Run World Media: 11/09/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 9, 2018

சென்னை காசிமேட்டில் 300 நட்சத்திர ஆமைகள் சிக்கின விமானம் மூலம் மலேசியா கடத்த முயற்சி


சென்னை காசிமேட்டில் 300 நட்சத்திர ஆமைகளை போலீசார் கைப்பற்றினர். அவற்றை விமானம் மூலம் மலேசியாவுக்கு கடத்த முயன்றது தெரிந்தது.

 
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நட்சத்திர ஆமைகள் கடத்தப்படுவதாக ராயபுரம் உதவி கமிஷனர் கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு அதிரடி கண்காணிப்பில் ஈடுபட்டனர். (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!
அப்போது கையில் அட்டை பெட்டிகளுடன் வந்த 2 வாலிபர்கள், போலீசாரை கண்டதும் அவற்றை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அந்த 2 அட்டை பெட்டிகளையும் போலீசார் சோதனை செய்தபோது, அதில் 300 நட்சத்திர ஆமைகள் இருந்தன. அதில் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் என்ற முகவரி ஒட்டப்பட்டு இருந்தது.
மலேசியாவுக்கு...

அந்த நட்சத்திர ஆமைகளை கடல் வழியாக கடத்தி வந்த மர்மநபர்கள், அதனை சென்னையில் இருந்து விமானம் மூலம் மலேசியாவுக்கு கடத்த இருந்தது விசாரணையில் தெரியவந்தது. சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


பேரப்பிள்ளைகளை தங்களுடனே வைத்து கொள்ள மருமகளை உயிருடன் புதைத்த தம்பதி


சொந்த பேரப்பிள்ளைகளை தங்களுடனே வளர்ப்பதற்காக மருமகளை உயிருடன் புதைத்து தம்பதி ஒன்று கான்கிரீட்டால் மூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிரேசில் நாட்டில் சாவ் பாலோ நகரில் சேர்ந்தவர்  இளம்பெண் மார்சியா மிராண்டா.  கணவரை பிரிந்து வாழ்ந்த மார்சியா மிராண்டாவின் இரு பிள்ளைகள் மீதும்  கணவரின் பெற்றோர்  மரியா ஐசில்டா(60) மற்றும் பெர்னாண்டோ டி ஒலிவேரா(62) ஆகிய இருவருக்கும் ஆசை இருந்து வந்துள்ளது.  இதனால் அவர்கள் மார்சியா மிராண்டாவை கொலை செய்து விட்டு குழந்தைகளை வளர்க்கத் திட்டமிட்டு உள்ளனர். (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி முதல் மிராண்டா மாயமானதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தமது இரு பிள்ளைகள் பேரில் வங்கிக் கணக்கு ஒன்றை துவங்கும் நோக்கில் தமது மாமியார் மற்றும் மாமனாரை சந்திக்க முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் புதிதாக தாங்கள் வாங்கிய குடியிருப்பு மற்றும் நிலத்தை பார்வையிட மிராண்டாவை அவர்கள் நிர்பந்தித்து அழைத்துள்ளனர்.அவர் கொண்டு வந்த காரில் மிராண்டாவுடன் சாவ் பாலோ நகரில் உள்ள அந்த குடியிருப்புக்கு சென்றுள்ளனர். 

ஆனால் மிராண்டாவை கொலை செய்து புதைப்பதற்கு என்றே அந்த குடியிருப்பு மற்றும் நிலத்தை அவர்கள் வாடகைக்கு எடுத்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். குறித்த பகுதியில் இருந்து மிராண்டாவின் உடலை கைப்பற்றும்போது அது மிகவும் மோசமான நிலையில் உருக்குலைந்து இருந்தது. மிராண்டாவின் விரல் அடையாளங்களே அவரை அடையாளம் காட்டியுள்ளது.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


பனிச்சரிவில் போராடி ஏறும் குட்டிக்கரடி!


ரஷியாவில் பனிச்சரிவில் குட்டிக்கரடியொன்று தாயிடம் சேர மலையில் பனிச்சரிவில் போராடி ஏறும் வீடியோவில் மறைந்திருக்கும் வேதனையான உண்மை வெளியாகியுள்ளது.

