Run World Media: 11/19/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 19, 2018

கல்யாணம் பண்ண இஷ்டமில்லை.. மறுத்த காதலி.. கழுத்தை அறுத்த காதலன்.. தற்கொலைக்கும் முயற்சிகல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை என்று சொன்ன காதலியின் கழுத்தை இளைஞர் கழுத்தாலேயே அறுத்துவிட்டார். அதோடு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவொற்றியூர் சாத்துமா நகரை சேர்ந்தவர் பாரதி. 25 வயதாகும் பாரதி, டீச்சர் டிரெயினிங் முடித்துள்ளார்.

ஆனால் அதற்கான வேலை கிடைக்காமல், புதுவண்ணாரப்பேட்டையில் டூ-வீலர் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது கடைக்கு அடிக்கடி பாலாஜி என்பவர் வந்து போவார்.  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
அவர் அந்த கடையில் தனக்கு பைக் வாங்க வந்தபோதுதான் பாரதிக்கு ரொம்ப நெருக்கமாகி விட்டது. ரெண்டு பேரும் லவ் பண்ணார்கள். ஆனால் வரவர பாலாஜியின் நடவடிக்கைகள் பாரதிக்கு பிடிக்கவே இல்லை.


வீட்டுக்கு சென்றார் 
அதனால் பேசுவதை குறைக்க ஆரம்பித்தார். இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி பலமுறை பாரதியிடம் பேச முயன்றும், அவர் பிடி கொடுத்து பேசவே இல்லை. அதனால் ரெண்டில் ஒன்று கேட்டு விட வேண்டும் என்று நினைத்து நேற்றிரவு பாலாஜி பாரதியின் வீட்டுக்கே சென்றுவிட்டார்.

கழுத்தை அறுத்தார்  
அந்தநேரம் பார்த்து வீட்டில் எல்லோரும் வெளியே போய் இருந்தார்கள். தனியாக இருந்த பாரதியிடம் தகராறு செய்தார். அப்போதும் பாரதி கல்யாணத்துக்கு ஒத்துக்கவே இல்லை. இதனால் பாரதியின் வீட்டு கிச்சனுக்கு போய் கத்தியை எடுத்து வந்து பாரதியின் கழுத்தை அறுத்துவிட்டு ஓடிவிட்டார்.


தீவிர சிகிச்சை 
சிறிது நேரம் கழித்து குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்தால், ரத்த வெள்ளத்தில் இதில் ரத்த வெள்ளத்தில் பாரதி போராடி கொண்டிருப்பதை பார்த்து உடனடியாக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள். அங்கு அவருக்கு தீவிரமான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்கள்.

விஷம் குடித்தார் 
இதனிடையே, வீடு புகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்து தப்பி வந்த பாலாஜி, நேராக ஒயின் ஷாப்புக்கு போனார். சரக்கு வாங்கி அதில் விஷத்தை கலந்து குடித்துவிட்டார். பிறகு நடுரோட்டிலேயே மயங்கி விழுந்தார். இதனை கண்ட திருவொற்றியூர் போலீசார் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கைது நடவடிக்கை 
இப்போது பாரதிக்கு ஸ்டேன்லி அரசு ஆஸ்பத்திரியிலும், பாலாஜிக்கு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை நடந்து கொண்டு இருக்கிறது. மேலும் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவருக்கு உடல்நிலை சரியான பின்பு கைது செய்ய காத்திருக்கிறார்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

ஓடும் பஸ்சில் ஒரு டெலிவரி.. ரபீனாவுக்கு ஆண் குழந்தை.. தாயும் சேயும் நலம்..பஸ் நடுரோட்டில் போய்க் கொண்டிருந்தபோதே அந்த பெண்ணுக்கு டெலிவரி ஆகிவிட்டது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆலமியான். இவரது மனைவி ரபீனா. தங்கள் மாநிலத்தில் வேலை எதுவும் கிடைக்காமல் பிழைப்பு தேடி இங்கே வந்தார்கள். பழனி அருகே ஒரு உள்ள கோழிப்பண்ணையில் ரெண்டு பேரும் வேலை செய்து வந்தார்கள்.

 இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இப்போது ரபீனா 3-வது நிறைமாத கர்ப்பம். இந்நிலையில், ஆலமியான், ரபீனாவையும் 2 குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு, 
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
உறவினர் ஒருவரை பார்த்துவிட்டு பழனிக்கு பஸ்ஸில் ஏறினார். நிறைமாத ரபீனாவை ரொம்ப ஜாக்கிரதையாகத்தான் பஸ்சில் ஏற்றினார்.பிரசவ வலி 
பஸ் தாராபுரம் அருகே குள்ளாய்பாளையம் பக்கம் போய் கொண்டிருந்தது. அப்போது ரபீனாவுக்கு திடீரென பிரசவ வலி வந்துவிட்டது. அதனால் வலி தாங்க முடியாமல் ரபீனா கத்தினார். இதை பார்த்து மற்ற பயணிகளும் ஷாக் ஆனார்கள். நடுவழியில் என்ன செய்வதென்றும் யாருக்குமே தெரியவில்லை.

பெண்கள் உதவி 
ஒரு சில பெண்கள் மட்டும் ரபீனாவுக்கு உதவ வந்தார்கள். மேலும் டிரைவரிடம் சென்று வண்டியை ஓரங்கட்ட சொன்னார்கள். அது அது புறநகர் பகுதி வேறு. பக்கத்தில் கடைகள், வீடுகள், ஆஸ்பத்திரி என எதுவுமே கிடையாது. அதனால் டிரைவரும் பஸ்ஸை ஒரு ஓரமாக நிறுத்தினார்.


திக் திக் நிமிடங்கள் 
உடனே பஸ்சில் இருந்த பயணிகள் எல்லோரும் கீழே இறங்கிவிட்டார்கள். உதவிக்கு வந்த பெண்கள் மட்டும் பஸ்சுக்குளேயே இருந்து ரபீனாவிற்கு உதவினார்கள். கீழே நின்றிருந்த டிரைவர், கண்டக்டர், ஆலமியான் உள்ளிட்ட எல்லா பயணிகளுக்கும் திக் திக் என்றே இருந்தது.

ஆண் குழந்தை 
கொஞ்ச நேரத்தில் குழந்தை சத்தம் கேட்டுவிட்ட பிறகுதான் எல்லோருக்கும் நிம்மதியும் சிரிப்பும் வந்தது. ரபீனாவுக்கு சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. இப்போது பிறந்திருப்பது ஆண் குழந்தை. அதன் பின்னர் எல்லோரும் பஸ்சுக்குள் ஏறி குழந்தையை பார்த்தனர்.


சிகிச்சை டிரைவரும் 
இப்போது வண்டியை தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஓட்டினார். அங்கு ரபீனாவை பத்திரமாக இறக்கிவிட்டு விட்டு அனைவரும் பஸ்சில் திரும்பி சென்றார்கள். பிறகு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரபீனாவிற்கும், குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தாயும் - சேயும் நலம் 
ஓடுகிற பஸ்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்துவிட்டது என்ற செய்தி அந்த பகுதியில் பரவிவிடவும், எல்லோரும் குழந்தையை பார்க்க ஆஸ்பத்திரிக்கு வர ஆரம்பித்துவிட்டனர். இப்போது தாயும் - சேயும் சவுக்கியமாக இருக்கிறார்கள்!

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

மனைவியுடன் சண்டை.. தூக்கில் தொங்கினார் கூலி தொழிலாளிமனைவியிடம் பிரச்சனை ஏற்பட்டதால் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை எர்ணாவூர் பகுதியிலுள்ள சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கர். 45 வயதாகும் சங்கர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.


ஆனால் இவர்களுக்குள் அடிக்கடி, தகராறு இருந்து வந்திருக்கிறது. இதனால் நான்கு வருஷங்களுக்கு முன்னாடியே சண்டை போட்டுக் கொண்டு தனியாக வந்துவிட்டார். கணவனும் மனைவியும் தனித்தனியாகத்தான் வாழ்ந்து வந்தனர்.
 
