போது எனது தந்தை தினமும் குடித்துவிட்டு வந்து, எனது தாயை செக்ஸ் வைத்துக் கொள்ள தொல்லை செய்வார் என்றும் எனது உடன் பிறந்தோர் கூறி அறிந்தேன். என் தாய் உதவியின்றி தவித்தார் என்பதை நான் மிகுதியாக கண்டுணர்ந்தவள்.


அச்சம்! 
இன்னும் சில வருடங்களில் என் தந்தை எனது திருமணத்தை பற்றி பேச்சை துவங்குவார், அவரிடம் என்ன பதில் கூறுவது என தெரியவில்லை. ஒருவேளை சிலருக்கு இது பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், என்னை பொறுத்தவரை எனக்கு இது மிகப்பெரிய அச்சம். என் தந்தை எனது தாய்க்கு செய்தது மிகப்பெரிய கொடுமை.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


சென்னையில் பகீர்.. ரூ.1000-க்கு மேல் மது குடித்தால் எல்இடி டிவி பரிசு.. பார் மேலாளர், உதவியாளர் கைது


சென்னையில் ரூ.1000க்கு மேல் மது குடித்தால் எல்இடி டிவி பரிசு வழங்கப்படும் என அறிவித்த பார் மேலாளர் மற்றும் பார் உரிமையாளரின் உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தீபாவளி பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை முதல் மது குடிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
 ஏராளமானோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டதால் ஆங்காங்கே கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனிடையே டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒரு நூதன பேனர் வைக்கப்பட்டுள்ளது.(தொடர்ச்சி கீழே...)  


இதையும் படிக்கலாமே !!!
பேனர் வைப்பு
 அதில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதுகுடிப்போருக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு எல்இடி டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் ஆகியன பரிசாக வழங்கப்படும் என பேனர் வைக்கப்பட்டுள்ளது.


குலுக்கல் பெட்டி
 இந்த பேனர் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கடையில் கூட்டம் கூட்டமாக குடிகாரர்கள் குழுமினர். மேலும் ரூ.1000-க்கு மேல் குடித்துவிட்டு தங்கள் பெயர், செல்போன், வீட்டு முகவரியை அங்கு வைக்கப்பட்ட குலுக்கல் பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்.


ரகளை
 இதனிடையே பேனர் குறித்து ஜாம்பஜார் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் இந்த பேனரால் ஏராளமான கூட்டம் அந்த கடைக்கு வருவதோடு மூச்சு முட்ட குடித்துவிட்டு குடிகாரர்கள் ஆங்காங்கே விழுந்து கிடப்பது, ரகளையில் ஈடுபடுவதுமாக இருந்தனர்.


கைது
 இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைக்கு சென்ற போலீஸார் பேனர் வைத்ததாக பார் மேலாளர் வின்சென்ட் ராஜ், பார் உரிமையாளரின் உதவியாளர் ரியாஸ் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


பறிமுதல்
 மேலும் இந்த கடை அதிமுக மாஜி கவுன்சிலர் முகமது அலி ஜின்னாவுடையது என தெரியவந்தது. இதையடுத்து அவர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கடையில் இருந்த பிரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின், எல்இடி டிவி, குலுக்கல் பெட்டி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்