 
கிழக்கு ரஷியாவில் பனிபடர்ந்து இருக்கும் மலையொன்றில் கரடியொன்று அதனுடைய குட்டியுடன் போராடி ஏறும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “உங்களுடைய முதல் முயற்சியில் வெற்றியடையவில்லை என்றால் என்ன தொடர்ந்து முயற்சியுங்கள் வெற்றி கைக்கூடும்,” என்ற கூற்றை உறுதி செய்யும் வகையில் அதில் குட்டிக் கரடியின் போராட்டம் இடம்பெற்று இருந்தது. இந்த வீடியோ ViralHog சேனலால் யூடியூப்பில் வெளியாகியது. (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!
தாய் கரடியுடன் மலைச்சரிவில் பனிச்சரிவில் குட்டிக்கரடி முயற்சி செய்கிறது. முதல் முயற்சியில் சிறிது தொலைவு சென்றதும் குட்டிக்கரடி கீழே சரிந்து விழுந்து விடும். மறுபடியும் முயற்சி செய்யும் இரண்டாவது முறை தாய் கரடி சென்ற பாதையை பின்பற்றி செல்லும். மலையின் உச்சியை அடையும் நிலையில் தாய் கரடி கோபமாக தட்டும். இதனால் நொடியில் அதிர்ச்சியடையும் கரடி குட்டி தடுமாறி கீழே செல்லும். ஏற்கனவே நின்ற இடத்தைவிட நீண்ட தொலைவு கீழே சென்று விடும். கீழே பாறைகள் நிறைந்த பள்ளம் இருக்கும் நிலையில். குட்டி சாதுரியமாக கற்களை பிடித்து உயிர் பிழைக்கும். மூன்றாவது முறையாக நீண்ட தொலைவு பனியில் ஏறி வெற்றியடையும். தாயுடன் மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்து செல்லும். இந்த வீடியோ பார்ப்பவர்களை மகிழ்ச்சியடையவும் செய்தது. இந்த வீடியோ குழந்தைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமான செய்திகளுடன் வைரலாக பரவுவது பாராட்டக்கூறியது. 

இதற்கிடையே இதில் மறைந்துள்ள ஒரு வேதனையான உண்மை வெளியாகியுள்ளது. இரண்டாவது முறையாக மலையின் உச்சியை குட்டி அடையும் போது தாய் கரடி ஆவேசமாக தட்டியது என்னவென்று தெரிய வந்துள்ளது. வீடியோ ஆளில்லா சிறிய விமானம் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை மிகவும் நெருக்கமாக காட்ட வேண்டும் என்று விமானம் மிகவும் நெருக்கமாக இயக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த தாய் கரடி, குட்டியை காப்பாற்ற அதனை தட்ட முயற்சி செய்துள்ளது. இதனால் நிலைத்தடுமாறிய குட்டிக்கரடி மீண்டும் கீழே சென்றுள்ளது. இதனையடுத்து விலங்குகள் மற்றும் சூழ்நிலை ஆர்வலர்கள் கண்டங்களை தெரிவித்துள்ளார்கள். இதுபோன்ற விமானங்கள் விலங்குகளின் உயிர்களுக்கு பெரிதும் எச்சரிக்கையாக எழுந்துள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். 
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Postsகுழந்தைகளை விளையாட விடுங்க


குழந்தைகளை விளையாட விடாததால் உடல்திறன் மற்றும் மன வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளை விளையாடவிடுவதன் பலன்களைத் தெரிந்துகொள்வோம்.


 வெளியே விளையாடினால் ஏதேனும் பாதிப்பு வந்துவிடும் என்று வீட்டிலேயே பொத்திபொத்தி பாதுகாக்கின்றனர். இதனால், குழந்தைகளின் உடல்திறன் மற்றும் மன வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளை விளையாடவிடுவதன் பலன்களைத் தெரிந்துகொள்வோம்.
(தொடர்ச்சி கீழே...)


இதையும் படிக்கலாமே !!!

உடல் உழைப்பு இன்மை, ஜங்க் புஃட் காரணமாக நகர்ப்புற குழந்தைகளில் நான்கில் ஒருவர் உடல்பருமனாக உள்ளனர். அதுவும், தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில், 26 சதவிகிதம் பேரும் அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளில், 4.5 சதவிகிதம் பேரும் உடல்பருமனாக உள்ளனர். ஓடியாடி விளையாடும்போது தேவையற்ற கலோரி, கொழுப்பு எரிக்கப்படுகிறது. இதனால், குழந்தைகள் ஃபிட்டாக இருப்பர்.


விளையாடும்போது மற்ற குழந்தைகளுடன் பழக்கம் ஏற்படுகிறது. இது, கூட்டுறவு மற்றும் சமூகத்துடன் இணைந்து செயல்படும் திறனை வளர்க்க உதவுகிறது. இது, குழந்தையின் படைப்பாற்றலை அதிகரிக்கவும், பிரச்னைகளைச் சமாளிக்கும் திறனை, முடிவெடுக்கும் திறனை வளர்க்கவும் உதவுகிறது. குழுவாக விளையாடும்போது பிரச்னை ஏற்பட்டால், அதை சமாளிக்கும் திறனும் அவர்களுக்கு ஏற்படுகிறது. வீட்டிலேயே அடைந்துகிடக்கும் குழந்தைகளுக்கு இந்தத் திறன் மிகக் குறைவாகவே இருக்கிறது.


‘குழந்தைகள் விளையாடும்போதுதான் அவர்கள் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கிறது’ என்கிறது ‘அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்’ ஆய்வு. குழுவாக விளையாடும்போது, குறிப்பிட்ட விஷயத்தில் கவனத்தைச் செலுத்தும் திறன், சமாளிக்கும் திறன், இதற்காக கை, கால், கண்கள் என ஐம்புலன்களையும் ஒருங்கிணைத்து செயல்படும் திறன் மேம்படுகிறது.