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சங்கர் கடுமையான மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. விரக்தியின் உச்சத்துக்கு போய்விட்ட சங்கர் 2 நாளுக்கு முன்னாடியே தன் வீட்டில் தூக்குப்போட்டு உயிரிழந்துள்ளார். ஆனால் இந்த விஷயம் வேறு யாருக்குமே தெரியவில்லை.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
2 நாளாக வீடு திறக்காமல் இருக்க அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வந்தது. அதனால் கதவை தட்டலாம் என்று வீட்டுக்கு வந்தால், குப்பென்று நாற்றம் எடுத்தது. அதனால் உடனடியாக எண்ணூர் போலீசுக்கு தகவல் சொன்னார்கள். விரைந்து வந்த போலீசார், சங்கரின் சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது சம்பந்தமான விசாரணையையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


பெண்களே! உங்கள் உடலில் இந்த துர்நாற்றங்கள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள்உடலமைப்பை பொறுத்தவரையில் ஆண்களும், பெண்களும் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு ஏற்படும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளில் பெரும்பாலும் பல வேறுபாடுகள் இருக்கும். பெரும்பாலும் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அவர்களின் சிறுநீரின் நிறத்தை வைத்தே கண்டறிந்துவிடலாம். ஆனால் பெண்களுக்கு அப்படி கண்டறிவது சற்று கடினமான ஒன்று.


பெண்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளை கண்டறிய மிக சுலபமான வழி அவர்கள் உடலில் இருந்து வாசனையாகும்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
ஆம் அவர்கள் உடலில் இருந்து வரும் வாசனைகளை வைத்தே அவர்களுக்கு என்ன ஆரோக்கிய பிரச்சினை இருக்கிறது என்பதை கண்டறிந்து விடலாம். அதன்படி பெண்களின் உடலில் ஏற்படும் என்னென்ன வாசனை எந்தெந்த பிரச்சினைகளை குறிக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


வாய் துர்நாற்றம் 
காலை எழுந்தவுடன் வாயில் துர்நாற்றம் இருப்பது சாதாரணமான ஒன்றுதான். அதேபோல பூண்டு ஆழ்ந்து வெங்காயம் போன்ற உணவுகள் சாப்பிட்ட சில மணி நேரங்களுக்கு வாயில் துர்நாற்றம் ஏற்படுவது சகஜம்தான். ஒருவேளை நீங்கள் பல் துலக்கிய பிறகும், வாயை சுத்தம் செய்த பிறகும் இந்த வாசனை தொடர்ந்தால் உங்களுக்கு வாய் தொடர்பாகவோ அல்லது ஈறுகள் தொடர்பாகவோ சில பிரச்சினைகள் இருக்கிறது என்று அர்த்தம். மேலும் தொண்டை தொற்றுகள், கீழ் சுவாச நோய்கள் மற்றும் நுரையீரல் தொற்றுகளால் கூட இந்த பிரச்சினை ஏற்படலாம்.

இனிப்பான பழ வாசனை 
சிலர் பேசும்போது அவர்கள் வாயில் இருந்து ஒருவித இனிமையான வாசனை வரும். ஆனால் இது நல்லதற்கான அறிகுறி அல்ல. இவ்வாறு வாசனை வருவது உங்களுக்கு சர்க்கரை வியாதி இருப்பதற்கான வலிமையான அறிகுறி ஆகும். மூச்சி விடும்போது அசிட்டோனை போன்ற பழ வாசனை வந்தால் உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்திருப்பதையும், உங்கள் உடல் அதிகமாக உள்ள சர்க்கரையை கீட்டோனாக மாற்ற தொடங்கிவிட்டது என்பதை புரிந்துகொள்ளுங்கள். இந்த சூழ்நிலையில் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டியது அவசியம்.


பாதத்தில் துர்நாற்றம் 
அடிப்படை சுகாதாரமின்மையால் உங்கள் பாதத்தில் துர்நாற்றம் ஏற்படலாம். ஆனால் நன்கு குளித்து பாதத்தை தேய்த்து சுத்தம் செய்தபின் அந்த வாசனை போய்விடும். சுத்தம் செய்தபின்னும் பாதத்தில் துர்நாற்றம் போகாமல் இருந்தால் அது உங்களுக்கு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறி ஆகும். ஈஸ்ட், பூஞ்சை, மில்ட்யூஸ், மற்றும் சில பாக்டீரியாக்கள் சூடான, ஈரமான, இருண்ட சூழல்களில் வாழ விரும்புகின்றவை எனவே அவை உங்கள் காலணிகளை குறிவைக்கும். கடுமையான துர்நாற்றத்துடன் பாதங்களில் அரிப்பு, எரிச்சல் மற்றும் வெடிப்பு போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

பிறப்புறுப்பு துர்நாற்றம் 
பிறப்புறுப்பில் துர்நாற்றம் எப்பொழுது இருக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் அதுவழக்கத்தை இவ்வித அதிகமாகும் போது மருத்துவரை அணுகவேண்டியது அவசியம். உங்கள் யோனி பகுதியில் இருந்து துர்நாற்றம் வந்தால் அது ஈஸ்ட் அல்லது பாலியல் மூலம் பரவக்கூடிய ஒரு தொற்றாக இருக்கலாம். பிறப்புறுப்பில் இருந்து மீன் நாற்றம் வந்தால் அதற்கு காரணம் நிச்சயம் பாக்டீரிய தொற்றுகள்தான். இதற்கு நீங்கள் உபயோகிக்கும் வாசனை திரவியங்கள் மற்றும் சோப்புகள் போன்றவை காரணமாக இருக்கலாம்.


வாயுக்கோளாறு 
அனைவருமே வாயுவை வெளியிடுவார்கள், குறிப்பாக சாப்பிட்ட பின். எனவே அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஆனால் வழக்கத்திற்கு மாறாக அதிகமுறை வாயு வெளியேறினாலோ அல்லது அதிக துர்நாற்றத்துடன் வெளியேறினாலோ நிச்சயம் அது கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைதான். இதற்கு முக்கிய காரணம் உங்கள் குடல் மற்றும் செரிமான மண்டலத்தின் ஒழுங்கற்ற செயல்பாடுகள்தான்.

கை கீழ்ப்பகுதி 
வாயுக்கோளாறை போலவே இந்த இடங்களிலும் துர்நாற்றம் ஏற்படுவது சகஜம்தான். நாள்முழுவதும் உங்கள் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை உங்கள் கைக்கு கீழ் பகுதியில் பாக்டீரியாக்களை தோற்றுவிக்கும். குளித்த சில மணி நேரங்களுக்கு பிறகு அந்த இடத்தில் துர்நாற்றம் ஏற்படுவதால் பயப்பட தேவையில்லை. ஆனால் சிலருக்கு குளித்து முடித்த உடனேயும், வாசனை திரவியம் அடித்தால் கூட அந்தத் துர்நாற்றம் போகாது. அதற்கு காரணம் ப்ரொம்ஹிட்ராஸிஸ். உடலில் உள்ள டெஸ்டிஸ்ட்ரோன் மற்றும் கொழுப்பு அமிலங்கள் பாக்டீரியாவுடன் சேர்ந்து ஏற்படுத்துவதுதான் இந்த துர்நாற்றம். இது கையின் கீழ் பகுதியில் மட்டுமின்றி உடலில் அதிகம் வியர்க்கும் அனைத்து இடங்களிலும் ஏற்படக்கூடும். இதனால் உங்களுக்கு பல தர்மசங்கடங்கள் ஏற்படலாம். எனவே இதற்கு உரிய சிகிச்சைகள் எடுக்கவேண்டியது அவசியம்.


உச்சந்தலையில் துர்நாற்றம் 
ஒவ்வொருவருக்கும் ஒரு தனி வாசனை உள்ளது. குறிப்பாக அவர்கள் உச்சந்தலைக்கும், முடிக்கும் தனித்துவமான வாசனை இருக்கும். எனவே அதனை பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஆனால் ஷாம்பூ உபயோகித்து குளித்த பின்னரும் அந்த வாசனை போகவில்லை என்றால் அதனை பற்றி நிச்சயம் கவலைப்பட்டுதான் ஆகவேண்டும். இந்நிலை தொடர்ந்தால் மருத்துவரை அணுகவேண்டியது அவசியம். இது பாக்டீரிய மற்றும் பூஞ்சை தொற்றால் கூட ஏற்படலாம். இந்நிலைக்கு செபோர்ஹெய்க் டெர்மடிசிஸ் என்று பெயர். இதுவும் சொரியாசிஸ் போன்ற நோய்தான். இதனால் பெரிய பாதிப்புகள் இல்லை என்றாலும் அதிக அரிப்பை ஏற்படுத்தக்கூடும்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

காரின் பின் சீட்டில் ஒரு பெட்டி.. நெளிந்து வளைந்த புழுக்கள்.. உள்ளே பார்த்தால்!காருக்குள் குழந்தையை மறைத்த பெண்

காரை ரிப்பேர் பண்ண வந்த அந்த மெக்கானிக் கார் கதவை திறந்தவுடன் நாத்தம் குடலை புரட்டி கொண்டு வந்தது. அந்த காரில் அப்படி என்ன இருந்தது தெரியுமா?