“பள்ளிகளில் விளையாட்டு நேரம் என்பது பெயரளவுக்குத்தான் உள்ளது. குறைந்தது 15 நிமிடங்களாவது குழந்தைகளை விளையாட அனுமதிக்கும்போதுதான் அவர்களது கல்வி கற்கும் திறன் மேம்படும்” என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


பெண்கள் பிரசவத்திற்கு பிறகு எவ்வளவு நாட்கள் வெளியில் செல்லக்கூடாது


பிரசவித்த பெண்கள் ஒரு மாதத்திற்கு வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்கிற நம்பிக்கை காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
பிரசவித்த பெண்கள் ஒரு மாதத்திற்கு வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்கிற நம்பிக்கை காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய பெண்களுக்கு அது சாத்தியமில்லை என்றாலும், இந்த ஒரு மாதத்திற்கு நாள் நம்பிக்கையில் ஏதேனும் உண்மைகள் உண்டா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.


‘‘கர்ப்பத்தின் 9 - 10 மாதங்கள் வரை பெண்ணின் உடல் ஏகப்பட்ட ஹார்மோன் மாறுதல்களைச் சந்திக்கிறது. அவளது தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு உறுப்பிலும் மாற்றத்தை உணர்ந்திருப்பாள். பிரசவமானதும் இயற்கையாக அவளது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாகக் குறைந்துவிடும். எளிதில் தொற்றுகளுக்கு உள்ளாகக்கூடும் என்பதால்தான் அவளை பாதுகாப்பான சூழலில் ஆரோக்கியமாக வைத்திருக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
(தொடர்ச்சி கீழே...)


இதையும் படிக்கலாமே !!!

இதுதவிர தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கும் ஆரோக்கிய பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதிலும் அவள் கவனமாக இருக்க வேண்டும். வீட்டை விட்டே வெளியே போகக்கூடாது என்பதும், சமையலறை பக்கம் போகக்கூடாது என்பதும் அவளது ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்ட தகவல்களே தவிர, அப்படி செல்வதால் தவறு ஒன்றும் இல்லை. களைப்பாக இருப்பாள் என்கிற ஒரே காரணம்தான் இவை எல்லாவற்றின் பின்னணியும்.


இப்போதெல்லாம் சிசேரியன் செய்யப்படுகிற பெண்களையே மருத்துவமனையில் இரண்டாவது, மூன்றாவது நாளே எழுந்து நடக்கச் செய்கிறோம்.அப்போதுதான் அவளுக்கு தன் உடல் பற்றிய பயமும், பதற்றமும் மாறும். காயங்களும் சீக்கிரம் ஆறும்.வீட்டை விட்டு வெளியே செல்கிறபோது உணவு விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


பிரசவித்த பெண்களுக்கு செரிமானக் கோளாறுகள் வரலாம் என்பதால் வெளி உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதும் அவர்களை வெளியே அனுமதிக்காததற்கு ஒரு காரணம். மற்றபடி தாய் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்திலும், ஊட்டம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்கிறதும், தன்னையும் குழந்தையையும் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்கிற பட்சத்திலும் வெளியே சென்று வருவதில் பிரச்னை இல்லை.


சுகப்பிரசவமோ, சிசேரியனோ... எதுவானாலும் பிரசவித்த பெண் உடலளவிலும் மனதளவிலும் மிகுதியான களைப்பை சந்தித்திருப்பாள். பிரசவம் பற்றிய பயமும் பதற்றமும் நீங்கி, அவள் சகஜமான உடல் மற்றும் மனநிலைக்குத் திரும்ப சில நாட்கள் ஆகும். பிரசவமான பெண்ணுக்கு முழு ஓய்வு மட்டுமே அதை சாத்தியப்படுத்தும்.


அந்த ஓய்வு அம்மாவுக்கும் குழந்தைக்குமான பிணைப்பைக் கூட்டவும் காரணமாக அமையும். இத்துடன் பிரசவித்த முதல் சில நாட்களுக்கு குழந்தைக்கும் தாயின் அருகாமை மிக அவசியம். தாயின் வாசனையும் ஸ்பரிசமும் குழந்தைக்கு அதிகமாகத் தேவைப்படும். பசியால் அழும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க தாய் அருகில் இருக்க வேண்டும். இவற்றையும் கருத்தில் கொண்டுதான் 40 நாள் ஓய்வு வலியுறுத்தப்படுகிறது.


தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் பிரசவித்த பெண்ணுக்கு வெளியே செல்ல வேண்டிய தேவை ஏற்படும்போது, குழந்தையை மிக மிகப் பாதுகாப்பான சூழலில் நம்பிக்கையான நபர்களிடம் விட்டுச் செல்ல வேண்டியது முக்கியம். சுகாதாரமான சூழல் வலியுறுத்தப்பட வேண்டும். குழந்தை இருக்கும் சூழலில் புகைப்பிடிப்பவர்களோ, மது அருந்துபவர்களோ இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.’’  

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்