பிரான்சில் வாழ்ந்து வரும் பெண் ரோசா மரியா. இவருக்கு கணவரும் 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2013-ஆம் ஆண்டு ரோசாவின் கார் ரிப்பேர் ஆகிவிட்டது. அதனால் மெக்கானிக்கை வரவழைத்திருந்தார்.
மெக்கானிக் வந்து கார் கதவை திறந்ததும் நாத்தம் குப்பென்று அடித்தது. சுற்றுமுற்றும் பார்த்தார் மெக்கானிக்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

சீட்டில் எதுவுமே இல்லை. அப்பறம் எங்க இருந்து நாத்தம் வருகிறது என்று காரின் பின்பக்கமாக எட்டி பார்த்தால் ஒரு பெட்டி இருந்தது. அந்த பெட்டியில் பார்த்தால் எக்கச்சக்கமான புழுக்கள் நெளிந்து ஊர்ந்து கொண்டிருந்தன. அந்த புழுக்களுக்கு நடுவில் ஒரு குழந்தை உயிரோடு படுத்து கிடந்தது இருந்தது ஷாக்கில் உறைந்து போய் நின்றார்.
 

போலீசில் புகார்

ஒரு செகண்ட் கூட அங்கே மெக்கானிக்கால் நிற்க முடியவில்லை. புழுக்கள் நிறைந்த இடத்தில் குழந்தையை கொண்டு போய் போட்டதை பார்த்து அலறி அடித்து கொண்டு ஓடினார். நேராக போலீஸ் ஸ்டேஷன்தான் போனார். பீதியுடனேயே எல்லா விஷயத்தையும் சொல்லி முடித்தார்.

மீண்டும் வழக்கு

இது சம்பந்தமான போலீசார் விசாரணை நடத்தியது. ரொம்ப நாள் இந்த கேஸ் கோர்ட்டில் நடந்தது. பிறகு போன வாரம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ரோசாவை கூப்பிட்ட நீதிபதி, "ஏம்மா குழந்தையை தூக்கிட்டு போய் காருக்கு பின்னாடி போட்டிருந்தே" என்று விசாரித்தார்.
 


23 மாதங்கள்

அதற்கு ரோசா, "ஏற்கனவே எனக்கு 3 குழந்தைங்க இருக்காங்க. திரும்பவும் நான் கர்ப்பம் ஆனேன். இது என் புருஷனுக்கு பிடிக்கல. அதனால குழந்தை பிறக்கற வரைக்கும் அவர் கண்ணில படாம இருந்தேன். குழந்தை பிறந்ததும் அதை மறைக்க வைக்க ஆரம்பிச்சுட்டேன். இப்படியே 23 மாதங்களும் காரில்தான் என் குழந்தையை வெச்சிருந்தேன்" என்றார்.

நீதிபதி உத்தரவு

இதைக் கேட்ட நீதிபதி கடும் அதிர்ச்சி அடைந்தார். பிறகு ரோசாவுக்கு 5 வருஷம் கடுங்காவல் தண்டனை அளித்தார். 5 வருஷம் ஜெயில் தண்டனை முடிச்சப்பறம், ரோசா சமூக சேவைகளில் ஈடுபட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
 

உணர்ச்சியே இல்லை

இந்த சம்பவம் என்றோ நடந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு வயது இப்போது 7 ஆகிறது. பெயர் செரினா என்று ரோசாவே வைத்திருக்கிறார். இப்போது செரினா எப்படி இருக்கிறாள் தெரியுமா? எந்த உணர்ச்சியும் இல்லாமல்... உடை எதுவும் இல்லாமல்... முழுக்க முழுக்க பலவீனம் நிறைந்து... எல்லாவற்றிற்கும் மேலாக ஆட்டிஸம் குணத்தோடு காணப்படுகிறாள்.

செரினாவுக்கு சிகிச்சை

காருக்குள்ளேயே மறைத்து மறைத்து சுகாதாரம் உட்பட எதுவுமே இல்லாமல் 23 மாதங்கள் இருந்ததால் செரினா நிலைமை மோசமாகி விட்டது. தற்போது அவளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். செரினாவுக்கு சிகிச்சை நடந்து வருகிறது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsFeatured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்